• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா?

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
273
Points
28
பண்பாட்டின் வரலாற்றை எழுத நியமிக்கப்பட்ட சாதியக்குழுவை உடனே கலைக்க வேண்டும்..

12000 ஆண்டுகால இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்கு கலாச்சாரத்துறை அமைச்சர் பதில் சொல்லியிருக்கிறார்.

இந்தக்குழுவில் பன்மைத்தன்மை இல்லை. தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, சிறுபான்மையினரோ, தலித்தோ, பெண்ணோ இடம்பெறவில்லை. இந்து உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மத்திய அரசு செம்மொழி என்று அங்கீகரித்த தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் ஆய்வாளர்கள் யாருக்கும் இதில் இடமில்லை . ஆனால் சாதிசங்க தலைவருக்கு இடமிருக்கிறது.

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா?
வேத நாகரிகத்தினைத் தவிர வேறு நாகரிகம் இல்லையா?
சமஸ்கிருதத்தை தவிர ஆதி மொழி இங்கு இல்லையா?


ஜான் மார்ஷல், சுனிதிகுமார் சட்டர்ஜி துவங்கி ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர்.பாலகிருஷ்ணன் வரையிலான
ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளையெல்லாம் நிராகரித்து புராணங்களையே வரலாறு என நிறுவுவதற்கே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எப்படி மண்ணுக்குள் இருக்கும் வேர்களை விமானங்களில் பறந்துகொண்டு பார்க்க முடியாதோ அதேபோல இந்த மண்ணின் பண்பாட்டினை சாதியத்தின் பீடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் ஒருபோதும் எழுத முடியாது.


1600798383355.png
 
Last edited:

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
273
Points
28
CPIM Lok Sabha MP Su Venkatesan on Monday demanded that a committee formed by the Union Government to study the country's culture be dissolved as it lacked diversity in its members. The Parliamentarian who represents Madurai questioned if this committee had been formed to represent 'epics' as history and to ignore the works of researchers.

Speaking in the Lok Sabha, Venkatesan said, "A 16 member committee has been formed to study Indian culture and its growth, according to the Culture minister. There is no diversity in this committee. There are no South Indians, North East Indians, minorities, women or Dalits in this committee. There are only upper-caste men. But there is a head of a caste group here. Is there no India below the Vindhyas?"

He further pointed out that the upper caste members would not be able to unearth the true culture of the country.

"Other than what the Vedas teach is there no other way of life? Is there no other language but Sanskrit? The findings of several researchers, from Punit Kumar Chatterjee, Iravadham Mahadevan and Tony Joseph to R Balakrishnan,have been ignored. Has this committee been formed to depict epics as history? Just like you can't see the roots under the soil from an aeroplane, those who are high in the caste hierarchy can't write about the culture of this country. So this committee should be dissolved," he demanded.

The 16-member committee has among others K N Dikshit, Chairman, Indian Archaeological Society, New Delhi and former Joint Director General, Archaeological Survey of India as its members.

Critics had earlier pointed out that the committee did not have any women and was 'packed' with north Indians, with little representation of south Indians.

Dravida Munnetra Kazhagam (DMK) MP Kanimozhi was amongst the first leaders to speak on the issue.

"Why is there not even a single member from the minority community in the expert committee to conduct a study on Indian culture. Can’t minorities and Dalits speak about Indian culture? Or are they ineligible?" she had asked.

Former Karnataka Chief Minister and Janata Dal (Secular) leader HD Kumaraswamy had demanded that the Union government reconstitute the committee.

"It is very unfortunate that the expert committee does not have any Kannadigas or South Indians who know the Dravidian culture. The committee does not even have a woman member," Kumaraswamy tweeted.

"There are doubts about the objectiveness of the proposed study as the committee is full of those who appear to be having prejudices over culture, history and heritage besides being fully occupied by north Indians. There is a dire need to reconstitute the study committee," he added.

 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
273
Points
28

கலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திடுக! குடியரசுத் தலைவருக்கு 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்​


1600997308561.png1600997330359.png1600997348593.png

பெறுனர்,

இந்தியக் குடியரசுத் தலைவர்,

மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு,

பொருள்: இந்திய கலாச்சார வரலாறு ஆய்வுக்குழு குறித்து

நாங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு முக்கியமான பொருளை உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்து உங்களின் உடனடித் தலையீட்டையும் நாடுகிறோம்.

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திருமிகு பிரகலாத் படேல் அவர்கள் நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 14 அன்று எழுத்துருவில் அளித்த பதிலில் இந்தியாவின் கலாச்சார தோற்றுவாய் பற்றியும், அதன் பரிணாமம் குறித்தும் 12000 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்று ஆய்வுக்குட்படுத்த ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நமது நாடு பன்மைத்துவ கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்ட பெருமை மிக்க மரபு வழியைக் கொண்டதாகும். ஆகவே அதன் ஆய்வுக்கு இம் மாபெரும் நாட்டின் பன் கலாச்சாரங்கள் குறித்த ஆழமான உட்பொருள்கள் இயல்பாகவே தேவைப்படுகின்றன.

நாங்கள் உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விழைவது என்னவெனில், இத்தகைய பன்மைத்துவத்தை பிரதிபலிக்கக் கூடிய அந்த 16 பேர் கொண்ட நிபுணர் குழு இல்லை. தென்னிந்தியர்கள் எவரும் இல்லை. வடகிழக்கு இந்தியர்கள் இல்லை. சிறுபான்மையினர் இல்லை. தலித்துகள் இல்லை. பெண்கள் இல்லை. அநேகமாக அக் குழுவின் எல்லா உறுப்பினர்களுமே இந்திய சமுகத்தின் சாதிய அடுக்கில் உச்சத்தில் அமர்ந்திருக்கிற ஒரு சில சமூகக் குழுக்களைச் சார்ந்தவர்களே.

தென்னிந்திய மொழிகளின், பெருமைமிக்க வரலாற்றையும் மத்திய அரசாலேயே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட, ஆய்வாளர்கள் யாரும் அக் குழுவில் இல்லை.

அக் குழுவின் உள்ளடக்கம் பல கேள்விகளை எழுப்புகிறது. விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகம் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதம் தவிர தொன்மை மொழி ஏதும் இங்கு இல்லையா? பாலின பார்வையற்ற, தனித்துவமிக்க பன் தேசிய இனங்கள், பல்வேறு சமூகக் குழுக்களைப் புறம் தள்ளியுள்ள இக் குழுவின் உள்ளடக்கம் இது அமைக்கப்பட்டுள்ள நோக்கம் குறித்த ஐயங்களையே எழுப்புகிறது.

மிகச் சிறந்த ஆய்வாளர்களான ஜான் மார்ஷல், சுனித் குமார் சாட்டர்ஜி, ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர். பாலகிருஷ்ணன் போன்றவர்கள் இத் துறைக்கு பெரும் பங்களிப்பை நல்கியுள்ளனர். இந்த நேர்மறையான பங்களிப்புகளையெல்லாம் இக் குழு சிதைத்துவிடுமோ என அஞ்சுகிறோம். இத்தகைய உள்ளடக்கம் கொண்ட இக் குழு அறிவியல் பார்வையோடு ஆய்வு செய்ய இயலாது. மேலும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழி வகுத்துவிடும் எனக் கருதுகிறோம்.

இப் பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு, அரசு அமைத்துள்ள இக் குழுவை கலைக்க அறிவுறுத்துமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
 
Top