1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

கபடி நம்மஊரு விளையாட்டு

Ammu Nov 13, 2017

  1. Ammu

    Ammu Guest

    [​IMG] [​IMG] [​IMG] [​IMG] சடுகுடு அல்லது கபடி என்பது இந்திய மக்களால் விளையாடப்படும் பரவலான விளையாட்டாகும். இது ஜல்லிக்கட்டு பயிற்சிக்காகவும், பொழுதுபோக்காகவும் குழுக்கள் உடற்தொட்டு ஆடும் விளையாட்டாகும்.

    ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டு கபடி. எதிரணிக்கு செல்லும் வீரர் மாட்டைப்போல் கருதப்படுவார். அவ்வீரரை தொடவிடாமல் மடக்கி பிடிப்பது, மாட்டை முட்ட விடாமல் அடக்குவதற்கு சமமாகும்.

    நமது இந்திய விளையாட்டுச் சரித்திரத்தில் மேலும் ஒரு மைல் கல்லாக நம் மண்ணின் வீரம் செறிந்த கபடி விளையாட்டின் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றெடுத்திருக்கிறது. இதற்கு முதலில் சிரம் தாழ்த்தி வாழ்த்துச் சொல்வோம்.

    உலகக்கோப்பை கபடிப்போ்டியில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஈரான், இலங்கை, தாய்லாந்து, சீனா, இத்தாலி,ஆப்கனிஸ்தான், மலேசியா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நேபால், நார்வே, ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் பங்கேற்றது. போட்டி மிகக்கடுமையாக இருந்தும் 'இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும் ' என்று மீண்டும் நிரூபித்து வாகை சூடியிருக்கிறது நம் இந்திய அணி.

    ஆனால், இந்தியா கிரிக்கெட் சாம்பியன் ஆனபோது சமூக வலைத்தளங்களில் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்ட நம்மவர்கள், இவ்வெற்றியைப்பற்றி சிலாகித்து ஒரு வார்த்தைக்கூட தெரிவிக்காதது வியப்பாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

    கபடி விளையாட்டு என்றால் என்ன...? ஏதோ ரோட்டோரத்தில் டவுசர், பனியனோடு குஸ்தி சண்டைப் போல சகதியில் கட்டிப்புரண்டு உருள்வார்களே அதுவா...? கபடி விளையாட்டைப் பற்றிய புரிதல் நிறைய பேருக்கு இப்படித்தான் இருக்கும்...

    இந்தியா, கபடி விளையாட்டில் பெரிய அளவில் என்ன சாதித்துவிட்டது..? நிறையப்பேருக்கு தெரிந்திருக்காது. காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள்...

    இதோ இந்தியாவின் வெற்றி வரலாறு..

    இதுவரை நடந்த உலகக்கோப்பை கபடி போட்டிகளில் இந்திய தான் வெற்றி வாகை சூடி இருக்கிறது.

    ஆசிய கோப்பையிலும் 1990 இல் இருந்து இந்தியா தான் சாம்பியன்
    இதன் மூலம் என்ன சொல்ல வருகிறோம் என்றால், கபடி விளையாட்டில் இந்தியா யாராலும் வெல்லவே முடியாத சாம்பியானாக தொடர்ந்து இருந்து வருகிறது என்பதின் ஆதாரம்தான் மேலே உள்ள தகவல்கள்.

    கபடி விளையாட்டு தமிழர்களின் பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தது. வீரத்தோடு தொடர்புடையது. நம் கலாச்சாரத்தின் உயிர் செல்கள் ஒவ்வொன்றாய் மரித்து போய் உதிர்ந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், கபடியும் அப்படிப்பட்ட கோமா நிலையில்தான் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்கள்... அல்லது அடுத்தத் தலைமுறையில் கபடி நம் பாடப்புத்தகத்தோடு அதன் வரலாற்றை முடித்துக்கொள்ளும்.

    முன்பெல்லாம் கிராமப்புறங்களில் சினிமா போஸ்டர்களுக்கு இணையாக கபடிப்போட்டியின் போஸ்டரும் ஒட்டப்பட்டிருக்கும்.முதல் பரிசு ரூ 555.. இரண்டாம் பரிசு ரூ 333.. மூன்றாம் பரிசு ரூ111. ஆனால் இங்கே பரிசுத்தொகை முக்கியமில்லை. விளையாடவேண்டும். ஜெயிக்கவேண்டும். அவ்வளவுதான்.

    கிராமப்புற ஆண்களுக்கு கண்டிப்பா விடலை பருவத்தில் கபடி கலந்திருக்கும்
    மண்ணோட வாசமும் ருசியும் ஒன்னா கலந்ததால சோு தண்ணியும் மறந்து விடும்..சுகமும் துக்கமும் மறத்து போகும். மட்டையும் பந்தும் தேவையில்ல..அரைக்கால் சட்டையும் அழுக்கு பனியனும் இருந்தாலே போதும் எங்களுக்கு.. புல்தரையும் போர்க்களமாகும்...வயல்வெளியும் மைதானமாகும்..

    'டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் போட்டி ...முதல் பரிசு 5001 ' அப்படின்னுதான் இப்பெல்லாம் போஸ்டர் பார்க்க முடியுது. அதிலும் சினிமாவில கபடியைக் காட்டும் விதம் அதைவிடக்கொடுமை. ஹீரோ ஹீரோயினோட மன்மத விளையாட்டுபோலவும், வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் கொடுரமான சண்டை போலவும் (அதுவும் விரலிடுக்குள்ள பிளேடு வச்செல்லாம்[email protected] கில்லி ) காட்டப்படுகிறது. விதிவிலக்கு 'வெண்ணிலா கபடிக்குழு' ...
    கபடியைப்பற்றி அறியாதவர்களுக்கு எனக்குத்தெரிந்த தகவல்கள் ..

    இது தெற்காசியாவில் தோன்றிய விளையாட்டு...இதன் வயது 4000 வருடங்களுக்கு மேல். அண்டை நாடான பங்களாதேஷின் தேசிய விளையாட்டு என்பது கூடுதல் தகவல். கபடி தெற்காசியாவில் மட்டுமல்லாது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் விளையாடப்படுகிறது. கபடி 65 நாடுகளில் விளையாடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

    வெற்றியோ தோல்வியோ ..அதைப்பற்றியெல்லாம் கவலையில்ல.. களமிறங்கி விளையாடுனும் .

    அறிவோம் ராசிப்போம் நன்றி.
     
    Last edited by a moderator: Nov 13, 2017
    • Like Like x 2
    • Winner Winner x 1