• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

General Health Health tips

JBJB

Well-Known Member
Posting Maniac
Forum Moderator
Thread Starter
திடீர் மரணம் நிகழ்வது ஏன் ? – 5 முக்கிய காரணங்கள்


1.சீரற்ற இதயத் துடிப்பு :

பெரும்பாலான இளையவர்களிடம் ஏற்படும் திடீர் மரணத்திற்கு சீரற்ற இதயத் துடிப்பே காரணம்.அதிலும் வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் என்னும் தீவிர வேகமான ஒழுங்கற்ற இதயத் துடிப்பே முக்கியமாக காரணம்.

சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய சில காரணங்கள்

  • தய தசை நோய்
    • மரபுவழி குறைபாடுகள் : eg Hypertrophic Cardiomyopathy, இதய வால்வு நோய்கள்
    • நோய் குறைபாடுகளால் ஏற்படும் இதய தசை நோய்கள் : eg. Myocarditis(இதய தசை அழற்சி) Dialted Cardiomayopathy, இதய வால்வு நோய்கள்
1608237081551.png


2.மாரடைப்பு :

இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது இதயத்தசை இறப்பு (Myocardial infarction) ஏற்படுகிறது.





நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், படபடப்பு , வியர்வை , தலைசுற்று போன்ற அறிகுறிகள் ஏற்படும்

இதற்க்கு இடர்க்காரணிகள்

  • வயது >45
  • இரத்தழுத்தம்
  • சக்கரைநோய்
  • புகைபிடித்தல்
    • அதிகரத்தகொழுப்பு
    • குடும்பத்தில் மாரடைப்பு
3.மண்டையோட்டுக்குள்ளான நோய்கள்:

  • ரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்பு- (ISCHAEMIC STROKE) இது தான் அரிதி பெரும்பான்மை பேருக்கு ஏற்படும்.
  • ரத்தக்குழாய்களில் ஏற்படும் கசிவு – (HAEMORRHAGIC STROKE) . மேற்சொன்ன இரண்டில் இது தான் அதிக ஆபத்தானது eg . Subarrachoid hemorrage


திடீர் தலை வலி மற்றும் பக்க வாதத்திற்கான அறிகுறிகள்


4.நுரையீரல் தமனி அடைப்பு:

இது இதயத்தில் இருந்து , நுரையீரலுக்கு செல்லும் தமனியில் ஏற்படும் அடைப்பு.





இதற்க்கு இடர்க்காரணிகள்

  • குருதியுறைமை மரபணுக் கோளாறுகள்
  • நீண்ட நேரம் அசையாது இருத்தல்
  • அறுவைச் சிகிச்சை,
  • கருத்தரிப்பு
  • கருத்தடைச் சிகிச்சை
  • புற்றுநோய்

மேற்கூறிய இடர்க்காரணிகளுடன் திடீர் நெஞ்சுவலி , மூச்சுத்திணறல் , படபடப்பு , போன்ற அறிகுறிகள் நுரையீரல் தமனி அடைப்பிற்கான அறிகுறிகளாகும்

5.Aortic பெருநாடி பிளவு

நெஞ்சு பகுதியில் அல்லது வயுற்று பகுதியில் பெருநாடி பிளவு ஏற்படலாம்.

திடீர் கிழிவது போன்ற நெஞ்சுவலி அல்லது முதுகுவலி அல்லது வயிற்று வலி மற்றும் மயக்கம் அல்லது தலை சுற்று போன்ற அறிகுறிகள் ஏற்படும்





எல்லாவித திடீர் மரணத்தையும், முன்கூட்டியே தடுக்க முடியாது. வாழ்க்கையின் தவிர்க்க முடியாத விதி என்று கூட இதைக் கருதி கொள்ளலாம். எனினும்,
  • திடீர் மயக்கம்,
  • நாடித்துடிப்பு அதிகரித்து வியர்த்தல்,
  • மூச்சுத் திணறலை தொடர்ந்து மயக்கம்
  • நெஞ்சுவலி
ஆகியவற்றை கவனிக்க வேண்டும். இதே போன்று குடும்பத்தில் மற்ற யாருக்காவது அறிகுறிகள் இருந்து அவர்கள் திடீர் மரணம் அடைந்துள்ளனரா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.அறிகுறிகளை அலச்சியம் செய்யாது மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
மயோகார்டிடிஸ், இ.சி.ஜி.,யில் மாறுபாடு, கார்டியோமயோபதி போன்றவற்றுக்கு சிகிச்சை முறைகள் உள்ளன. பிறப்பிலேயே உள்ள சில வகையான இதயக்கோளாறுகளுக்கு, அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன.
ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் மருத்துவர் ஆலோசனையுடன் ECG, ECHO போன்ற பரிசோதனைகளை செய்தது பார்ப்பது நல்லது.
 

JBJB

Well-Known Member
Posting Maniac
Forum Moderator
Thread Starter

வீட்டில் இருக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள்​

 
Top