1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
    Dismiss Notice
  2. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
    Dismiss Notice

நினைவெல்லாம் நீயே - 1

Gowrikarthik Mar 21, 2018

  1. Gowrikarthik

    Gowrikarthik New Member

    எல்லாருக்கும் வணக்கம்,
    கல்லூரிநாலே நம்ம எல்லாருக்கும் ஒரு கனவு உலகம், நம்ம ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கனவோடு தான் கல்லூரி ல காலெடுத்து வைப்போம், நம்ம எப்படி கனவோடு வரமோ அதே மாதிரி நானும் பற்பல எதிர்பார்போடு தான்போனேன். ஆனா நம்ம எதிர்பார்க்குறதெல்லாம் அப்டியே எப்போவுமே நடக்குறது இல்லை, அது போல தான் என்னோட காதலும் எதிர் பாராம நடந்த ஒன்னு.

    ஒரு நாள் நானும் என்னோட தோழியும் கல்லூரி முடிந்து நடந்து வந்துட்டு இருந்தோம், அப்போ திடீர்னு முன்னாடி ஒருத்தன் வந்து நின்னான்.

    "நாளைக்கு நீ என்னோட என் வீட்டுக்கு வரணும், நாளைக்கு காலைல பத்து மணிக்கு பஸ் ஸ்டாண்ட் ல வெயிட் பண்றேன், நீ என்கூட பைக் ளெல்லாம் வர வேணாம் பஸ் ல வந்தா போதும். நாளைக்கு நீ கிளாஸ் சுட் பண்ண வேணாம் உனக்கு நாளைக்கு கிளாஸ் இல்லை னு எனக்கு தெரியும். அதுனால சாக்கு சொல்லாத. உனக்கு என்ன முன்ன பின்ன தெரியாது அதுனால எப்படி வர்றது னு யோசிச்சா, என்ன பத்தி நாளைக்கு நீ தெரிஞ்சுக்க தான் கூப்பிடுறேன். சேரி நாளைக்கு கரெக்ட்டா 10 மணிக்கு பார்க்கலாம்." சொல்லிட்டு அவன் பாடுக கிளம்பிட்டான். நானும் என் தோழியும் மலங்க மலங்க முழிச்சிகிட்டு நின்னோம். கொஞ்ச தூரம் போயிடு திரும்ப வந்தான்.

    "அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். நாளைக்கு நீ வரலைனா அதுக்கு அப்புறம் நா உன் முன்னாடி எப்போவுமே வர மாட்டேன். ஏன்னா உன்ன தொந்தரவு பண்ண விரும்பல. நா வரேன் " என்ன டா இது குண்டு மேல கொண்ட தூக்கி போடுறான்.

    எனக்கும் என் தோழிக்கும் ஒரே சந்தேகம் தான் அது என்ன னா அவன் பேசும் எங்க ரெண்டு பேர் முகத்தையும் பார்க்கல அப்போ இத யார்கிட்ட சொன்னான் . அதோட இப்போ எதுக்காக அவனை பார்க்க போகணும் அவனோட அவன் வீட்டுக்கு போகணும் எனக்கு தோணுனது ஒன்னு தான் போக கூடாது. ஆனா அதே மாதிரி அவளுக்கு தோணல.

    "பிரபா" (என் பேரு அதான்).

    "என்ன டி"

    "அந்த பையன் எப்படி இருக்கான் "

    "எப்படி இருக்கான் னா "

    "பார்க்க "

    "நல்லா தான் இருக்கான் "

    "அவன் சொன்னதை ...."

    "அடியே உன் போக்கு செரி இல்லையே இப்போ என்ன சொல்ல வர்ற "

    "அதுக்கில்ல டி நாளைக்கு நம்ம ..."

    "ஏ இப்போ என்ன நாளைக்கு போக வேணாம் அவ்ளோ தானே "

    "நீயா ஏண்டி அவசர பாட்டு முடிவு பண்ற வேணாம் னு சொல்லல போவோம் னு சொல்றேன் "

    "ஏய் என்ன டி சொல்ற, அவனை பத்தி எதுவும் தெரியாது எப்படி இவ்ளோ தைரியமா சொல்ற போலாம்னு நா வரல நீ தானா போய்ட்டு வா "

    "ஏய் ஏய் ப்ளீஸ் டி எனக்காக டி நாளைக்கு போகல னா அதுக்கு அப்புறம் பார்க்க மாட்டேன் னு தானா சொல்லி இருக்கான் அதுனால நம்பி போகலாம் டி ப்ளஸ் எனக்காக ப்ளஸ் ப்ளஸ் "

    "உனக்கு என்ன அதுல இப்டி ஒரு ஆர்வமோ போ "

    "என்ன டி எனக்காக னு சொல்றேன்ல ப்ளஸ் "

    "சரி இப்போ எதுவும் முடிவு பண்ண வேணா வீட்டுக்கு போய் நல்லா யோசிச்சு முடிவு பண்ணலாம் "

    "ஓகே நைட் கால் பண்றேன் "

    அவ ஒரு லூசு எப்போ பாரு இப்டி தான் என்னை எதுலயாவது என்ன மாட்டி விடற மாதிரிதான் பன்னுவா, அவ சொல்றதுக்காகலாம் நாளைக்கு போக முடியாது எதாவது பிரச்சனை ஆயிடுச்சுனா என்ன பண்றது. ஆமா முதல்ல அவன் என்னை வர சொன்னானா இல்லை அவளை வர சொன்னானா அதுவே தெரியில அதுக்குள்ள எப்படி போகலாமா வேணாமா னு முடிவு பண்ண அவளை கூப்பிட அவ போகட்டும் னா ஏன் போகணும்.

    இப்டி தான் அவனை முதல் முதலல்ல பார்த்த அன்னிக்கே என்ன அவ்ளோ யோசிக்க விட்டுட்டான். அன்னிக்கு நைட் என் தோழி கால் பண்ணுனா

    "ஹலோ "

    "பிரபா என்ன டி ஏதாவது சொல்லு போலாமா வேணாம்னு "

    "அவன் உன்ன வர சொன்னானா என்ன வர சொன்னானா உன்ன வர சொன்னானா நீ போ உனக்கு பிடிச்சிருந்தா என்னை ஏன் டி கூப்பிடுற "

    "என்ன பிரபா நீ தான் என் ஒரே இணைபிரியா தோழி நீயே இப்டி சொல்ற நாளைக்கு நம்ம நேர்லயே அவன் கிட்ட கேட்ருவோம் என்ன சொல்ற "

    "இங்க பாரு பானு இதெல்லாம் எனக்கு சரியாவே படல என்ன டி ஆச்சு உனக்கு, உனக்கு என்ன அவனை அவ்ளோ பிடிச்சிருக்கா "

    "அய்யே பிடிக்கலாம் இல்லை ஒரு ஆர்வம் நாளைக்கு அவன் என்ன பண்ணுவான் னு அதான் "

    "என்ன பெரிய ஆர்வம் "

    "ஏய் ப்ளஸ் டி ஒரு தடவ வாயேன் "

    இவளை என்ன பண்றது சரி இப்போதைக்கு ஓகே சொல்லுவோம்


    "சரி ஆனா நான் வந்து ஒரு வார்த்தை பேச மாட்டேன் உன்ன விட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்."

    "நீ வந்தா மட்டும் போதும் மா"

    "பை"

    நான் அவளை ட்ரோப் பண்ணிட்டு வந்துரலாம் நெனைச்சது என்னமோ உண்மை தான் ஆனா நம்ம நினைக்கிறது மாதிரியா எல்லாம் நடக்குது .


    அடுத்த நாள் காலைல நா வழக்கம் போல கிளம்பிட்டு இருந்தேன் பானு வீட்டுக்கே வந்துட்டா

    "என்ன டி வீட்டுக்கே வந்துட்ட இப்போ என்ன சொல்லிட்டு கிளம்ப "

    "அதெல்லாம் நான் ஏற்கனவே உங்க அம்மா வ சமாளிச்சாச்சு நீ சொதப்பாம கிளம்பு நாங்க ரெண்டு பெரும் இன்னைக்கு பேப்பர் presentation பண்ணனும் அதுக்கு printout னு சொல்லிருக்கேன் அதுனால நீயும் அத continue பண்ணிக்கோ "

    "உனக்கு இப்போ மட்டும் மூளை பயங்கரமா வேலை செய்யுமே "

    "சரி சீக்கிரம் வா "

    நாங்க ரெண்டு பேரும் கிளம்ப லேட்டா ஆயிடுச்சு நாங்க பஸ்ஸ்டாண்ட் போன அப்போ மணி 11 அவன் போயிருப்பான் னு தான் நினைச்சோம் .

    அனா பட்டுனு முன்னாடி வந்து நின்னான்.

    "நீ கண்டிப்பா வருவே னு எனக்கு தெரியும் பிரபா "

    என்னது ...............

    அப்போ அவன் சொன்னேதெல்லாம் என்ன தானா அடிப்பாவி என்ன இப்டி வந்து மாட்டி விட்டுட்டியே.

    "ஆமா உன் friend அ எதுக்கு கூட்டிட்டு வந்த, ஓ தனியா வாரத்துக்கு பயமா சரி வா போகலாம் "

    அவன் பாட்டுக்கு என் கைய பிடிச்சு கூட்டிட்டு போய்ட்டு இருக்கான். நானும் பானு கைய பிடிச்சு இழுத்துட்டு போனேன். என்னை மாட்டி விட்டதே அவ தானா அப்புறம் எப்படி அவளை விடுறது. அவளும் அவன் என் பேரை சொன்னதும் கிளம்ப பார்த்த நா விடுவேனா பிடிச்ச கைய விடலயே.

    பஸ் ல நானும் பானுவும் ஒண்ணா உக்காந்தோம் அவன் பின்னாடி seat ல உக்காந்தான்.

    பஸ் ல பெருசா கூட்டம் இல்லை .

    "அடியே அவன் உன்ன கூப்பிட்டான் னு தானா சொல்லி என்ன வர சொன்ன "

    "நா எப்போ அப்டி சொன்னேன், எனக்காக ஒரு தடவ போய் பார்க்கலாம்னு னு தான் சொன்னேன் "

    "பாவி இந்த பாவம் உன்ன சும்மா விடாது டி "

    "என்ன இப்டி மாட்டி விட்டுடேயே "

    "இப்போ என்ன அவனே சொல்லிருக்கான்ல உன்ன தொந்தரவு செய்ய மாட்டேன் னு அப்புறம் ஏன் பையப்புடுற அவுங்க வீட்டுல இருந்து கிளம்பும் போது இனிமே என்ன தொந்தரவு செய்யாத னு சொல்லிடுவம் அவ்ளோ தானா "

    "அது சரி இப்போ வீட்டுக்கு தான் கூட்டிட்டு போறான் னு என்ன நிச்சயம் "

    "கண்டிப்பா நா உன்ன கடத்திட்டு போகல, என்னோட அண்ணா வீட்டுக்கு தான் கூட்டிட்டு போறேன் அங்க என் அண்ணி அண்ணியோட அம்மா அண்ணியோட தங்கச்சி எல்லாரும் இருக்காங்க அதுனால பயப்படாம இரு "

    நாங்க ரெண்டு பேரும் பேசுறத கேட்டுட்டு இருந்துருக்கான்,
    என் பக்கத்துல உக்காந்து இருந்த பானு வ பக்கத்துக்கு சீட் கு மாரி உக்கார சொன்னான் அவளும் மாறிட்டா (துரோகி ).
    அதுனால என் பக்கத்துல வந்து உக்காந்தான்

    "நீ பயப்படறது நியாயம் தான் முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் திடீர்னு உன் முன்னால வந்து நாளைக்கு என் கூட வா சொல்லி இழுத்துட்டு போனா யாராக இருந்தாலும் பயம் வரும் அது உன் தப்பு இல்லை . சரி நா என்ன பத்தி சொல்றேன் . என் பேரு பிரவீன் நா வேலை தேடிட்டு இருக்கேன். எனக்கு அப்பா இல்லை அம்மா இல்லை அண்ணா மட்டும் தான் அண்ணா காதல் திருமணம் . என்னோட அன்னிக்கு அம்மா மாட்டுக்கும் தான் அப்பா இல்லை அதுனால எல்லாரும் ஒரே குடும்பமா இருக்கோம். அண்ணியோட தங்கச்சிக்கு மாப்பிள பார்க்குறாங்க கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆயிடும். நா பகுதி நேரமா இப்போ போட்டோ studio ல வேலைக்கு போறேன்."

    "ஆமா நீங்க ...."

    "நான் ஏன் உன்ன இப்போ எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் எனக்கு உன்ன எப்படி தெரியும்னு தானா கேக்க வர்ற "

    "இல்லை "

    "இல்லை யா ,"

    "ம்ஹும் "

    "பின்ன நான் ஏன் உன்ன கூட்டிட்டு போறேன் சொல்லு பார்ப்போம் "

    "நீங்க என்ன எங்கயாவது பார்த்து இருப்பிங்க பிடிச்சு இருக்கும் அதான் வீட்டுல காட்ட கூட்டிட்டு போறீங்க "

    "பா செம "

    "சாம்பிள் காட்ட கூட்டிட்டு போறிங்களா இல்லை பொண்ண காட்ட கூட்டிட்டு போறிங்களா னு தான் தெர்ல "

    உண்மையிலேயே அதுதான் என் மனசுல இருந்த கேள்வி

    "இங்க பாரு, நா உன்ன முதல பார்த்தது ஒரு கல்யாண வீட்டுல பார்க்க அவ்ளோ அழகா இருந்த, உன் பேச்சு, உன் சிரிப்பு, உன் கண்ணு,

    (அய்யயோ போச்சுடா
    இப்டி சொன்னா எந்த பொண்ணுக்கு பிடிக்காது னு சொல்லுவா நம்மள வர்ணிக்க தான் நம்ம சொக்கி போய்டுவோமே )
    நீ பேசின விதம் இதெயெல்லாம் விட நீ சின்ன புள்ளைங்க கிட்ட விளையாடும் போது, ஐயோ!!! உன்ன அப்போ எவன் பார்த்தாலும் செத்தான். அது ஒன்னு போதும் உன்னை காதலிக்க "
    "என்னது காதலா"
    "ஆமா நீ ஒன்னும் சாம்பிள் பீஸ் இல்லை ஒரிஜினல் பீஸ் போதுமா "
    அத அவன் சொல்லி முடிக்க பஸ் ஸ்டாப் வர கரெக்டா இருந்துச்சு
     
    • Like Like x 2
    • Winner Winner x 1