• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

எனது அருமை நண்பர்களே! கவனமுடன் இருங்கள்!

Ajatashatru

Fire Still Burns!
Posting Maniac
VIP Member
வணக்கம் நண்பர்களே! நான் கடந்த 07-03-2021(ஞாயிற்றுகிழமை) முதல் CHAT வருவதில்லை . வேறு யாரேனும் என் பெயர் பயன்படுத்தினால் அதை நம்ப வேண்டாம் நண்பர்களே! மேலும் யாரேனும் அப்படி பயன்படுத்தினால் அட்மின் அவர்களிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்! :B::)

 
Last edited:

Ajatashatru

Fire Still Burns!
Posting Maniac
VIP Member
Thread Starter
அன்புள்ள நண்பர்களுக்கு!

நான் 07.03.2021 முதல் சாட் சைட்டிற்கு வருவதில்லை. சாட்டில் Dr Ajatashatru mbbs என்ற ஒரு nick நான் தான் ajatashatru என்று கூறிகொண்டு அனைவரையும் தவறாக பேசிவருவதாக என் நண்பர்கள் மூலம் அறிந்தேன். அந்த நபருக்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. எனவே இது போன்ற தவறான நபர்களிடம் கவனமுடன் இருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அட்மின் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் நான் சாட் வருவதாக எந்த எண்ணமும் இதுவரை இல்லை. நண்பர்களே இது போன்ற போலியான நபர்களிடம் ஏமாறாதீர்கள்!

மிக்க நன்றி!
 
Last edited:

Ajatashatru

Fire Still Burns!
Posting Maniac
VIP Member
Thread Starter
"Ajatashatru" - intha id (Registered ID ) thavira vera entha id yum nan use pandrathu ilai and nan guest id use panathila and use panavum maten. :B: Vera yarna en name use pananga na forum la complaint panunga pls.

Beware of Fakes & Frauds!
 
Last edited:

Ajatashatru

Fire Still Burns!
Posting Maniac
VIP Member
Thread Starter
யாரேனும் எனது பெயரை பயன்படுத்தினார்கள் எனில் இரண்டு விஷயங்கள் செய்யுங்கள்.

1. அவன் பேசுவதை அப்படியே SS எடுத்து ஃபாரமில் போடுங்கள்.

2. அவனிடம் பாரமில் உனது DPயை மாற்றி காட்டு என கேளுங்கள்.

Beware of Fakes & Frauds!
 

Ajatashatru

Fire Still Burns!
Posting Maniac
VIP Member
Thread Starter
இங்க சில விஷயங்களை பதிவு செய்ய விரும்புகிறேன்... (Complaints section la irukura en posts ellam padichutu itha padinga, appo than ellam theliva puriyum)

எனக்கு 06.03.2021 அன்று சாட்டில் You are muted forever வந்தது. மறு நாள் காலை 7.03.2021 அன்று அது சரியாகி மறுபடியும் 8 மணியளவில் மீண்டும் You are muted forever வந்தது. நான் 7.3.2021 முதல் 15 நாட்கள் சாட் சைட்டில் நுழைய முடியவில்லை. அந்த தருணத்தில் dr ajatashatru mbbs மற்றும் dr meesai padma போன்ற போலியான IDக்கள் சாட்டில் வந்து என் நற்பெயரை கலங்கப்படுத்தி சென்றுள்ளனர். நான் Muted குறித்து 6.03.2021 அன்று பாரமில் பதிவிட்டேன். மறு நாள் காலை (07.03.2021 அந்த புகார் Visible ஆனது. இதை நிச்சயம் அந்த போலி பார்த்திருக்க வேண்டும் ( அவன் பாரம் பயனாளர் அல்லது பாரமில் உள்ள ஒருவர் அவனுக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும்). மேலும் எனது நண்பர்கள் எனக்கு அந்த போலிகளின் நடவடிக்கையை SS எடுத்து அனுப்பியதால் மட்டுமே என்னால் பாரமில் புகார் செய்ய முடிந்தது. உடனடியாக நடவடிக்கை எடுத்த அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி :). நீங்கள் முதல் தடவை போலியான நபர் வந்த பொழுதே அதை தட்டி கேட்டிருந்தால் அல்லது அட்மின் / ஃபாரமில் புகார் செய்திருந்தால் அதை தடுத்திருக்கலாம்.

19.03.2021 அன்று முதல் தான் என்னால் லாகின் செய்ய முடிந்தது.

முதலில் சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.

1. ஒருவன் உங்களிடம் தவறாக பேசினால் பிளாக் செய்ய வேண்டும் அல்லது அட்மின் அவர்களிடம் புகார் அல்லது அதை பற்றி Forum இல் தகவல் தெரிவித்தீர்களா?

2. ஒருவன் இதுவரை தான் பெற்ற நற்பெயரை கலங்கப்படுத்தி கொள்வானா?

3. நான் எப்போதாவது Guest ID யில் வந்திருக்கிறேனா?


4. போலியான நபர் சாட்டில் வருகிறான் என நான் அறிந்த உடன் பாரமில் நான் எச்சரிக்கை செய்தேன். அது 60க்கும் அதிகமான Views பெற்றுள்ளது. பிறகும் ஒருவர் கூட சாட்டில் மற்றவர்களை உஷார் படுத்தாதது ஏன்?

5. நான் சாட்டிற்கு வந்த போதெல்லம் என் ID தவிர வேறு ID களில் யார் என் பெயர் பயன்படுத்தி வந்தாலும் பிளாக் செய்யுங்கள் என கூறி உள்ளேன். அதை பின்பற்றாதது ஏன்?

6. போலியிடம் நீங்கள் ஏன் உன் ID Ajatashatru இருக்கும்போது வேறு ID களில் வருகிறாய் என கேட்டீர்களா?

7. நான் இதுவரை தங்கள் ஒருவரிடமேனும் தங்கள் சொந்த பெயரையாவது கேட்டிருக்கிறேனா?

8. ஒருவனுக்கு பிரச்சனை எனில் ஒரு குறிப்பிட்ட நபரிடம் மட்டுமே பிரச்சனை செய்வான். வந்த போலி ஆசாமி அனைவரிடமும் பிரச்சனைக்கு சென்றுள்ளான் என ஒரு VIP மூலம் பின்னர் அறிந்தேன். அதை ஏன் அனைவரும் யோசிக்கவில்லை? ( அவனுடைய நோக்கம் எனது நற்பெயரை எல்லோரிடமும் சிதைப்பது)

9. இப்பொழுது நான் சாட்டிற்கு வந்தால் என்னிடம் நீங்கள் தான் Dr ajata வா ? என்று கேட்கிறீர்கள் இந்த கேள்வியை சந்தேகம் வந்த உடனே அட்மின் அவர்களிடம் புகாராக / பாரமில் புகாராக தெரிவிக்காதது ஏன்?

10. அந்த போலி ஆசாமி பல நபர்களிடம் தவறாக பேசியுள்ளான் என இப்பொழுது அறிந்தேன். ஏன் அதில் ஒருவர் கூட புகார் அளிக்கவில்லை?

11. புகழ் பெற்ற எனது ID Ajatashatru இருக்கும்போது நான் ஏன் அந்த ID யை மாற்றி வேறு உபயோகபடுத்த வேண்டும்?

12. எனக்கு பிடிக்கவில்லை எனில் பிளாக் செய்வேன். அந்த வழக்கத்தை அந்த போலி ஆசாமி பின்பற்றினானா?


உங்களுடைய மனசாட்சியை கேளுங்கள். நான் இதுவரை உங்களிடம் எப்படி நடந்துகொண்டேன் என அது சொல்லும் உங்களிடம்.

நான் auto mute ல் சிக்கிக்கொண்டதால் என்னால் சாட்டில் வந்து தங்களை உஷார்படுத்த முடியவில்லை. இருப்பினும் பாரம் வாயிலாக தங்களை எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவித்தேன். நீங்கள் அனைவரும் சற்று யோசித்திருந்தால் அந்த போலி நபரை துரத்தி இருக்கலாம். நான் இங்கு அனைவரிடமும் நன்றாக பழகுகிறேன், அதை பிடிக்காத ஒருவன் இதை செய்திருக்கிறான். மேலும் அவன் Regular User தான். பல நாட்களாக நான் பேசுவதை எல்லாம் கூர்ந்து கவனித்த நபர் என்று தெளிவாகிறது.

தயவு செய்து தேவையற்ற புரளிகளை கிளப்பாதீர்கள். எனக்கு எற்பட்ட நிலை நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். இந்த பதிவு தங்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான்!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

"எத்தருணத்திலும் என்னை கைவிடாது என் மீது அன்பை செலுத்தி வரும் என் சில இனிய நண்பர்களுக்கு இந்த நேரத்தில் எனது பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்" :B::L:

இந்த விளக்கம் அனைவருக்கும் போதும் என கருதுகிறேன்.
 
Last edited:
Top