• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

அமெரிக்கா

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
268
Points
28
1604540761277.png
1604542820356.png

ஜெர்மனியின் வரைபட நிபுணர் வால்ட்ஸ் முல்லர். இவர் தான் உலக வரைபடத்தை தயாரித்தவர். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்ததால் அதுவரை அந்தக் கண்டத்திற்கு கொலம்பியா கண்டம் என்றே பெயர் இருந்தது.

கொலம்பஸூக்கு முன்னால் அமெரிக்காவை கண்டறிந்தவர் இத்தாலிய ஆய்வு பயணி அமெரிக்கோ வெஸ்புகி. எனவே வால்ட்ஸ் முல்லர் அமெரிக்கோ வெஸ்புகியின் நினைவாக அமெரிக்கா எனப் பெயரிட்டார். உலக வரைபடம் தயாரித்ததில் உள்ள ஐரோப்பிய ஆதிக்க அரசியலை அறியுங்கள்.

1492 ல் அங்கு சென்ற கிறிஸ்டோபர் கொலம்பஸின் குறிப்புகளில் அங்கிருந்த மக்கள் கருப்பாகவும், அவர்கள் தங்கள் உடலின் மீது சிவப்பு வர்ணம் பூசியிருந்ததால் செவ்விந்தியர் என அழைத்தார். அவர் இந்தியர் என அழைக்கக் காரணம் யாதெனில் இந்தியாவைக் கண்டறியும் தனது பயணத்தில் தான் சென்ற அமெரிக்க நிலப்பகுதியை இந்தியா என அறிந்திருந்தார். எனவே செவ்விந்தியர் என்று பெயர் வைத்தார்.

இந்த செவ்விந்தியர்கள் வேறு யாருமல்ல...

எகிப்து உள்ளிட்ட நாடுகளோடு 3000 ஆண்டுகளுக்கு முன்பே கடல் வாணிபம் செய்த தமிழர்களே என்பது ஐரோப்பிய ஆய்வாளர்கள் கருத்து.

ஐரோப்பியர்களின் வேட்டைக்காடாக அந்த நிலப்பரப்பு ஆன பொழுது கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டனர் செவ்விந்தியர்கள்.

1625 ம் ஆண்டு கணக்கின் படி அன்றைய அமெரிக்க மக்கள் தொகை வெறும் 326 பேர் தான். குமரியின் லெமூரியாக் கண்டம் அழிவின் போது தப்பிச் சென்ற ஒரு கூட்டம் தான் செவ்விந்தியர் என்கிறது வேறு ஒரு ஆய்வு. எதுவாகினும் ஐரோப்பியர்களின் கப்பல்கள் உலகம் முழுமையும் பயணிக்க எது காரணம் என்பதை வாஸ்கோடகாமாவின் டயரிக்குறிப்பில் குறிப்பிட்டள்ளான்.

1498 மே மாதம் 20 ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு அரபிக்கடல் வழியே போர்ச்சுக்கீசிய மாலுமி வாஸ்கோடகாமா கோழிக்கோடு வந்து சேர்ந்தான்.

வாஸ்கோடகாமாவின் டயரிக் குறிப்பு இது...

" அதிஷ்டமான பயணம்.மகா அதிஷ்டமான பயணம்.வைரமும் வைடூரியமும் இருக்கின்றன.இந்த வளமான பூமிக்குக் கொண்டு வந்து சேர்த்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்".

பிரான்ஸ், பிரிட்டன்,டச்சு நாட்டவர்கள் 17 ம் நூற்றாண்டில் அமெரிக்கப் பகுதிகள் பலவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1674 ல் டச்சுக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தனர். 18 ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழிருந்த 13 காலனிகளும் ஒன்றிணைக்கப்பட்டது.

1770 ல் அமெரிக்க காலனிகளுக்கும், பிரிட்டிஷாருக்குமிடையே பதட்டம் நிலவியது. 1775 முதல் 1781 வரை அமெரிக்கப் புரட்சி போர் வெடித்தது. தாமஸ் ஜெபர்சனால் எழுதப்பட்ட 13 அமெரிக்க காலனிகளின் விடுதலைப் பிரகடனம் 1776 ஜூலை 4 அன்று வெளியிடப்பட்டது. அந்த நாளே ஆண்டு தோறும் அமெரிக்க விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது.

1783 செப்டம்பர் 3 அன்று ஐக்கிய நாடுகளின் விடுதலையை பிரிட்டன் அங்கீகரித்தது. 1778 ல் ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.1789 ல் ஜார்ஜ் வாசிங்கடன் முதல் அதிபராகப் பொறுப்பேற்றார். 1780 முதல் 1804 வரை வட மாநிலங்களில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. தென் மாநிலங்களில் அது நீடித்தது.

19ம் நூற்றாண்டின் முன்பாதியில் லூசியானா, பிளாரிடா,டெச்ஸாஸ், கலிபோர்னியா ஆகியவை ஐக்கிய நாடுகளுடன் இணைந்தது. அடிமை முறையை எதிர்த்த ஆபிரகாம் லிங்கன் 1860 ல் அதிபரானார். அடிமை முறையை ஆதரித்த 11 அரசுகள் தனித்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கின. அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது. 1863 ல் லிங்கன் வெளியிட்ட விடுதலைப் பிரகடனத்தால் கூட்டமைப்பில் இருந்த 40 லட்சம் அடிமைகள் விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

1867 ரஷ்யாவிடமிருந்து அலாஸ்கா வாங்கப்பட்டு ஐக்கியநாடுகளுடன் சேர்கப்பட்டது. 1898 ல் பசிபிக்கில் இருக்கும் ஹவாய் தீவுக்கூட்டம் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 1920 ல் தான் பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டது. 1941 டிசம்பர் 7 பியர்ல் ஹார்பர் துறைமுகத்தின் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியது. 1945 ஆகஸ்டு 6 ஜப்பானிலுள்ள ஹிரோசிமா, நாகசாகி மீது அமெரிக்கா குண்டு வீசி பெரும் அழிவு ஏற்படுத்தியது. செப்டம்பரில் ஜப்பான் சரண்டைந்தது.

1950 முதல் 1953 வரை கொரியப் போரில் சீன இராணுவத்தை எதிர்த்து அமெரிக்கா போராடியது. 1969 ல் சந்திரனில் மனிதனை இறக்கி ஆய்வு செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களான ரோசா பார்க்ஸ், மார்ட்டின் லூதர் ஜூனியர், ஜேம்ஸ் பெவல் ஆகியோர் நிறப் பாகுபாட்டிற்கு எதிராக உரிமைப் போர் நடத்தினர். வியட்னாம் போரில் நீண்டகாலம் தலையிட்டு தோல்வியைத் தழுவியது.

1974 ல் வாட்டர்கேட் ஊழலில் அதிபர் நிக்சன் பதவி விலகினார். 2001 செப்டம்பர் 11 உலக வர்த்தக மையமும், பென்டகனும் அல்கொய்தாவால் தாக்கப்பட்டதாக அறிவித்து, பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி 2001 ல் ஆப்கன் மீதும், 2003 ல் ஈராக் மீதும் தாக்குதல் நடத்தியது.

அமெரிக்காவின் முதல் அதிபர் வாசிங்டன், அமெரிக்க விடுதலைப் போரில் பங்கேற்றுவிட்டு, அரசுபொறுப்பு ஏதும் வேண்டாம் எனச்சொல்லிவிட்டு விவசாயம் செய்யச் சென்றுவிட்டார். மக்களின் வற்புறுத்துதலில் தான் அதிபரானார். இரண்டு முறை அதிபராக இருந்துவிட்டு, மூன்றாவது முறை வேண்டாம் எனச் சொல்லிவிட்டு விவசாயப் பணிகளுக்கு சென்றுவிட்டார். அமெரிக்க அதிபர்களில் ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர் வாசிங்டன்.

அமெரிக்க வரலாற்றில் தொடர்ச்சியாக நான்குமுறை அதிபராக இருந்தவர் பிராங்களின் டி.ரூஸ்வெலட். ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க அடிப்படை அமைத்தவர் இவர்தான். இருமுறைக்கு மேல் அதிபராக இருக்ககூடாது என்ற சட்ட திருத்தம் ஹாரி.எஸ்.ட்ரூமன் காலத்தில் தான் கொண்டு வரப்பட்டது. அமெரிக்க அதிபரான முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒபாமா தான்.

அமெரிக்காவில் அதிகளவில் உள்ள பிற இனத்தவர்களில் அமெரிக்க சீனர்கள் முதலிடம் வகிக்கின்றனர். எண்ணிக்கையில் அவர்கள் கிட்டத்தட்ட 40 லட்சம் பேர். இவர்களுக்கு அடுத்து பிலிப்பினோ - அமெரிக்கர்கள். அவர்களின் எண்ணிக்கை 34.2 லட்சம்.

அடுத்து இந்தியர்கள் 34 லட்சம் பேர் (இவர்களில் பெருமளவு தெலுங்கு மற்றும் தமிழர்கள்).

இவர்களில் வாக்குரிமை பெற்ற இந்தியர் எண்ணிக்கை 10 லட்சம்.

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் 1,47,300 ஆக உள்ளது.

பாகிஸ்தானிகளின் எண்ணிக்கை 4,09,000 ஆக உள்ளது.

இலங்கையைச் சேர்ந்தவர்கள் 45,400 ஆகவும் உயர்ந்துள்ளது.

நியூயார்க், சிகாகோ, வாஷிங்டன் டிசி, லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ் மற்றும் சான்பிரான்ஸிஸ்கோ ஆகிய பெரு நகரங்களிலும் மெட்ரோ நகரங்கள் தவிர்த்து, பீனிக்ஸ், சார்லோட், கரோலினா, ராலே, சான் அன்டோனியா, சியாட்டில், ஸ்டாக்டன், ஜாக்ஸன் வில்லே, ஹாரிஸ் பர்க் மற்றும் நெவாடாவின் லாஸ் வேகாஸிலும் கணிசமாக இந்தியர் வசிக்கின்றனர் 50 மாநிலங்களைக் கொண்ட கூட்டமைப்பின், அதிபர் தலைமையிலான ஜனநாயக குடியரசே அமெரிக்கா. ஆனால் கூட்டமைப்பிலிருந்து மாநிலங்கள் பிரிந்து செல்லும் உரிமை இல்லை.

அமெரிக்காவிலுள்ள ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி என்ற இரண்டும் மாறி மாறி ஆட்சிக்கு வரும். இருவருக்கும் ஒரே கொள்கை தான். உலகை கொள்ளையிடுவது. கழுதை விட்டையில் முன்விட்டை, பின்விட்டை என்ற ஒப்பீடு தான். அமெரிக்க ஹாட் சேலஞ்ச் என்ற போட்டியில் மொக்கையான செயல்பாடுகளுக்கெல்லாம் அதிர்ச்சி அடைவது போல் பார்வையாளர்கள் முகபாவத்தை வைப்பதைப் பார்த்திருப்போம்.

அது போல் தான் ட்ரம்ப், பைடன் இடையில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற ஆச்சரிய விசாரணைகள். இடையிடையே ஓ மை காட் என்று இம்ப்ரசன் கொடுத்துக்கிருவானுக. ஆப்பிரிக்க கறுப்பு ஒபாமா வந்துவிட்டால் உலகமே மாறிவிடும் என்று கதைத்தார்கள். ஒரு மண்ணும் இல்லை என்பதைப்போல, எதுவும் மாறாது. ஏனெனில் அவர்கள் கொள்கைகள் ஏகாதிபத்தியம் என்பதே.

இங்கு சாதிவெறி, மதவெறி போல அங்கு நிறவெறி இன்னும் தொடர்கிறது. அதுவே சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட போராட்டம். கறுப்பு கிறிஸ்துவுக்கும், வெள்ளை கிறிஸ்துவுக்கும் இடையில் நடைபெறும் போராட்டங்கள். மதங்களால் மோதல்கள் மட்டுமே நடைபெறும். சமூக மாற்றங்கள் நடைபெறாது.

அமெரிக்காவுக்கு எதிராக உலகம் திரண்டால் மட்டுமே அங்கு மாற்றம் வரும்.

 
Last edited:

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
268
Points
28
மொத்தம்- 538

முடிவு தெரிந்தவை- 478

முடிவு தெரிய வேண்டியவை-60

வெற்றிக்கு தேவை-270

ஜோ பைடன்-264

ட்ரம்ப்ஜி- 214

50 மாநிலங்களில் 4 மாநில முடிவுகள் வெளியாகவில்லை.

பென்சில்வேனியா-20

ஜார்ஜியா-16

வடக்கு கரோலினா-15

நெவேடா-06

மற்றவை-03

முடிவு தெரிய வேண்டிய 60 ல் ஆறு இடங்களில் வெற்றி பெற்றால் ஜோபைடன் வெற்றி உறுதியாகும்.
இதில் நெவேடாவிலுள்ள 6 இடங்களிலும் ஜோபைடன் அதிகமான வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
மீதமுள்ள இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இழுபறி நீடிக்கிறது.

60 ல் நெவேடா ஆறு இடங்களை கழித்து மீதி 54 இடங்களிலும் ட்ரம்ப்ஜி வெற்றி பெற்றாலும் 214+54=268 தான் கிடைக்கும்.
அனைத்தும் கிடைக்க வாய்ப்பும் இல்லை.

எனவே ட்ரம்ப்ஜி தோல்வி உறுதியாகிவிட்டது.

வெற்றிகரமான தோல்வி என்று மோடிஜி வாழ்த்து தெரிவிக்க வாய்ப்புண்டு.

அமெரிக்க அதிபர் ஆட்டம் முடிந்தது.
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
268
Points
28
1604813879294.png
1604814059867.png

46 வது அமெரிக்க ஜனாதிபதி திரு.ஜோ பிடனுக்கு வாழ்த்துகள்.

நாட்டின் முதல் பெண் மற்றும் முதல் கருப்பின துணை ஜனாதிபதி திருமதி.கமலா ஹாரிஸ் க்கு வாழ்த்துகள்..
தமிழ் பின்புலம் கொண்டவர் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி..

மக்களாட்சியில் மகிமைகள் நடைபெறும் என்பதை இந்தத் தேர்தல் நிலைநாட்டியுள்ளது..
 
Top