• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

கலைவாணரின் கடைசி ஆசை

Luv

Member
Senior Member
Joined
Aug 2, 2017
Messages
137
Points
18
கலைவாணரின் அந்தக் கடைசி ஆசை


கோடிக்கணக்கான தமிழர்களைத் தன்னுடைய அறிவார்ந்த நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். ஒருநாள் உடல் நலமில்லாத சமயம் தன்னுடைய காதல் துணைவி மதுரம் அம்மையாரிடம் இவ்வாறு கூறினார்



நான் ஐம்பது வயதுக்குள் இறந்துவிடபோகிறேன் மதுரம். அதற்குமேல் உயிருடன் இருந்தால் என் சிரிப்புச் சேவையில் கிழடு தட்டிவிடும்


மதுரத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15. சுதந்திரத் திருநாளை தென்னிந்தியப் பத்திரிகையாளர் சங்கம் கொண்டாடியது. தெலுங்குப்பட உலகின் உச்சநடிகர் என்.டி. ராமராவ் பங்கேற்ற கதம்ப நிகழ்ச்சியைக் கலைவாணர் இயக்கினார்.

அத்துடன் மதுரத்துடன் சேர்ந்து ஒரு சிறிய நாடகத்தையும் நடத்தினார். தேச விடுதலைநாள் விழாவில் பங்கேற்றதே கலைவாணரின் கடைசி நிகழ்ச்சியாக ஆகிப்போனது. ஆம், ஆகஸ்ட் 16 அன்று கலைவாணர் கடுமையான மஞ்சள் காமாலை மற்றும் குலை வீக்க நோய்க்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


ஒவ்வொருநாளும் கலைவாணரைப் பற்றிய செய்திகளும் கூடவே வதந்திகளும் பரவின. ஒருநாள் கலைவாணரைப்பற்றிய தவறான வதந்தியால் மருத்துவமையின் முன்பு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டுவிட்டனர்.

சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வெளியூர்களுக்கு அவ்வதந்தி பரவி கடைகள் அடைக்கப்பட்டன. மறுநாள் பொழுது விடிந்தது. கலைவாணர் தூங்கிக்கொண்டிருந்தார்.

அவரைக் கண்ட நண்பர்கள் வாய்விட்டுக்கதறி அழுத்துவிட்டார்கள்.


கலைவாணர் விழித்துக்கொண்டார். அவர்களிடம் கேட்டார்:


ஏன் அழுகிறீர்கள்?"


பாவிப்பசங்க உங்களைப் பற்றி தப்பா செய்தியைப் பரப்பிட்டனுக..." என்றார் ஒருவர்.


"அதை உண்மைனு நம்பி கடையெல்லாம் அடைச்சுட்டான்..." என்றார் இன்னொருவர்.

உடல்நலம் குன்றிய நிலையிலும் கலைவாணர் முகத்தில் நமட்டுச் சிரிப்பு அரும்பியது.


அவர்களிடம் சிரித்துக்கொண்டே கேட்டார்: "என்ன செய்தி? நான் செத்துப்போய்ட்டேன் என்றுதானே?"


சுற்றியிருந்த நண்பர்கள் அழுதார்கள் விம்மிவிம்மி...


அவர்களின் அழுகையைப் பொருட்படுத்தாமல் கலைவாணர் தொடர்ந்தார்:


இப்போதாவது புரிஞ்சுக்கிட்டிங்களா கலைவாணர் என்றால் யாரென்று? கடைகளை அடைக்கமாட்டார்களா என்ன? அப்படித்தான் அடைப்பார்கள். கலைவவாணர்னா லேசா? வேணா பாருங்க, நான் நிஜமாவே செத்தப்புறம் இதைவிட பெரியளவில் நடக்கும்!"


1936 ல் தொடங்கிய அவரது திரைக்கலைப் பயணம் 1957 ல் ஒரு முடிவுக்கு வந்தது. ஐம்பது வயதில் இறந்துவிட ஆசைப்பட்டார் அவர். ஆனால் 49 வயது முடியுமுன்னமே தனது அந்தக் கடைசி ஆசையை நிறைவேற்றிக்கொண்டுவிட்டார்.

மதுரம் எனும் அவரது உயிர்க்காதல் மனைவி வீட்டிற்குச் சென்றிருந்த அந்த முற்பகல் வேளையில், அதாவது இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்னர், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் நாள் காலை 11 மணி 10 நிமிடத்துடன் தமிழ்கூறு நல்லுலகத்தைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் தனது அரும்பணியை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டார் அந்த மகத்தான கலைஞர்!


-----------------------------------------------------


ஆகஸ்ட் 30: கலைவாணர் நினைவுநாள்
 
Last edited:
Top