1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Pro membership upgrade has been cancelled , so do not post any threads or messages regarding Pro membership in the Forum
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

மணவாளன்

Alpha Disaster Aug 5, 2017

  1. கல்லூரி முதல் நாள். அவனுக்கு ஒரே படபடப்பு. கிராமத்து பையன். இந்த நகரத்தின் பிரம்மாண்டம் அவனைப் பயமுறுத்தியது. ஆங்கிலம் வராது. பெண்கள் பேச்சோடு நிறுத்தம். இங்கேயோ அவன் பார்ப்பது எல்லாம் அதிர்ச்சி. தொட்டு பேசறாங்க. எந்த ஒளிவு மறைவும் இல்ல ஆண்கள் பெண்கள் கிட்ட. நவநாகரீக வாழ்க்கை. எப்படி இருக்கோமோ?

    அவன் பயந்த மாதிரி இல்லை. எல்லோரும் ஜாலியா இருந்தாங்க. ராக்கிங் இருக்குமோனு நினைச்சா? இல்ல. சொல்ல போன சேர்ந்த முதல் வாரத்தில்  இறுதி ஆண்டு மாணவர்கள் இவர்களுக்காக கலை நிகழ்ச்சி நடத்தினர். ஆனாலும் அவன் சிறிது தான் மாறினான். பெண்களிடம் சிறிது  ஒதுங்கியே இருப்பான்.


    முதலாண்டு முடிந்தது. இராண்டாம் ஆண்டு தொடக்கம். அவள் வந்தாள் வேறு கல்லூரியில் இருந்து மாறி இங்கு வந்து சேர்ந்தாள். அவன் அவளைக் கண்டு வியந்தான். அவனுது மனமும் உடலும் அவள்  உனக்குரியவள் என்று சொல்லியது. 

    அவனுக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை. அவன் நகரத்து மாணவர்களின் உடல் மொழி இல்லாதவன். தோற்றமும் சராசரி தான். பேச்சும் இல்லை அவ்வளவாக. இப்பொதுக்கு அந்த வகுப்பில் அவளிடம் பேசாதவன் அவன் மட்டுமே. அதிகபட்சமாக அவளிடம் அவன் பேசியது, அந்த பேப்பர் கொஞ்சம் எடுத்து கொடுங்க என்று தான்.

    அவன் வந்தான். முதலாமாண்டு. இவளை விட சின்னவன் தான். ஆனால் கண்டவுடன் காதலாம் அவர்களுக்குள்ளே. நம்மவனால் தாங்க முடியவில்லை. அவளிடம் சொன்னான் , சின்ன பையன், காதல் தவறு என்று. அன்றோடு அவள் பேச்சு நம்ம ஆளுடன் முடிந்தது. அந்த பையனோ கேள்விப்பட்டு  இவனை அடிக்க ஓங்க, கிராமத்து பையன் அல்லவா, நம்ம ஹீரோ திருப்பி அடிச்சிட்டாரு. அப்பரும் அது குழு சண்டை ஆக போயி,  அது தான் அந்த கல்லூரியின் முதல் சண்டை மாணவர்களிடம். நான் தான் குற்றவாளி.

    சிறு எச்சரிக்கையுடன் தப்பித்தான். அவள் அவனிடம் பேசவில்லை. அதைப் போலவே கூட இருக்கும் சில பெண்களும் பேசல. இவனோ இதயம் முரளி மாதிரி பேசாம ஓரமா நின்னு பார்த்து இருந்தான். கல்லூரி முடிஞ்சது. இப்போ அவன் தன் ஊரில், விவசாயம் பார்த்து இருந்தேன்.

    இப்போ அவனும் அவளும் கணவன் மனைவியாய். ஆனால் அவள் அவன் மனைவி இல்லை. என்ன நடந்தது இடையில்?