• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

பஞ்சாப்

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
268
Points
28
1603356063987.png

புதுதில்லி, அக். 21-

பஞ்சாப் மாநிலத்தில் சௌர்யா சக்ரா விருது பெற்ற தோழர் பல்வீந்தர் சிங் படுகொலை செய்யப்பட்டதற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இப்படுகொலை தொடர்பாக பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

இது தொடர்பாக அகில இந்திய சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பஞ்சாப் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்துடன் தன்னை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டிருந்தவரும், பிகிவிந்தைச் சேர்ந்தவருமான தோழர் பல்வீந்தர் சிங் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. தோழர் பல்வீந்தர் சிங் சௌர்யா சக்ரா விருது பெற்றவர். இவர், 2020 அக்டோபர் 16 அன்று பிகிவிந்தில் தன்னுடைய இல்லத்தில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பல்வீந்தர் சிங், பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பயங்கரவாதம் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் அதற்கெதிராக உறுதியான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தவர். காலிஸ்தான் இயக்கத்தினரால் 42க்கும் மேற்பட்ட தடவை கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றில் தப்பித்ததுடன் அவர்களைப் புறமுதுகிட்டு ஓடவைத்தவர். அந்த சமயத்தில் அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் இருந்தார். மாநிலத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் நடவடிக்கைகளில் தன்னைத் தீவிரமாகப் பிணைத்துக்கொண்டிருந்தார்.

தீவிரவாதத்திற்கு எதிரான இவருடைய போராட்டத்திற்காக, மத்திய அரசு இவருக்கும் இவருடன் இவரது துணைவியார் ஜகதீஷ் கவுர், சகோதரர் ரஞ்சித் சிங், சகோதரரின் துணைவியார் பால்ராஜ் கவுர் ஆகியோருக்கும் சௌர்யா சக்ரா விருதுகள் வழங்கி கவுரவித்திருக்கிறது. இவ்வாறு சௌர்யா சக்ரா விருதுகள் பெற்ற ராணுவம் அல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நான்கு பேர் மட்டுமேயாகும்.

அவர் குடும்பத்தினர் மீது அச்சுறுத்தல்கள் தொடர்ந்து இருந்து வந்தன. எனினும் அதனைக் கவனத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்காதது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கு அளித்துவந்த பாதுகாப்பு வளையத்தை அரசு சென்ற ஆண்டு, திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது. இக்குடும்பத்தினருக்கு பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இது தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தின் காவல்துறைத் தலைவரையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. எனினும் அவை அனைத்தையும் அவர் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோருகிறது.

பல்வீந்தர் சிங் கொலையில் ஈடுபட்ட உண்மையான கயவர்களையும், சதிகாரர்களையும் கண்டுபிடித்திட பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையின்கீழ் நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோருகிறது. பஞ்சாப்பில் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடிய அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திட மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் கோருகிறது.

தோழர் பல்வீந்தர் சிங்கிற்கு ஒரு தியாகிக்கு உரிய அனைத்து மரியாதைகளையும் அளித்திட வேண்டும் என்றும், அவர் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோருகிறது.

தோழர் பல்வீந்தர் சிங் தியாகத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அவருடைய துணைவியாருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Last edited:

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
268
Points
28

ஜாலியன் வாலாபாக் படுகொலை

1603461827820.png

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.
1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர்.

2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.

ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.

"என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது..

ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற பஞ்சாப் இளைஞன் சபதம் செய்தான்...

சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங்.
உத்தம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இதை “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறி காந்தி அறிக்கை வெளியிட்டார்.
நேருவும், காந்தியும் பஞ்சாப் காங்கிரஸ் அரசை,

உத்தம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்ற வைத்தனர்.

இதனை கடுமையாக எதிர்த்து, உத்தம் சிங்கின் செயலைப் பாராட்டி கடிதம் எழுதினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இதனால் காந்தியின் வெறுப்புக்கு ஆளானார்.

காந்திக்கும் நேதாஜிக்கும் பிளவு ஏற்பட்டு காந்தியால் நேதாஜி காங்கிரசில் இருந்து திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.
"தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்துவிடுங்கள்.

இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்"
என்று முழங்கினர் உத்தம் சிங்.

ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக்கயிறை முத்தமிட்டார்.
“தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சாது சிங்,

“உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்துவர வேண்டும்” என்று மைய அரசிடம் கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, மிச்சம்மீதி எலும்புக்கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.

உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜ மரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.
 
Top