• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Mask

Visitor

New Member
1621454352256.png

கடந்த ஆண்டு கொரோனா பரவுகிறது என்ற செய்தி உலகில் வெளியானவுடன், அதைப்பற்றி படித்தேன். பெரும் அழிவை நோக்கி உலகம் பயணிக்கப் போகிறது என்று தெரிந்து, முன்னெச்சரிக்கையாக இருங்கள் என்று இந்தப்படம் போட்டு புரொபைல் பிக்சர் வைத்தேன்.

என் முகநூல் பக்கத்தில் இந்தப் படம் வைத்ததற்காக, அதை நீக்குங்கள் என்று சொல்லி நண்பர்கள் பலர் பின்னூட்டம் போட்டார்கள். நான் நீக்கவில்லை. அதன் பிறகு மாஸ்க் அணிய வேண்டும் என்று இந்தியாவில் செய்தி சொன்னார்கள். என் வீட்டில் ஒரு டாக்டர் இருப்பதால் மாஸ்க் என்னிடம் இருந்தது.

அப்போது முதல் நாளது தேதிவரை நான் மாஸ்க்கை கழட்டவில்லை. கொரோனா முடிந்துவிட்டது என்று இந்திய ஒன்றிய அரசு கருதிய போதும் நான் கழட்டவில்லை.

தேர்தல் பணிகளில் கூட மாஸ்க் அணிந்திருந்தேன். இதை எதுக்கு சார் சும்மா போட்டுக்கிட்டு இருக்கீங்கன்னு என்னிடம் கேட்டவர்கள் பலர் உண்டு. இவை எல்லாவற்றிற்கும் கொரோனா குறித்த உலக நகர்வுகளை தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்ததால் தான்.

என் ஆயுள் இறுதிவரை இதை அணிவது என்றே முடிவு செய்துள்ளேன். இது அணிந்த பிறகு இரு சக்கர வாகனத்தில் சென்று வரும் போது ஏற்படும் தும்மல் எனக்கு வருவதில்லை. டஸ்ட் அலர்ஜி ஏற்படவில்லை.
நண்பர்களும் தொடர்ந்து உபயோகப்படுத்துங்கள். கொரோனாவை ஒழித்துவிட முடியாது. பெருமளவு குறைத்தாலும் எங்காவது அந்த நோயும் இனி இருந்து கொண்டே இருக்கும்.

ஏகாதிபத்தியமும், பெரு முதலாளித்துவம், கார்ப்ரேட்களும் தங்களின் கொள்ளை லாபவெறிக்காக இயற்கையை சேதப்படுத்தியதால், புவி வெப்ப மயமாக மாறியது. இதனால் துருவப் பகுதிகளில் உறைபனி உருகி கடல்மட்டம் கூடுகிறது.

உறைபனியில் உறங்கிக் கிடந்த கோடிக்கணக்கான ஆண்டு வைரஸ்கள் வெளியேறுகிறது. இனி வைரஸ்கள் படையெடுக்கும் காலம் தான். வைரஸ்களுக்கு ஏழை-பணக்காரன் வித்தியாசம் இல்லை. இப்போது உருவான கொரோனாவும் கூட, சீனாவின் வூஹான் மாநிலத்தில் கடலுக்குச் சென்று வந்த மீனவத் தொழிலாளி மூலம் தான் முதலில் வந்தது.

இப்போதும் அபாயத்தை நாம் நெருங்கிவிடவில்லை.

இதை நிறுத்த வேண்டுமானால் ஒன்று தான் வாய்ப்பு. இயற்கை எல்லாருக்கும் பொதுவாகப் படைக்கப்பட்டது தான். அதை சமமாக பங்கிடும் போது ஆபத்து ஏற்படாது. பண வெறியால் சில தனிநபர்கள் அதை தனதாக்கும் போது தான் இயற்கை சீரழிகிறது.

அதற்கு எதிரான போராட்டங்கள் உக்கிரமாக தொடங்கப்பட வேண்டும்.

எந்தக் கடவுளும் இதிலிருந்து எவரையும் காப்பாற்றாது. கடவுள் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தும் வீணர்கள் கூட்டம் இதை ஏற்காது. அது கொள்ளை அடிப்பவர்களோடு கூட்டுச் சேர்ந்து அனைவரையும் கொல்லும்.
ஒன்று மட்டும் நிச்சயம்.

இது தொடர்ந்தால் வைரஸ்கள் உலக மனிதர்களைக் அழிப்பதை எவரும் தடுக்க முடியாது. முதலாளித்துவம் என்பது ஏமாற்றுப் பிழைப்பு. தடுப்பூசிகள் தற்காலிகம் தான். சாவுகளைத் தடுக்கும் ஒரே வழி எதிலும் சமத்துவம் தான்.

முடியவே முடியாது என்கிறார்களா?
பிரச்சனையில்லை.
எல்லோரும் அழிந்து போவோம்.
பணவெறியர்கள் கடைசியாக வைரஸ்களை உண்பார்கள்.
முக கவசம் அணியுங்கள்.
வீட்டில் இருங்கள்.
தனி மனித இடைவெளியைக் கடைபிடியுங்கள்.
சமூக இடைவெளி என்ற சொல்லை உச்சரிக்காதீர்கள்.
சமூகம் ஏற்கனவே ஏராளமான இடைவெளியுடன் தான் இருக்கிறது. இயங்குகிறது.

உங்களிடம் பணம் இருக்கலாம்.

ஆனால் மருத்துவமனைகளில் இடம் இல்லை.
 
Argus

Well-Known Member
View attachment 4458

:(
 
Visitor

New Member
Thread Starter
1623351596631.png

*டெல்லியை விட முன்று மடங்கு பெரிதான, அண்டார்டிக்காவின் ரோனி என்ற பனிப்பாறை, புவி வெப்பமயமாதல் காரணமாக இரண்டாக உடைந்தது.
*அதானி ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரர் ஆனார்.
இந்த இரண்டு செய்தியும் தனித்தனி செய்தியல்ல. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளது.
உலக அளவில் வெப்ப நிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
இதற்கு காரணம் இயற்கையை நாசம் செய்யும் பெரு முதலாளித்துவ மற்றும் கார்ப்ரேட் நிதிமூலதனக் குவியலும் அதன் லாபவெறியும் தான்.
புவி வெப்பமயமாதலுக்கு ஐரோப்பா 32% மும், அமெரிக்கா 27% மும், ஆசிய நாடுகள் 12 % மும், இந்தியா 4%. மும் காரணம். இந்தியா இதில் குறைவாக இருந்தாலும், அமெரிக்க, ஐரோப்பிய நிதிமூலதனத்தின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுள்ளது. இதுவே உலகமயக் கொள்கை அமலான 30 ஆண்டுகளில் நடந்துள்ளது.
நாம் எல்லோரும் வீடுகட்ட, ஊரில் உள்ள ஆறுகளில் மணல் அள்ளும் ஒரே ஒரு மாட்டுவண்டிக்காரர் மூலம், மணல் எடுத்த போது ஆறு கொடுத்துக் கொண்டே இருந்தது. ஆறு தன் இயல்பை இழக்கவில்லை. ஆறு மணலை அள்ளி வியாபாரம் செய்ய, தனி ரௌடிகள் எழுந்த போது ஆறும் இயல்பை இழந்தது. மணல் எனும் மேலாடையையும் இழந்தது.
இதுபோலத்தான் புவியை வெப்பமயமாக்கிய ஏற்பாடும்.
அதனால் சர்வதேச அளவில் பல்வேறு இடங்களில் உள்ள பனிப்பாறைகள் உடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக வானிலை மாற்றம் காரணமாக துருவப் பகுதிகளில் வெப்ப நிலை வேகமாக உயர்ந்து வருகிறது.
அதன்படி அண்டார்டிகாவில் வழக்கத்தைவிட வெப்ப நிலை வேகமாக உயர்ந்து வருகிறது. அதன் விளைவாக இன்று அண்டார்டிகாவில் பனி பாறை ஒன்று உடைந்து நொறுங்கி கடலில் கலந்தது. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை. டெல்லியை விட மூன்று மடங்கு பெரியது.
அண்டார்டிகாவில் உள்ள ரோனி ஐஸ் மலைப்பகுதியில் இந்த பனிப்பாறை உடைந்து பிரிந்து சென்றது. இதன் பெயர் ice berg A-76. தற்போது அர்ஜென்டினா அருகே உள்ள வெட்டல் கடல் பகுதியில் இந்த பனிப்பாறை மிதந்து கொண்டு இருக்கிறது. இதன் நீளம் 170 கிலோமீட்டர், அகலம் 25 கிலோமீட்டர் ஆகும்.
இது கடலில் மிதந்து கொண்டு இருப்பதால் கடல் நீர் மட்டம் உயராது என்று கடலியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கொரோனா, புயல் மற்றும் நில நடுக்கம் ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் பனிப்பாறை உடைந்துள்ளது ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பனிப்பாறைகள் உருகுவதால் தான் காலங்காலமாக உறைந்து கிடக்கும் வைரஸ்கள் வெளியேறுகிறது.
கோடுகள் இல்லா உலகம் ஒருநாள் வானில் சுழன்றிட வேண்டும்.
அதில் கூடுகள் இன்றி
மனிதர்கள் எல்லாம்
கூடி மகிழ்ந்திட வேண்டும்.
ஆடல்,பாடல் பேச்சில் எல்லாம்
அர்த்தம் இருந்திட வேண்டும்.
இங்கு வேடர்கள் இன்றி
பறவைகள் பறந்திடும்
ஓர் வெற்றி பிறந்திட வேண்டும்.
 
Visitor

New Member
Thread Starter
1623351698877.png1623351821022.png

அறிவியல் அதிசயம்: 24 ஆயிரம் ஆண்டுகள் உறைபனியில் இருந்து உயிர்த்தெழுந்த உயிரினம்​

சைபீரியாவில் 24 ஆயிரம்ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த ஒரு நுண்ணிய பல செல் உயிரினம் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் உள்ள அலீஸா ஆற்றில் இருந்து டெலாய்டு ரோட்டிஃபர் (Bdelloid Rotifer) என்கிற உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டெடுத்தனர்.
கிரிட்டோபயோசிஸ் என்கிற உறைந்த நிலையில் பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின், இப்போது உருகிய பிறகு, எந்த வித பாலியல் ரீதியிலான உறவுகளுமின்றி, அந்த உயிரினத்தால் இனப்பெருக்கம் செய்து கொள்ள முடிந்தது.
இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் அந்த உயிரினம் 10 ஆண்டுகள் வரை உறைந்த நிலையில் உயிர் வாழ முடியும் என கூறப்பட்டிருந்தது.

'கரன்ட் பயாலஜி' என்கிற அறிவியல் சஞ்சிகையில் திங்கட்கிழமை வெளியான புதிய ஆராய்ச்சியில், இந்த உயிரினம் உறைபனியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வரை உயிர் வாழும் எனக் கூறப்பட்டுள்ளது.
"ஒரு பல செல் உயிரினம் உறைபனியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கப்படலாம், பிறகு மீண்டும் உயிர் பெறும் என்பதை தான் நாம் இந்த ஆராய்ச்சியில் இருந்து தெரிந்து கொள்ளும் செய்தி" என ரஷ்யாவில் இருக்கும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசியோகெமிக்கல் அண்ட் பயாலஜிகல் ப்ராப்ளம்ஸ் இன் சாயில் சயின்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டாஸ் மலவின் என்பவர் பத்திரிகை சங்கத்திடம் கூறினார்.
இந்த உயிரினம் எப்படி இந்த நிலையை அடைந்தது என்பதை தெரிந்து கொள்ள நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறினார். இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட விஞ்ஞானிகள் பல உயிரினங்களை உறைய வைத்து, பிறகு பனியை உருகச் செய்து சோதனை மேற்கொண்டனர்.

டெலாய்டு ரோட்டிஃபர் எந்த காலத்தைச் சேர்ந்தது என சோதனைக்கு உட்படுத்திப் பார்த்த போது 23,960 முதல் 24,485 ஆண்டுகள் பழமையானது எனத் தெரிய வந்தது.
டெலாய்டு ரோட்டிஃபர்கள் உலகம் முழுக்க உள்ள நன்னீர் சூழலில் காணப்படும் ஒரு வகையான ரோட்டிஃபர் உயிரினம்.

இந்த உயிரினம் எந்தவித கடினமான சூழலையும் தாங்கக் கூடிய வல்லமை பெற்றது. உலகிலேயே கதிரியக்க எதிர்ப்புத் திறன் மிகுந்த உயிரினங்களில் இதுவும் ஒன்று என 'தி நியூ யார்க் டைம்ஸ்' பத்திரிகை குறிப்பிட்டு இருக்கிறது. குறைந்த அளவிலான ஆக்சிஜன், உணவின்றி வாழும் பட்டினி நிலை, அதீத அமிலத் தன்மை, பல ஆண்டுகளாக நீரின்றி வாழ்வது போன்ற மிகச் சவாலான சூழல்களையும் இந்த உயிரினம் எதிர்கொள்ளக் கூடியது என அச்செய்தியில் கூறபட்டு இருக்கிறது.
இதேபோல வேறு சில பலசெல் உயிரினங்களும் பல்லாயிரம் ஆண்டுகள் உறைந்த நிலையில் இருந்துவிட்டு, மீண்டும் உயிர்பெற்று திரும்புவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதில் நெமடோட் புழு, சில செடிகள் மற்றும் சில பாசிகள் அடங்கும்.

-BBC Tamil.

Last edited:
Top