• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

நவம்பர்-7

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
268
Points
28
1604781981508.png1604783245674.png

நவம்பர்-7
உலகில் முதன் முதலில் தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றிய நாள்.​

1917 நவம்பர்-7 புரட்சி வெற்றி பெற்றது...

நவம்பர்-8 தோழர் லெனின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டவுடன் போட்ட முதல் உத்தரவு இதுதான்...

"மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் வேறு எதையும்விட மிகப் பெரிய குற்றம் போர் ஆகும்! எனவே புதிய ரஷ்ய அரசு அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக உள்ளது. அனைத்து நாட்டு மக்களுக்கும் நியாயமான வகையில் இந்த அமைதி ஒப்பந்தம் அமைய வேண்டும். எந்த நாட்டையும் வேறு எந்த நாடும் ஆக்கிரமிக்காத வகையிலும், எந்த நாடும் தனது நாட்டை இழக்காத வகையிலும் இந்த அமைதி ஒப்பந்தம் அமைய வேண்டும். ரஷ்யாவுடன் இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள முன் வருமாறு சம்பந்தப்பட்ட அரசுகளையும்,மக்களையும் அழைக்கிறோம்"

இதுதான் அவர் வெளியிட்ட முதல் உத்தரவும், அறிக்கையும்.

ஏன் இப்படி ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டார் எனில், மண்ணின் மைந்தர்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்து, அவர்களது ரத்தத்தை உணவாகக் குடித்ததில் தான் நவீன முதலாளித்துவத்தின் வரலாறு தொடங்குகிறது. ஏனெனில் அதன் வரலாற்றின் தொடக்கமே நாடுகளை ஆக்கிரமிப்பதே.

1604782242028.png

1917 ரஷ்யப் புரட்சி செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் அரோரா கப்பலில் இருந்துதான் தோழர் லெனின் தலைமையில் தொடங்கியது
யுத்தத்தில் பெரும் பங்காற்றிய கப்பல் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. அதை 1948 ல் கடலில் இருந்து மீட்டு தற்போதுவரை நோவா ஆற்றில் காட்சிப்படுத்தி வைத்துள்ளார்கள்.

1604782427804.png

தோழர் லெனின் என்றால்...

ஒரு பால்கனியில் நின்று மக்களிடம் பேசுவது போன்ற படமே அதிகமாக இருக்கும். அந்த இடம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவர் பணியாற்றிய அலுவலகம். அந்த அலுவலகம் தற்போது சிறுவர்களுக்கான அரசியல் பள்ளியாக உள்ளது.

1604782838965.png

தோழர் லெனினுக்கு வைக்கப்பட்ட முதல் சிலை...

ஜார் மன்னனின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பிக்க செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் அருகில் உள்ள காட்டிற்குள் தோழர் லெனின் பதுங்கியிருந்தார். அவர் இறந்த பிறகு 1926 ல் அந்தக் காட்டிற்குள் அவருக்கு சிலை நிறுவப்பட்டது.இது தான் ரஷ்யாவில் அவருக்கு வைக்கப்பட்ட முதல் சிலை. அந்த ஒட்டுமொத்த காடும் இப்போது மியூசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. காட்டுக்குள் பயணம் இப்போதும் பயங்கரமாக இருக்கும். அந்தக் காலத்தில் தனி ஒரு மனிதனாக அவர் தங்கியிருந்தது பற்றி அவருடைய ஒரு குறிப்பு இருக்கிறது.
"எனக்கு ஜார் மன்னனை வீழ்த்துவதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. இந்தக் காட்டுக்குள் இருக்கும் கொசுக்களைத்தான் என்னால் சமாளிக்க இயலவில்லை"

1604782981104.png1604783025913.png

நாஜிகளால் கொன்று முள்வேலியில் தூக்கி வீசப்பட்ட தோழர்.ஸ்டாலின் மகன்.

தோழர் ஸ்டாலின் அவர்கள் மகன் யாக்கோப்ஜுகாஸ்விலி. இரண்டாம் உலகப் போரில் 1941 நாஜிகளால் பிடிக்கப்பட்டு கைதிகள் முகாமில் சிறை வைக்கப்பட்டார். ரஷ்ய இராணுவத்தால் பிடிக்கப்பட்டு சிறையிலிருந்த மார்ஷல் பிரடரிக்பவுலோஸ் என்ற நாஜி இராணுவத் தலைவனை விடுதலை செய்தால் யாக்கோபை விடுவிப்பதாக நாஜிகள் பேரம் பேசினர். சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான எங்கள் தோழர்களில் அவனும் ஒருவன். எல்லோரும் விடுதலையாகும் போது அவனும் வரட்டும். நாஜி இராணுவத் தலைவனை விடுவிப்பதற்காக பேரம் பேச முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்தார் தோழர்.ஸ்டாலின். 1943 ஏப்ரல்14 ல் தோழர்.ஸ்டாலின் மகன் யாக்கோப் நாஜிகளால் கொல்லப்பட்டார். உலகையே யுத்தத்திலிருந்து காப்பாற்ற தனது மகனையே இழந்து நின்றார் தோழர்.ஸ்டாலின். மரணத்தைக் கண்டு எதற்கும் அஞ்சாத வீரம்.

ஸ்டாலின் என்பது பெயரல்ல பாசிச எதிர்ப்பு குறியீடு.

1604783313016.png

ஹிட்லர்கள் ஸ்டாலின்களால் வீழ்த்தப்பட்டதே வரலாறு.
 

Attachments

Top