• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Hitler "Mein Kampf "

1623352423169.png

"என்னதான் இருந்தாலும் ஹிட்லர் பீரியட்ல வேலையில்லாத் திண்டாட்டம் இல்ல, drainage பக்காவா இருந்துது, roadways எல்லாம் செம க்ளீன், நீங்க வேணா ஒண்ணு பண்ணுங்க. "Mein Kampf" படிச்சிப்பாருங்க. உங்களுக்கே புரியும்..." என்று சொல்லும் மடத் தாயோளிகளிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருங்கள்.
"என்னதான் இருந்தாலும்" என்றால்... "எவ்ளோ யூதர்களைக் கொன்றிருந்தாலும்" என்று மட்டுமே அர்த்தம்.
And that "Mein Kampf" is a Crap, Full of Non-Sense.
மதவெறி,சாதிவெறி,இனவெறி ஹிட்லர் வாழ்க்கை போன்று ஒரு நாள் அழியும்.
தனது 56 வயது பிறந்த தினத்தில் காலை எழுந்த போதே தெரிந்து விட்டது ஹிட்லருக்கு அடுத்த பிறந்த நாளுக்கு தான் இருக்க போவதில்லை.
பிறந்த நாளை யாரும் கொண்டாடும் மன நிலையில் இல்லை.மகிழ்ச்சி இருக்க வேண்டிய நாளில் கவலை வந்து கவ்விக் கொண்டது.
எப்போதும் ஒலிக்கும் மேள தாளங்கள் இன்றி மாளிகை மயான அமைதியாக இருந்தது.அதுவரை தேசிய திருவிழாவாக கொண்டாடப்பட்ட நாள் களையிழந்து காணப்பட்டது.
அறைக்கதவை திறந்து வெளியே வரும் போது ஹிட்லர் எந்த மனநிலையில் இருப்பார்?
சிரிப்பாரா? கோபத்தில் வெடிப்பாரா?
குமுறி அழுவாரா? அல்லது எதையும் காட்டிக்கொள்ளாமல் வீர உரை ஆற்றுவாரா? தெரியவில்லை.
மரியாதைக்கு கைக்குலுக்கி விட்டு அப்படியே பின்னால் நகர்ந்து ஒளிந்து கொள்ளலாம் என்பதே வெளியே நின்ற அதிகாரிகளின் மனநிலையாக இருந்தது.
பல ராணுவ அதிகாரிகள், அமைச்சர்களும் தங்களது மனைவி, மக்களையும், நெருங்கிய குடும்ப உறவுகளையும் பாதுகாப்பாக தொலைதூரங்களுக்கு அனுப்பி விட்டார்கள்.முடிந்தவரை சொத்துக்களை விற்று,பணத்தை மூட்டை கட்டி அவர்களோடு கொடுத்து அனுப்பி விட்டார்கள்.
உயிரோடு இருந்தால் அவர்களோடு சேர்ந்து கொள்வது இல்லையேல் மரணத்தை தழுவுவது.
சோவியத் செஞ்சேனை புயலை போல வந்து கொண்டிருக்கிறது.
தடுக்க வழிதெரியாமல் தடுமாறி கொண்டிருந்தது நாஜி படை.எல்லாமே முடிந்து விட்டது என்ற முடிவுக்கு ஒவ்வொருவரும் வந்து விட்டார்கள்.இனி ஒன்றும் செய்வதற்கில்லை.சுற்றிய பம்பரம் சுழன்று விழும் நேரம்.
அதிபரின் மாளிகை கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. மாளிகையில் நூற்றுக்கணக்கான ஆடம்பர அறைகள் இருக்கின்றன.
அதில் தங்கி பிறந்த நாளை அனுபவிக்க முடியவில்லை.
அத்தனையும் விட்டுவிட்டு தரை தளத்தில் உள்ள பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துவிட்டார்.
"பெர்லினை விட்டு வெளியேறி விடலாம்" இது அதிகாரிகளின் யோசனை."எங்கே போவது" இது
ஹிட்லரின் மனதில் எழுந்த கேள்வி.
ஆனால் வெளியில் சொல்ல முடியவில்லை.ஒடி ஒளிந்து கொள்ள இடமில்லை.நண்பன் முசோலினியும் இல்லை.உலகையே ஆட்டி படைத்த ஹிட்லருக்கு ஒளிந்து கொள்ள இடமில்லை.அறைக்கதவு வேகமாக தட்டப்படுகிறது.கதவை தட்டியவர் ராணுவ ஜெனரல் பர்க்டாவ். திறந்ததும் கேட்ட கேள்வி
" என்ன விஷயம்?"
"கெட்ட செய்தி பிரசிடென்ட் ,
அவர்கள் அறுபது மைல் நெருக்கத்தில் வந்து விட்டார்கள்.நமது வீரர்கள் சிதறிக் கொண்டிருக்கிறார்கள் "
தந்தி வாசகம் போல சொன்னார். அதுவரை உட்கார்ந்திருந்த ஹிட்லர் எழுந்து விட்டார். பதட்டத்தை மறைக்க தனது அல்சேஷன் நாயுடன் சிறிது நேரம் விளையாடினார்.
மீண்டும் ஒரு முறை தேநீர் குடித்தார்.பதட்டம் குறையவில்லை.
ஹிட்லரின் தனிச்செயலாளர் மருந்து பாட்டிலை கொண்டு வந்தார்.
கொகேய்ன் என்கிற போதைப்பொருள் அடங்கிய கண்மருந்து.இரண்டு கண்களிலும் இரண்டு சொட்டு.பதட்டத்தை தணிக்க உதவியது.சில நிமிடங்கள் மௌனம்.
"வேறு வழியே இல்லையா?" "வருகிறவர்களை தடுக்க முடியாதா"
அனைவரும் பேசாமல் தலை குனிந்து கொண்டனர்.
நாலாப்புறமும் பெர்லின் சூழப்பட்டு விட்டது.வருகிற சோவியத் செஞ்சேனை வெற்றியோடு முன்னேறிச் கொண்டிருக்கிறது. எப்படி ஒரு காலத்தில் ஜெர்மானிய படைகள் முன்னேறியதோ அதைவிட பலமடங்கு பலமாக , வேகமாக வந்து கொண்டிருந்தது செஞ்சேனை. நீண்ட அமைதிக்கு பிறகு அதிகாரிகள் விடை பெற்றுக் கொண்டார்கள்.அவரது உதவியாளர் டிராவல் ஜல் உள்ளே வந்த போது "எனக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை போய்விட்டது பெண்ணே"
என்று வருத்தத்தோடு சொன்னார் ஹிட்லர்.அதிர்ந்து போனார் ஜல்.
பேசுவது ஹிட்லரா? நம்ப முடியவில்லை.ஆனால் பேசியது ஹிட்லர் தான்.வெற்றியை மட்டுமே
ருசித்த ஹிட்லரின் வாழ்க்கையில் முதல் முறையாக தோல்வியை எதிர் நோக்கி காத்திருக்கும் தருணம்.
அது பேச்சிலும் வெளிப்பட்டது.
மறுநாள் ஹிட்லர் எழுந்த போது காலை 9.30.பெர்லின் மீது தாக்குதல் துவங்கி விட்டது.செஞ்சேனையின் ஒயாத பீரங்கி முழக்கம் பக்கத்திலேதான் கேட்கிறது.உடலின் ஒவ்வொரு பாகமும் ஹிட்லருக்கு அச்சத்தில் துடித்துக்
கொண்டிருக்கிறது.கைவிரல்கள் நடுங்க துவங்கி விட்டது.அடிக்கடி இரண்டு கைகளையும் பிணைத்துக் கொண்டார்.தண்ணீர் குடித்தார். முகத்தை திரும்ப திரும்ப துடைத்துக் கொண்டார்.எந்த கணமும் தாம் உடைந்து விடுவோம் என்று தோன்றியது. கண்ணீர் சிந்தாததுதான் பாக்கி. அதுவும் வந்துவிட்டால் கதை முடிந்தது.
ஏப்ரல் 30,1945...
இனி தப்பிக்க வழியில்லை.எல்லாம் முடிந்து விட்டது.பெர்லினின் வடக்கு, தெற்கு எல்லைகள் சோவியத் வசமாகின.எதிர்க்க எவருமில்லை.
இடைவிடாமல் பீரங்கி முழங்கி கொண்டிருக்கிறது.பாதாள அறையின் கதவுகள் இழுத்து சாத்தப்பட்டன. ரகசிய கோப்புகள் அனைத்தும் அழிக்க உத்திரவிட்டார் ஹிட்லர்.ஒரு துண்டு காகிதம் கூட எதிரிகள் கையில் கிடைக்க கூடாது.
மறைக்க வேண்டிய அனைத்தும் மறைக்கப்பட்டன. புகைப்படங்கள், சுற்றறிக்கைகள்,ரகசிய தகவல்கள், குறிப்பேடுகள்,டைரிகள்,
ஒலிநாடாக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
கடைசி ஆசையாக தனது காதலி ஈவா ப்ரானை மணந்து கொள்ள விரும்பினார் ஹிட்லர்.யாரும் அதிர்ச்சியடையவில்லை. சில நிமிடங்களில் திருமணம் முடிந்தது.
அறைக்குள் சென்ற ஹிட்லர் தனது காதல் மனைவியிடம் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு வெளியே கூட்டி வந்தார்.
"நாம் தோற்றுவிட்டோமா?"
எங்கே டாக்டர்? எனது நாயை மறக்காமல் கொன்று விடுங்கள்.
"வா ஈவா ஓய்வெடுக்க போகலாம்"
அறைக்குள் போய்விட்டார்.
எங்கும் அமைதி...
ஒரே குண்டு வெடித்த சத்தம்...
ஈவாவுக்கு விஷம் கொடுத்துவிட்டு தன்னை சுட்டுக் கொண்டார்...
உலக யுத்தத்தின் சூத்திரதாரி...
இனவெறியும்...
ரத்தவேட்கையும்...
கொண்ட மனிதன் கடைசியில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டான்.

 
Top