• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

மாற்றம் !!!

Mathangi

Active Member
எனக்குள் ஏதேதோ மாற்றம்
உன்னை சந்தித்த கணம் முதல் இன்று வரை

உன்னை பார்த்தபோது
என்னுள் ஒரு இனம் புரியா, இதய துடிப்பு
அது பயமும் இல்லை, பரவசமும் இல்லை
ஆனால், அன்று நான் கண்டேன்
எனக்குள் ஒரு புதியதாய் மாற்றம் !!


முதல் முதலாய்
உன் குரல் கேட்ட போது
உன் மொழியில் நான் உறைந்து போனேன்
அன்றும் நான் கண்டேன் எனக்குள் ஒரு மாற்றம் !!

உன் நினைவை நினைத்த போதெல்லாம்
எனக்குள் என்றும் ஒரு மாற்றமே !!

ஆனால், மாற்றம் ஒன்றை தவிர
உன்னோடும், உன் நினைவோடும்
எனக்கு அதிகம் கிடைத்த மாற்றம்
நீ எனக்கு கொடுத்த ஏமாற்றமே......:(
 
Top