1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
    Dismiss Notice
  2. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
    Dismiss Notice

புரட்டாசி மாதத்தின் சிறப்பு...

Luv U Oct 12, 2017

  1. Luv U

    Luv U Senior Member Senior's

    Credit:
    $584,352.25
    முன்னோர்களின் முதுமொழி..

    "பொன் உருக வெயில் காயும்
    மண் உருக மழை பெய்யும்"

    புரட்டாசி மாதத்தின் சிறப்பு...

    செப்டம்பரின் பிற்பகுதியையும் அக்டோபரின் முற்பகுதியையும் உள்ளடக்கிய புரட்டாசி மாதத்தின் சிறப்பு...

    புவியின் வட அரைக்கோளத்திற்கு இலையுதிர் காலம் ஆரம்பிக்கும் நாளாகிய இலையுதிர்கால நிலநடுக்கோடு நேர் நாளில்(Autumn equinox sep 22) வட அரைக்கோளத்திற்கும், தென் அரைக்கோளத்திற்கும் கதிரவனின் கதிர்கள் நேராக கிடைக்கின்றன...

    இந்த காலத்தில் தான் புரட்டாசி மாதம் ஆரம்பிக்கின்றது... கடகரேகை வெப்பமண்டலப்பகுதியில் இருக்கும் நமக்கு முதல் பாதி பெரும் வெப்பமாகவும் இரண்டாம் பாதி இலையுதிர்காலம் மற்றும் வடகிழக்குப்பருவக்காற்று புயல் மழையாகவும் இருக்கின்றது...

    இதை அறிவியலில் அக்டோபர் வெயில் என்றும் அக்டோபர் புயல் என்றும் குறிப்பிடுகின்றனர்...

    பல்லாண்டு காலம் தாங்கள் பெற்ற பட்டறிவின் மூலம் எவ்வளவு எளிதாக முன்னோர்கள் கூறிச்சென்று விட்டனர்...

    சென்னையில் தற்போது அடிக்கும் வெயிலும் நடுநடுவே பெய்யும் கனமழையும் இதை நினைவு படுத்துகின்றன..