• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

காத்திருப்பு (ஏக்கத்தின் வெளிப்பாடு)

Mathangi

Member
Joined
Mar 17, 2020
Messages
42
Points
18
என்னவனே....
என் உயிரில் கலந்தவனே......

உன்னை நினைத்த போதெல்லாம்
கண்ணீருடன் காத்திருக்கிறேனடா.....
உன் வரவை எண்ணி......

கனவில் உன்னை பார்த்தபோதெல்லாம்
நிஜம் என்ற ஒன்று
என்று என எண்ணி காத்திருக்கிறேனடா.....

தனிமையில்,
நம் காதலை நினைவில் வைத்து
தவிப்பில் காத்திருக்கிறேனடா.....

நீ என்னை சேரும் நாள் வரும் வரை
காத்திருக்கிறேனடா.....

என் உயிர் இம்மண்ணில்
வாழும் வரை காத்திருக்கிறேனடா.....
உனக்காய் காத்திருப்பேனடா....

காத்திருப்பில் சுகம் அல்ல,
அது சுமை என்றும் அறிந்தேனடா....
மரண வலி என்பதையும் உணர்ந்தேனடா....:(
 

Argus

Active Member
Joined
Jun 6, 2019
Messages
114
Points
28
காத்திருத்தலும் ஓர் சுகம் தான் பெண்னே.... !!!

காத்திருத்தலும் மரண படுக்கையின் வலியும் ஒன்றே!!!

ஆனால், காத்து இருந்தால் காதலின் தன்மை மாறுவதில்லையே!!!

காத்திருக்கும் ஒவ்வொரு தருணமும் கண்களின் நீரால் வாசல் எனும் இதயத்தை அழகாய் கோலமிட்டு எதிர்பார்க்கும் நெஞ்கங்கள் ஏராளம்!!!

பெண்ணின் காத்திருத்தல் அவளின் ஜீவனை காணும் வரையிலே!!!

ஓர், ஆண்ணின் காத்திருத்தலோ!!!

அப்பெண்ணின் சிசுவை இப்பூவிலே பிறந்து அவன் தம் கைகளால் கட்டி தழுவி உச்சி முகரும் வரையிலே!!!
 

Argus

Active Member
Joined
Jun 6, 2019
Messages
114
Points
28

காத்திருத்தலும் ஓர் சுகமே!!! காத்திருக்கும் ஒவ்வொரு அன்பான இதயங்களுக்கும் ஓர் ராஜ இசை சமர்ப்பணம்!!!!
 
Top