1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

முட்டாள் தனம்

intelligent idiot Aug 17, 2018

  1. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

    அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
    .
    [​IMG]மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.

    பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .

    குரங்குக்குக் கொஞ்சம் பயம்
    வந்து விட்டது.

    கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

    [​IMG]ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

    [​IMG]"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
    இது கொத்துனா உடனே மரணந்தான்.

    குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது

    " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
    *
    [​IMG]தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,

    எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,

    மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.

    "ஐயோ. புத்தி கெட்டுப் போய்
    நானே வலிய வந்து இந்த
    மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".

    குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
    நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.

    கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
    *
    [​IMG]அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.

    குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
    *
    [​IMG]சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

    அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.

    [​IMG]குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.

    அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

    அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
    *
    [​IMG]குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

    *
    [​IMG]நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

    [​IMG]கவலைகளை விட்டொழியுங்கள்.
    *******
    [​IMG]மகிழ்ச்சியாய் இருங்கள், , ,

    [​IMG]ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்

    [​IMG]பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்

    [​IMG]கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்

    [​IMG]துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்

    [​IMG]பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

    [​IMG]எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

    [​IMG]அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

    [​IMG]ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

    [​IMG]பசிக்கும் போது உணவருந்துங்கள்.

    பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்
     
  2. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest

    உலகநீதி – Ulaganeethi

    ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
    ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
    மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
    வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
    போகாத இடந்தனிலே போக வேண்டாம்
    போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
    வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
    மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
    மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
    தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
    தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
    சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
    சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
    வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
    குற்றம்ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
    கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
    கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
    கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
    கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
    கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
    மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
    வாழாமல் பெண்ணை வைத்துத்திரிய வேண்டாம்
    மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்
    வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
    வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்
    தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
    தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
    வாழ்வாரும் குலவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
    வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்
    மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
    மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
    முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
    வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
    வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
    சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
    திருக்கை வேலாயுதனை செப்பாய் நெஞ்சே
    கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
    கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
    பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
    பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
    இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
    எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
    குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன்
    குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே.
    சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
    செய்நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
    ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
    உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
    பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
    பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
    வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
    மண்நின்று மண்ஓரம் சொல்ல வேண்டாம்
    மனம்சலித்து சிலுக்கிட்டு திரிய வேண்டாம்
    கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
    காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம்
    புண்படவே வார்த்தைகளை சொல்ல வேண்டாம்
    புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
    மண்அளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
    மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
    வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
    திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
    தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
    இறந்தாலும் பொய்தன்னை சொல்ல வேண்டாம்
    ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
    குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
    குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே
    அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
    அதுஏது இங்குஎன்னில் நீசொல்லக் கேளாய்
    தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன்கூலி
    சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
    வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
    மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி
    இன்சொல்லுடன் இவர்கூலி கொடாத பேரை
    ஏதேது செய்வானோ ஏமன் றானே.
    கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
    கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
    தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
    துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்
    வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
    வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
    மாறான குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
    ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
    அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
    ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
    உண்மையாய்ப் பாடிவைத்த உலகநீதி
    காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
    கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
    போதமுற்று மிகவாழ்ந்து புகழுந்தேடி
    பூலோகம் உள்ளளவும் வாழ்வர் தாமே.
     
    • Dumb Dumb x 1
  3. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    யோவ் நீ பகுத்தறிவு சொல்லுற சில நேரம் இப்படி வேற ஒழுங்க ஒரு பக்கம் நில்லு
     
  4. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest


    Ithula Unakku Vendiyatha Nee Eduthuko. Enakku Vendiyatha Na Eduthukuren.
    Paguthu Arinthu Kol.
     
  5. kulothungan

    kulothungan Member

     
  6. kulothungan

    kulothungan Member

    ithuku :D innoru nalla palamoli :D solluvangaa :D Muthalaa :D thaaan kundila ullaa :D shit wash pannitu aduthavan ass pakkanumnu :D athu unaku poruthum polavay
    இது தாங்கல் சொன்ன அதே பழ மொழிதான்

    "எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்"

    இதுவும் நீங்க சொன்னதுதான்

    கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் கொடுத்தால் உங்களுக்கு ஏன் கோபம் வருது .



    நீங்க சொல்ற மாதிரி உங்க குண்டிய கழுவிட்டு அடுத்தவனுக்கு அறிவுரை சொல்லுங்க
     
    • Funny Funny x 1