• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

அர்த்தமுள்ள தகவல்:

Jimiki..

Member
Joined
Aug 1, 2017
Messages
88
Points
8
அர்த்தமுள்ள தகவல்:

* கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.
* யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
* கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்
* மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.
* ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.
* வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
* ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
* பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணி நேரம் பேசியுள்ளார்.
* அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள்11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
* ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
* தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.
* காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து கிழித்துவிடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம் எதுவும் கிடையாது. தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.
* சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
* விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ரஞ்சு நிறத்தில் இருக்கும்.
* சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
* யானை,குதிரை நின்று கொண்டே தூங்கும்.
* நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
* டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
* மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.
* எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.
* உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
* தேசியக்கொடியை முதன்முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். ஆண்டு 1219.
* கத்தரிக்காயின் தாயகம் இந்தியாவே.
* வெண்மை என்பது நிறம் இல்லை. அது ஏழு வண்ணங்களின் கலவையே.
* உலகில் 44 நாடுகளுக்கு கடற்கரை இல்லை.
* இந்தியாவில் தமிழில் தான் ‘பைபிள்’ முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
* இறாலின் இதயம் தலையில் இருக்கிறது
 
R

! RaVaNaN !

Guest
 Super, Particularly, News About Karal Marx & Bruce Lee.
 
Top