T
! The Reader !
Guest


இது வாய்ச் சவடால் மேக் இன் இந்தியா அல்ல...
இந்தியாவின் உண்மையான முயற்சி...
பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாக்கவும்.... பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பொருட்களை வடிவமைத்து உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்கவும் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளின் பலனாக... தற்போது இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட மடிக்கணிணிகள் வெற்றிகரமாக பொதுமக்களிடையே விற்பனைக்கு வந்துள்ளது...
முற்றிலும் இந்திய நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள
இந்தியாவின் முதல் மடிக் கணிணிகளை, கேரள அரசு பொதுத் துறை நிறுவனங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்து சாத்தித்துக் காட்டியுள்ளது...
கேரளா அரசுக்கு சொந்தமான கெல்ட்ரான் நிறுவனம், மாணவர்கள், வியாபாரிகள், வியாபார ரீதியாக நீண்ட பயணங்கள் செய்யும் பயணிகள் ஆகியோரைக் கணக்கில் கொண்டும் பொது பயன்பாடுகளுக்கு ஏற்றதாகவும் மொத்தம் 7 மாடல்களில் மடிக்கணிணிகளை உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டது...
அதன்படி இந்த வருடத் துவக்கத்தில் மடிக்கணிணிகளை சந்தைக்கு கொண்டு வருவது என திட்டமிட்டு பணிகள் நடந்து வந்தன...
ஆனால் கொரோனா நெருக்கடியால் சிறிது தாமதமாக...சிலநாட்களுக்கு முன்னர் விற்பனைக்காக சந்தையில் வெளியிடப் பட்டது...
தற்போது 3 மாடல்களை மட்டும் விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது... இன்னும் 4 மாடல்களை வெகு விரைவில் சந்தைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன....
கேரள மாநிலத்திற்குள் மூன்று நாட்களிலும் வெளிமாநிலங்களில் ஏழு நாட்களிலும் இணையதளம் மூலம் வாங்கும் விதத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது... அமேசான் இணையதளம் கோகோனிக்ஸ் என்ற பெயரில் உள்ள இந்த மடிக்கணிணிகளை தனது இணையதளம் விற்பனை செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்தி உள்ளது...
இதுவரை இந்த மடிக்கணிணிகளை வாங்கியவர்கள் நேர்மறையான கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள்... எனவே கோகோனிக்ஸ் மடிக்கணிணிகள் அதிக அளவு விற்பனையாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது ...