1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Pro membership upgrade has been cancelled , so do not post any threads or messages regarding Pro membership in the Forum
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

படித்தலில் பிடித்தது ( தோழர் திருமுருகன் காந்தி )

AnonyMous Oct 6, 2017

  1. AnonyMous

    AnonyMous Active Member Senior Member

    தமிழர்கள்தான் இனி தமிழ்நாட்டை ஆள வேண்டும், அதிகாரம் செய்ய வேண்டும்’ என்கிற தமிழ் தேசியப் பார்வையை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

    ``எங்களுக்கான விடுதலை நோக்கி யார் வழி நடத்துகிறாரோ, அவர் தலைமை வகிக்கட்டும். மொழி எங்களுக்குப் பிரச்னை இல்லை. தலைவர் லெனின், கிர்கிஸ்தான், கசகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா ஆகிய நாட்டு மக்களின் விடுதலைக்குப் போராடியவர்தானே? ஜார்ஜியாவுல இருந்து வந்த ஸ்டாலின், ரஷ்ய மக்களின் விடுதலையை முன்னிறுத்த வில்லையா? அது சாத்திய மானதுதானே! தேசிய இன விடுதலையை முதன்முதலில் லெனின் கோரினார். ஸ்டாலின் அதை வரையறுத்தார். மொழி என்பதைத் தாண்டி அனைத்து மக்களுக்கான நியாயத்தைப் பேசக்கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

    தமிழ் தேசிய விடுதலைக் கருத்தியலுக்குப் போராடக்கூடிய யாராக இருந்தாலும் எங்கள் தோழர்கள்தான். ஈழப்போர் நடந்த சமயத்தில் தீக்குளித்தவர்களில் பிறமொழி பேசக்கூடிய சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் இருக்கத்தானே செய்தார்கள். அவர்களை எது நம்முடன் இணைத்தது? மனிதநேயம் என்கிற ஒரு புள்ளியில் தானே அவர்கள் ஒன்றிணைந்தார்கள். அதை மறுக்க முடியுமா? தமிழர்கள்தான் ஆள வேண்டுமென்கிற ஒரு தூய்மைவாதத்தைத் தமிழ் தேசியம் இதுவரைக்கும் வைக்கவில்லை. பெருஞ்சித்திரனாரோ, தமிழரசனோ, புலவர் கலியபெருமாளோ அவர்களுடைய நீட்சியாக வந்த எந்தத் தலைவர்களோ, இப்படிப்பட்ட ஒரு கருத்தியலை முன்வைக்கவில்லை. பிறமொழி பேசுபவர்களை அந்நியப்படுத்துவது, அவர்களுக்கு அதிகாரம் தர மறுப்பது என்றெல்லாம் தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருந்தால், சிங்கள அரசுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும். தமிழ் தேசியம் என்பது மொழிப்பாகுபடற்ற உழைக்கின்ற மக்களை ஒன்றிணைக்கிற ஒரு கருத்தியல்...

    :- தோழர் திருமுருகன் காந்தி


    [​IMG]
     
    • Like Like x 1