• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

ரம்பம் போட்டு ரொம்ப நாளாச்சு

Luv

Member
Senior Member
ரம்பம் போட்டு ரொம்ப நாளாச்சு
======================
சார் எங்க கிளம்பிட்டீங்க

பசங்களுக்கு மொட்டை அடிக்க......

எங்க ?!

வேறு எங்க தலையிலதான்!!

கடிக்காதீங்க. எந்த ஊர்ல?

மூத்தவன் திருப்பதிக்கு பழனிலையும், இளையவன் பழனிக்கு திருப்பதியிலும்,

ஏன் சார் இரண்டு பேருக்கு ஒரே இடத்துல அடிக்ககூடாதா.

அதெப்படி சார் முடியும் இவன் தல வேற, அவன் தல வேற

இல்லை சார்!
நான் சொன்னது ஒரே ஊர்ல அடிக்கக் கூடாதான்னுதான்

நான் பழனியில் வேலை பார்த்தப்போ திருப்பதி பிறந்தான்.
திருப்பதியில் வேலை பார்த்தபோ பழனி பிறந்தான்.
திருப்பதிக்கு திருப்பதின்னு பேர் வச்சதால, திருப்பதிக்கு திருப்பதில மொட்டை அடிக்க முடியுமா.

திருப்பதி பழனில பொறந்ததால திருப்பதிக்கு பழனிலதான் மொட்டை போடறோம்.

அதேபோல, பழனிக்கு பழனி பேர் வச்சதால பழனிக்கு பழனில மொட்டை அடிக்கமுடியுமா?!

பழனி திருப்பதில பொறந்ததால, பழனிக்கு திருப்பதியில் மொட்டை போரடறோம்.

ஆனால் இரண்டு வேலையையும் ஒரே நேரத்துல முடிச்சுடறோம்.

திருப்பதி போய் பழனிக்கு மொட்டை போட்டுட்டு, அங்கிருந்து பழனி வந்து திருப்பதிக்கு மொட்டை போட்டுட்டு வந்துடுவோம்.

ஆனா இப்போ ஒரு சிலவருஷமா.........................

என்ன சார் என்ன ஆச்சு.

இல்லை ஒருத்தர் சொன்னாரு.
ஏன் சாமிக்குள்ள வித்தியாசம் பாக்கறீங்கன்னு?

அதனால ஒரு வருஷம் திருப்பதிக்கு திருப்பதியிலும், பழனிக்கு பழனியிலும், இன்னொரு வருஷம் திருப்பதிக்கு பழனியிலும், பழனிக்கு திருப்பதியிலும், மொட்டை போடறோம்.

ஆனாலும் தனித்தனியா பண்றதில்ல.

திருப்பதிக்குப் போய் திருப்பதிக்கு மொட்டை போட்டு விட்டு, அங்கிருந்து பழனி வந்து பழனிக்கு மொட்டை போட்டுவிட்டு வந்துவிடுவோம்.

இந்த தடவை திருப்பதியில் பழனிக்கும், பழனியில் திருப்பதிக்கும், மொட்டை போட வேண்டிய முறை.

அப்போ நான் வரேன் சார்.............

என்ன கிளம்பிடீங்க

மொட்டை போடத்தான்

யாருக்கு

எனக்குத்தான்

எங்க

தலையிலதான்

போங்க சார் ......
என்கிட்டேயே திருப்பறீங்க எந்த ஊர்?

பக்கம்தான், வடபழனில
 
Top