1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.
  1. THIRAVIYAM

    THIRAVIYAM New Member

    அசுரன்-ஒரு திறனாய்வு
    [​IMG]
    அசுரன் எனும் படத்தின் விமர்சனதிற்கு செல்லும் முன் முதலில் அசுரர்கள் என்று அழைக்கபடுபவர்கள் யார் என்பதை முதலில் ஒரு சிறு முன்னோட்டமாக பார்த்துவிடுவது நல்லது.பழைய வேதங்களிலும் புராணங்களிலும் அசுரர்கள் என்று அழைக்கபடுபவர்கள் தேவர்கள் அதாவது கடவுள்களாக பாவிக்கபடுபவர்களுக்கு
    எதிரிகளாக மிகுந்த பலசாலியாக எதையும் எதிர்கொள்ளும் வல்லமை பொருந்தியவர்களாக பாவிக்கபடுள்ளர்கள்.

    கதை
    ல்லா தனிமனிதனின் வட்டத்திற்குள்ளும் ஒரு அசுரன் எப்பொழுதும் உறங்கி கொண்டு தான் உள்ளான்.
    அப்படிப்பட்ட ஒரு அசுரன் கதையின் பிரதான நாயகர்களான சிவசாமி முருகன் சிதம்பரம் ஆகிய மூவருக்குள்ளும் விழித்தெழும்பொழுது அவர்கள் மூவருக்கும் நடக்கும் சம்பவங்களும் ஒரு தகப்பனாக சிவசாமி தன் பிள்ளைகளின் வாழ்கையை காப்பாற்ற அவன் சந்திக்கும் அவமானங்களும் அவன் அவர்களுக்காக தாங்கிகொள்ளும் வலியும் ரணமும் ரத்தமும் சதையுமாக காட்சிவடிவமாக நமக்கு விருந்தாக தந்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
    இக்கதை பூமணி எழுதிய வெக்கை என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்டுலது.பொதுவாக நாவலை தழுவி ஒரு படம் எடுப்பது என்பது அவ்வளவு
    எளிதான காரியம் அல்ல.நாவலாக படிக்கும் பொழுது இருக்கும் அந்த சுவாரசியம்
    படமாக வரும் பொழுது அதன் கதாபாத்திரங்களை வடிவமைப்பது சிரமமான காரியம்.ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் அணைத்து கதாபாதிரங்களையும் மிக லாவகமாக கையாண்டு உள்ளார்.

    நடிப்பு
    தனுஷ் சிவசாமி என்னும் கதாபாத்திரமகவே வாழ்ந்துள்ளார்.இளவயதில் துடிப்புள்ள இளங்கனாகட்டும் மூன்று கொழந்தைகளுக்கு வரும் அப்பாவாகடும் தன பிள்ளைகளுக்கு துன்பம் என்று வரும் பொழுது அவர் முகபாவனைகாலையே நம்மை மிரட்டும் வெறித்தனம் ஆகட்டும் மனுஷன் பின்னி பெடலேடுத்ருகார்.தமிழ் சினிமாவில் கமலஹாசன் கு பிறகு method acting என்னும் முறையை தனுஷ் ஓரளவுக்கு கையிலெடுத்து அதில் வெற்றியும் கண்டு விட்டார் என்றே நான் அறிகிறேன் .
    தனுஷுக்கு எந்த அளவுக்கு படத்தில் screen space உள்ளதோ அதே அளவுக்கு பச்சையம்மாவாக வரும் மஞ்சு வாரியர் தனுஷின் மகன்களாக வரும் teejay ken அவர்களின் மாமாவாக வரும் பசுபதி வக்கீலாக வரும் பிரகாஷ் ராஜ் ஆடுகளம் நரேன் அனைவருகும் உள்ளதோடு அனைவரும் நடிப்பை கனகட்சிதமாக செய்துள்ளனர்

    ஒளிப்பதிவு
    வேல்ராஜ் இன் ஒளிப்பதிவு நம்மை அப்படியே பசுமரத்தாணி போல் கதைகுள்ளேயே நம்மை பையனிக்க வைக்கின்றது.அப்படிப்பட்ட மலைப்ரதேசத்தில் அவர் எடுத்துள்ள top angle shots low lighting shots action sequences இல் வரும் slow motion shots அனைத்தையும் நன்றாக கையாண்டுள்ளார்.
    STUNT CHOREOGRAPHY
    peter hein இப்படத்தில் செயற்கையாக மற்ற மசாலா படங்களில் வரும் காட்சியமைப்பு முறையை விட இந்த படத்தில் மிக தத்ரூபமாக துல்லியமாக எதார்த்தமான முறையில் சண்டை காட்சிகளை வைத்திருப்பது காட்சிகளை எதுவும் மிகைபடுத்தாமல் ரசிகும்படியாகவும் அதே சமயத்தில் சலிப்பு தட்டாமல் பார்க்க வைக்கின்றது .
    இசை
    gv இன் இசை முக்கியமாக பின்னணி இசை படத்தின் மூன்றாவது தூணாக உள்ளது .வா அசுரா இசை வரும்போழுதேலாம் உடம்பில் goose bumbs moments வருவது நிச்சயம்.
    இயக்கம்
    இந்த அணைத்து துறைகளையும் ஒன்றாக கட்டியணைத்து கப்பலின் captain போல மிக சிறப்பாக எவ்வாறு ஒரு சிற்பி கல்லை செதுகுவானோ அதே போல ஒவ்வொரு frame லும் அவரின் உழைப்பு மிக நன்றாக தெரிகிறது.முக்கியமாக அவர் எடுத்துக்கொண்ட கதைக்களம் மிக வீரியமிக்க கதையாக இருந்தாலும் எந்த பக்கம் மும் சமரசம் செய்து கொள்ளாமல் இச்சமூகத்திற்கு நம் முன்னோர்களில் சிலர் எப்படி ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பலரை துன்புறுத்தியும் ஏமாற்றியும் வந்துள்ளனர் என்பதை செருப்பால் அடித்தாற்போல் கதை நாயகன் சிவசாமி மூலமாக சொல்லி இருப்பது மிக சிறப்பு .இது மேல் தட்டு வர்கதிற்கான ப(டா)டம் மட்டும் அல்ல நம் முன்னோர்கள் எவ்வுளவு போரட்டங்களை சந்தித்து அவர்களுக்கான
    சலுகைகளை பெற்று தந்ததை இக்கால இளைஞர்கள் மறந்து விடகூடதென அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
     
    Last edited: Oct 7, 2019
    • Winner Winner x 1