• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

கொரோனா ! கொரோனா ! கொரோனா ! ......

Mathangi

Member
Joined
Mar 17, 2020
Messages
42
Points
18
கொரோனா.........
உன்னை என்னவென்று கூற நான்!........

கண்ணீர் மல்க பல உயிரின்
கனவுகளை புதைக்கும்
கொரோனா......

என்ன பாவம் செய்தோம்
ஏன் இந்த தனிமை போராட்டம்.....

கொடுமையிலும் கொடுமை
உந்தன் நோயால் அடையும்
தனிமை.....

இவ்வுலகின் ஆட்சி உன்னிடம்
எதிர்த்து போராட துடிக்கும்
இம்மானிட போராட்டம்......

போதும் உந்தன் பலி
உன் வரவால் நாங்கள் அடைந்தோம்
உறவின் மரண வலி, வறுமை,
கொடுமை, தனிமை, மற்றும்
இன்னும் சில.......

பச்சிளம் குழந்தையும் பழி தீர்ப்பதேன்
எப்போது அடையும் உந்தன் பசி.....

மனிதனின் மரணம் பல ஆயிரம்
போதும் உந்தன் வெறி
விட்டு செல்ல மனமில்லையா
மானிடனின் மரணம்
போதவில்லையா......

தெய்வங்களின் உருவில்
மருத்துவர்களும் செவிலியர்களும்
உன்னை கொன்றும்,
மானிட பிறப்பை வாழவைக்கவும்
தெய்வ அவதாரம்.....

காக்கும் தெய்வமாய் காவலர்கள்
கடமை என்னும் நிலையில்
தன் உயிர் காப்பதை
இம்மியளவு அறியாமல்
ஒவ்வொரு ஊரின் எல்லையில் காவலர்கள்.....

சுத்தம் ஒன்றை எண்ணி
சுகதாரதுறை பணியில் பல உயிர்கள்.....

கொரோனா....
உன்னை எதிர்த்தும், போராடியும், அழித்தும்,
மானிட வாழ்வை வாழ வைப்போம்.....
 
Top