1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

கர்த்தர் கம்யூனிஸ்டாக மாறிய தருணம்!...

! The Reader ! Oct 16, 2019

  1. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN

    1948-ல், தூத்துக்குடி மாவட்டம் பண்ணையரில் (நயினார்புரம்) வாத்தியாராக ஆர்.எஸ்.ஜேக்கப் பணிக்குச் சென்றபோது அவருக்கு வயது 19.

    அங்கு பள்ளிக்கூடம் என்ற பெயரில் இருந்தது ஒரு ஓலைக்குடிசை. "ஏலா புதுசா பள்ளக்குடி வாத்தியார் ஒருத்தரு வந்திருக்காருலா" என்று குறுக்கு மறுக்காக ஓடின 10க்கும் குறைவான சாதி வேற்றுமையோடு வாழ்ந்து பழக்கப்பட்ட பிள்ளைகளைச் சமத்துவத்தோடு அமரவைத்து, இருவாசல் முறையை ஒழித்து, சுற்றுப் புறத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைத் தன் பள்ளிக்கூடத்தில் சேர்த்து, அவர்கள் படிப்புக்குத் தடையாக இருந்த ஊர் பண்ணையாரை எதிர்த்து, அவரது கொலை முயற்சிகளில் தப்பி, ஊரையே அடிமைத்தனத்தால் தன் கட்டுக்குள் வைத்திருந்த பண்ணையாரின் சுரண்டலை அம்பலப்படுத்திய வாத்தியாரின் பள்ளிக்கூட அனுபவம் சினிமாத்தனங்களை எல்லாம் மிஞ்சுவது.

    பொதுவுடைமைச் சித்தாந்தந்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் அன்றைக்குத் தீவிரமாக இயங்கிவந்த தோழர்கள் பாலன் (பாலதண்டாயுதம்), மாயாண்டிபாரதி, நல்லக்கண்ணு ஆகிய வேறு பலரோடு அறிமுகங்கள் இல்லாமலே நெருங்கிய நட்பு பேணியிருக்கிறார்.

    தென்மாவட்ட ரயில் கவிழ்ப்பு சம்பவத்தால் 200 கம்யூனிஸ்டு தோழர்கள் கைது செய்யப்பட்டு, 97 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட "நெல்லை சதிவழக்கில்" கம்யூனிஸ்டு தலைவர்களோடு இருந்த தொடர்பு, கூட்டம் நடத்த பள்ளிக்கூடத்தில் இடம் தந்தது, தோழர்களுக்கு தம் வீட்டில் தஞ்சம் கொடுத்தது ஆகிய காரணங்களால் வாத்தியாருக்கு எதிராகவும் குற்றம் நிருபிக்கப்பட்டுவிட்டது. அவர் 18வது குற்றவாளியானார்.

    எல்லாவற்றுக்கும் காரணம் வாத்தியாருக்கு இருந்த டைரி எழுதும் பழக்கம். சோதனையிட்டபோது அவரிடம் இருந்த டைரியில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அவர் தங்க இடம் அளித்த தகவலும், உணவு சமைத்துப் போட்டதும், கூட்டம் நடத்த பள்ளிக்கூடத்தில் இடமளித்ததும் அந்த டைரியில்தான் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு எதிரான முக்கிய சாட்சியமும் அதுதான்.

    நான்கரை ஆண்டுகள் பாளையங்கோட்டை, மதுரை சிறைகளில் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளானவரிடம், எங்கே பாலன் மற்றும் உன் தோழர்கள் எல்லாம் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்று கேட்டுக் கேட்டு அடித்திருக்கிறார்கள். தெரியாது, தெரிந்தாலும் சொல்ல மாட்டேன் என்று மறுத்தவரின் கால்களை உருட்டுக் கட்டைகளால் அடித்து நொறுக்கி, நடக்க முடியாமல் ஆக்கி, பிள்ளைப் பூச்சிகளை அடிவயிற்றில் கடிக்கவிட்டு, இரத்தக் காயமாக்கி நடை பிணமாக மிச்சம் விட்டிருக்கிறார்கள்.

    நெல்லை சதி வழக்கை ஏற்று நடத்திய வழக்கறிஞர் என்.டி.வானமாமலை அவர்கள், ஜேக்கப்புக்கு தூக்கு உறுதி என்று நம்புகிற வேளையில், தீர்ப்பு வழங்குவதற்கு முன்னால் குடும்பத்தோடு கொடைக்கானல் சுற்றுலாவுக்குச் சென்ற நீதிபதி, "அது என்ன சாட்சிய டைரி" என்று கையில் எடுத்துப்போய் முழுவதும் வாசிக்கிறார்.

    தோழர்கள் தங்க இடம் தந்தது மட்டுமா அதில் இருந்தது?... தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் அவர் உருவாக்கிய ஒவ்வொரு மாணவரின் கதை. அறியாமையில் அடிமைகளாய் பண்ணை வேலை செய்து உழன்ற அவர்கள் குடும்பத்தின் நிலவரம், ஜேக்கப் வாத்தியாரால் ஏற்படுத்தப்பட்ட சமூக மாற்றம், அவர் செய்த உதவிகள் எல்லாமும் இருந்தது. எல்லாவற்றையும் எழுதிவிட்டு இந்த காரியங்களைச் செய்ய எனக்கு உதவிய கர்த்தருக்கு நன்றி என்று முடித்திருக்கிறார். கர்த்தர் கம்யூனிஸ்டாக மாறிய தருணம்!

    டைரியை முழுதும் வாசித்து முடித்த நீதிபதி, ஜேக்கப் வாத்தியாரின் நற்செயல்களை அடிப்படையாக வைத்து அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

    இன்று ஜேக்கப் வாத்தியாருக்கு 95 வயது. 1955-காலகட்டத்தில் சிறைக்குச் சென்ற தன் கதையை 'வாத்தியார்' என்றே எண்பதுகளில் நாவலாக்கி இருக்கிறார். பிறகு, சிறையிலிருந்து மீண்ட கதையை வாத்தியார் - மறுபிறவி (மரணவாயிலில்) என்ற தலைப்பிலும் நாவலாக்கி இருக்கிறார். அதுபோக நூறுக்கு மேற்பட்ட புத்தகங்களும்.