• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

About NEET

Luv

Member
Senior Member
Joined
Aug 2, 2017
Messages
137
Points
18
இந்த வருடம் பிளஸ் டூ எழுதும் மாணவ மணிகளுக்கும் , அவர்தம் பெற்றோர்களுக்கும்......
( ஒரு மருத்துவரின் பகிர்வு)

*உங்களது எண்ணம் மருத்துவராக வேண்டும் என்றால் சில உண்மைகளை உணர்ந்து கொள்ளுங்கள்*...

1. நீட் மட்டுமே தகுதித் தேர்வு...

2. நீட்டை பற்றிய எல்லா தகவல்களையும் திரட்டிக் கொள்ளுங்கள்...

3. நீட் பாடத்திட்டம் , மாநில பாடத்திட்டத்திலிருந்து வேறுபட்டது...

4. முறையான பயிற்சியை முதலிலிருந்தே ஆரம்பியுங்கள்..

5. நீட் பற்றிய எந்த விவாதங்களையும் சமூக வலைத்தளங்களிலோ, தொலைக்காட்சி சேனல்களிலோ பார்ப்பதைத் தவிருங்கள்...

6. நீட்டைப் பற்றிய எந்த எதிர்மறையான எண்ணங்களையும் தவிருங்கள்...

7. நீட் நல்லதா, கெட்டதா, தேவையா, வேண்டாமா போன்ற விவாதங்களில் ஈடுபடாதீர்கள்...

8. நீட் நிதர்சனம்.. அதற்கு தயார் படுத்திக் கொள்வது மட்டுமே தீர்வு என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.....

அதைவிட முக்கியமான உண்மைகள்....

1. மருத்துவம் மட்டுமே படிப்பல்ல..
மருத்துவம் படிக்காமல் நன்றாக வாழ்பவர்கள் ஏராளம்...

2. மருத்துவம் சேவையென்று நினைத்து உங்களை ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்...
அது ஒரு தொழில் அவ்வளவு மட்டுமே...

3. திரைப்படங்களில் காட்டப்படுவது போல, இருதய ஓட்டைகளை அடைப்பதற்கும், மூளைக் கட்டிகளை அகற்றுவதற்கும் , அடிப்படை தகுதிக்கே பன்னிரண்டு வருடங்கள் படிக்க வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்...

4. MBBS முடித்து அதற்குப் பிறகு மேற்படிப்பு படிப்பதற்கான தேர்வுகள் இன்னும் கடினமானவை...
அதில் இடம் கிடைக்காமல் கூட தற்கொலைகளும் நடக்கின்றன என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்....

5. வேறு எந்த வேலையையும் விட சவால்களும் , ஆபத்துகளும் நிறைந்த துறை என்பதை மறவாதீ்ர்கள்...

6. மருத்துவர்கள் நரகத்தில் வாழ்கின்ற தேவர்கள்....

7. ஒளிமயமான எதிர்காலம் என்ற புகழை மருத்துவத் துறை இழந்து பலகாலம் ஆகிவிட்டது....

8. ஆனாலும் மருத்துவம் ஒரு தன்னிகரற்ற ஒரு துறையே.....

இது மருத்துவம் படித்தவர்களால் ஒப்புக்கொள்ளப்படும் உண்மை. தீரவிசாரித்து செயல்படுங்கள். வெற்றி நமதே!
 
Top