• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

#anitha sucide only focus pannuranga #doubt behind

R

! RaVaNaN !

Guest
Bharathi Sonnathu Mathiri......Aha Vegundu Elunthathu Paar Puratchi.

Maanavar Otrumai Vellattum.

Study & Struggle.
 
  • Like
Reactions: Fox

THIRAVIYAM

Active Member
Senior Member
Joined
Sep 5, 2017
Messages
141
Points
28
நாம் இன்று கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் அம்மாணவி அனிதா அன்றே விடை கூறிவிட்டாள் ...!
மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று ஊடகங்கள் பேட்டியின் போது மருத்துவம் படித்து ஏழைகளுக்கு சேவை செய்வோம் என்ற அக்மார்க் வாசகத்தை கூறாமல் நான் மட்டும் கஷ்டப்படவில்லை என்னை போன்ற ஏழை நலிந்தவர்கள் நெறைய பேர் இருக்கிறார்கள் அவர்களுக்காகவாது போராடனும் என்று 17 வயதிலேயே யோசித்திருக்கிறாளே அவளா கோழை ...அல்ல அவள் ஒரு விதை... கிளைகள் இத்தருணத்திற்கு பிறகாவது பரவட்டும் என்று நம்புவோமாக ...!
 
Last edited:

intelligent idiot

Innocent
Senior Member
Joined
Aug 16, 2017
Messages
465
Points
43
ஊடகங்கள், பத்திரிகைகள் வழங்கும் செய்திகளில் இருந்தும், அறிக்கைகளில் இருந்தும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளில் இருந்தும் என்னை தனிமை படுத்தி யோசித்து பார்க்கிறேன்.

பாதிப்பு எந்த திசையில் இருந்து வந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கி, தமிழகத்தை பாதுகாத்து இன்று நம்மை விட்டு சென்றிருக்கும் மறைந்த முதல்வரின் அருமை தற்போது எதிர்கட்சி உட்பட பலருக்கும் புரிந்திருக்கும். அவர் இறந்ததிற்கு பின் கடந்த சில மாதங்களாக எத்தனையோ வலிகள், எத்தனையோ சோதனைகள். தமிழ்நாட்டில் வாழும் தனி ஒரு மனிதனுக்கும் ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கும்

நமது தமிழக பாடத்திட்டம் ஒரு நல்ல மருத்துவரை உருவாக்க உதவாது என்ற ஒரு கருத்தை நம்ப வைத்திருக்கும் மத்திய அரசிடம் ஒரு விளக்கம் கேட்க விரும்புகிறேன். தமிழக பாடத்திட்டத்தில் படித்து நீண்ட காலமாக மருத்துவ சேவை செய்யும் தமிழக மருத்துவர்களை, மற்ற மாநில அல்லது மத்திய பாட திட்டத்தில் பயின்று பின்னர் மருத்துவ படிப்பை தொடர்ந்த மருத்துவர்களோடு ஒரு ஒப்பீடு வைத்து பார்க்க உங்களுக்கு தோன்றவில்லையா, அல்லது தமிழக மருத்துவர்களின் பங்களிப்பை மறைக்க விரும்புகிறீர்களா? தமிழகத்தின் மருத்துவ சேவை உலக தரம் பெற்றது என்பதை நான் சொல்லி உங்களுக்கு
தெரியவேண்டியதில்லை.

அனைத்து பாதிப்புகளையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்ப்பதை நான் என்றுமே விரும்புவதில்லை. ஆனால் தான் மருத்துவர் ஆக முடியவில்லை என்ற கோழைத்தனத்துடன் தன் உயிரை மாய்த்து கொண்டதாக நான் எண்ணவில்லை. வீரத்துடன், இனியாவது மத்திய அரசு தனது முடிவை மாற்றட்டும் என்பதற்காக தன்னுடைய முடிவை கையில் எடுத்துள்ளதாக தான் நான் பார்க்கிறேன்.

அனிதா மரணத்தை கையில் எடுத்ததில் எனக்கு மிகப் பெரிய வருத்தமும், இந்த சூழ்நிலையினை உருவாக்கியதில் நான் உட்பட இந்தியாவில் வாழும் நாம் அனைவருக்கும் பங்கிருக்கிறது என்றும் கூறமுடியும்.

நீட் வேண்டாம் என்பது நீண்டகால தீர்வாக முடியாது. இந்திய மருத்துவ மாணவர்களை ஒரே தரத்தில் தயார் செய்யும் முயற்சி இது.

அதே சமயம், தமிழக மாணவர்கள் தங்களை இந்த தேர்வு முறைக்கு தயார் செய்ய கண்டிப்பாக கால அவகாசம் வேண்டும். அந்த காலம் வரை, மாநிலத்திற்கு சிறப்பு அனுமதி / விலக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.

ஒவ்வொரு தோல்வியில் இருந்தும் ஒரு படிப்பினையை நாம் பெற வேண்டும். நீட்டிற்கு மட்டுமல்ல அனைத்து தேசிய நுழைவு தேர்விற்கும் தமிழன்தான் முதலில் வரவேண்டும் என்ற மன வைராக்கியத்தை ஒவ்வொரு தமிழ் மாணவரும் கொண்டு வளர வேண்டும். இது தமிழனுக்கு விட்ட சவாலாக எடுத்து கொள்ளவேண்டும். நமது தரத்தை சோதித்து பார்த்த மத்திய அரசை, மற்ற மாநிலங்கள் முன்னிலையில் அவமான படுத்திய மத்திய அரசு தலைகுனியும் வகையில் நமது மாணவ செல்வங்கள் தனது திறமைகளை நிரூபித்து வாழ்ந்து காட்டு வேண்டும்.

கல்தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய தமிழ் சமுதாயம், வரலாற்று சிறப்பு மிக்க தலைவர்களை உருவாக்கிய தமிழ் சமுதாயம்; எந்த துறை எடுத்துக்கொண்டாலும், தமிழன் இல்லேயேல் இனி வெல்ல முடியாது என்ற எண்ணத்தை உருவாக்கி உலகிற்கு அனிதாவின் மரணத்தின் அர்த்தத்தை உணர வைக்க வேண்டும்.

அடுத்த 5 வருடங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் மனது வைத்தால், கலாம் கண்ட இந்திய கனவே தமிழனே நிறைவேற்ற முடியும். அதை தாண்டியும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அப்துல் கலாம் காலம் சென்றார், அனிதாவும் காலம் சென்றார், தான் நினைத்ததை தான் சாதித்து விடை பெற்றார் கலாம். தான் நினைத்ததை மற்றவர் நடத்திட பாதியில் சென்றார் அனிதா, என்றுதான் எண்ண தோன்றுகிறது..

ஆனால் அவர்கள் இருவரின் கனவின் மிச்சமும் நம்மிடையே இன்று. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் நாம் அர்த்தம் கொடுப்போம் வாருங்கள், உழைப்போம், உயர்வோம்
 
  • Like
Reactions: Fox
Top