1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.
  1. THIRAVIYAM

    THIRAVIYAM Member

    jzt watched the movie IRUMBUTHIRAI nd thought of sharing wat doez it meanz.az im not a techie nd az im naive with regardz2 technical termz i dunt wanna dig much deeper i wuld jzt keep it plain nd simple.
    SO WHAT DOES IT MEAN WHEN YOU SAY THE TERM DARK WEB?
    Technically speaking itz d unregulated web content datz not controlled by any government and solely run by anonymous persons in anonymous serverz in anonymous URLs(Universal Resource Locater).so why d name dark web? doez d display lookz dark r even contentz look dark ?Technically no but literally s.so what iz d web datz actually we are seeing daily?
    The TYPES OF WEB
    Broadly speaking there are three typez of web that seemz 2 exist.The clear web or the Surface web, deep web nd the DARK WEB.The clear web iz what we see daily in our systemz lapz mobilez ipadz etc which r actually indexed by search engines like google,bing ,yahoo,DuckDuckGo etc.thez sitez r indexed by crawl engines ,robots r botz 2 b precise on which SEO s actually wrk on.so what abt the other 2?if u say for an eg 100% of an web content only 4% contributez 2 diz clear web which we see actually daily using our browsers .so where doez the remaining content haz gone?thiz iz where deep web nd dark web comez into play.deep web accountz 4 nearly 90% of d content nd dark web accountz 4 nearly 6% which cant b accessed thro regular browserz coz they r not indexed by regular search enginez.so what doez deep web meanz ?itz all abt the database thatz encrypted which may b accessed only by login credentials nd 1ly by specific persons.it m8 b a bank account details or ur medical records or an online library with subscription accountz or even bitcoinz or ur paytm r phonepes walletz all stored in servers encrypted.
    Now d question arises what abt d remaining 1?THE DARK WEB.herez where mostly but not all illegal activities takes place.As a rule of thumb this invention too goes 2 FBI nd CIA where they used 2 send encrypted infoz back in d 90z via internet.
    AN EG TO SUM IT UP
    k lemme sum up it with an eg.u wanna buy a mobile phone u order it in a online sites like amazon or flipkart r ebay after u order they contact the vendor give u what u wanted nd that pretty much sumz up all.here ur d user amazon iz d browser nd d vendor iz d server nd d phone what u get iz the info u needed.diz iz the clear web.
    The same applies to food when u need it when u order foods via swiggy or zomato.u can order the food but can never the ingredients or the utensils in their kitchen of the hotel which they use ryt?dat ingredients nd utensils which 1ly their employees ve access 2 makez d deep web.
    so coming 2 d last what if u wanna order an assault rifle or an smoke grenade or hash or cocaine online?u wuldnt dare ordering it in online with ur credentials even if itz available in amazon or ebay coz u wuldnt dare end up behind d barz.diz iz where dark web comez into play.
    THE DARK WEB
    here whateve transactions happens be it illegal human trafficking or online drug dealing or
    weapon dealing or child pornography or WHISTLEBLOWERS even recently Hitman offers iz anonymously carried out by hackers Black Hats Grey Hats nd hackers thrive without any surviellance or ne restrictionz.nd thiz can b accessed 1ly with special browsers like TOR browser.Thiz iz where d infamous SILK ROAD thrived upon b4 it was shutdown by FBI back in 2013.
    BOTTOMLINE
    peel off the onions if ur really curious abt THE DARK WEB. this-site-has-been-seized.jpg
     
    Last edited: Jan 19, 2020
  2. Cycle

    Cycle New Member

    Wonderful thread :clap: நானும் இதுல சில விஷயங்கள சொல்லணும்னு நெனைக்கிறேன்.

    Note : கீழே இருக்கும் தகவல்கள் நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே, இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ முயற்சிக்க வேண்டாம் என்று அன்போடும் தாழ்மையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

    அப்புறம் என்ன வெண்ணைக்குடா இத இங்க சொல்லுற ? அப்படி யாரும் கேட்டா அதுக்கான பதில், உலகம் எந்த திசையில் பயணிக்கிறது என்பதை தெரிந்துகொள்வது அறிவின் வளர்ச்சிக்கு உதவும் என்ற நோக்கத்திற்காகவே இந்த பின்னூட்டம்.

    தயவு செய்து இளகிய மனம் படைத்தவர்களும், கொடூர சைக்கோ எண்ணம் கொண்டவர்களும் மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் :imcool: நன்றி.

    கீழே இருக்கும் அனைத்தும் உண்மையா ? இல்லை கற்பனை கதையா ?
    எதிர்வரும் சட்ட சிக்கல்களை நானும் இந்த இணையதளத்தின் உரிமையாளரும் சந்திக்க வேண்டாம் என்று கருதி Screenshot இங்கே அப்லோட் செய்யாமல் தவிர்த்திருக்கிறேன், மேலும் இது உண்மையா கற்பனையா என்கிற கேள்விக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்கிறேன்.

    கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் சந்தைகளை நாங்கள் பார்வையிடலாமா ?
    நன்கு தொழில்நுட்ப அறிவுடன் இருப்பவர்களே இதில் மாட்டிக்கொண்டு சட்ட சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அவ்வளவு விசயம் தெரியாமல் கீழே இருக்கும் சந்தைகளை தங்களோட லேப்டாப் மற்றும் மொபைல்களில் தகுந்த பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை பற்றி தெரிந்துகொள்ளாமல் முயற்சிக்க வேண்டாம்.
    மேற்கொண்டு முயற்சிப்பவர்களுக்கு நான் சொல்லுறது ஒண்ணே ஒண்ணுதான், "எப்படியோ நாசமா போங்கடா" :hello:



    Yes, ரெண்டு வகை வெப் இருக்கு, surface web, deep web. Chrome, firefox, internet explorer வழியா நாம பார்வையிடுற அனைத்தும் surface web வகை. ஆண்ட்ராய்ட் ஆப், ios ஆப் வழியா பார்வையிடுற தகவல்கள் surface web data வகையை சார்ந்தது.

    அப்போ deep webனா என்ன ? அதை எப்படி பார்வையிட முடியும் ? அதுக்கு சில browsers, ஆப் இருக்கு. அதுல ரொம்ப பிரபலமான ஒன்னு TOR. TOR லேப்டாப்ல இன்ஸ்டால் பண்ணுற மாதிரியும் இருக்கு, ஆண்ட்ராய்ட் ஆப் ஆகவும் இருக்கு. முக்கியமான விஷயம் இது முழுக்க முழுக்க இலவசம்.

    Surface வெப்ல இல்லாதது அப்படி என்ன deep வெப்ல இருக்கு ? ஒரு ஒரு நாடும் தங்களுக்கான இணைய சேவை விதியை(rules) பட்டியல் போட்டு வச்சிருக்காங்க. அப்படியான விதிகளை மீறி சில தகவல்கள், தரவுகள் போதுவெளிக்கு கொண்டுபோக deep வெப் முக்கியமான ஒன்று.

    அது என்னப்பா விதிகளை மீறின தகவல்கள் ? நிறையா இருக்குங்க, இத பற்றி தனியா ஒரு thread எழுதுறேன், இப்போ dark web பத்தி பாக்கலாம்.

    Deep webல என்ன இருக்கும்னு முதல்ல முழுசா சொல்லுங்கடா, அப்புறம் dark வெப் பத்தி பாக்கலாம் சரி சரி ok, ஒரு அரசாங்கத்துக்கு எதிரான, ஒரு நாட்டின் ஒருமைப்பாடுக்கு எதிரான, நீதித்துறைக்கு எதிரான கருத்துக்களை சொல்ல எந்த ஒரு நாடும் அனுமதிக்கிறது இல்லை. அப்படி ஒரு கருத்து whatsapp, forumகளில் சொல்லும்பட்சத்தில், அந்த கருத்து சொன்ன நபர், அதை publish செய்த website owner எல்லாம் சிறைக்கு செல்லவேண்டியதாக இருக்கும். அப்போ நாம யாருனு கண்டுபிடிக்க முடியாத (ip வச்சும் கண்டுபிடிக்க முடியாத) ஒரு தொழில்நுட்பம் தேவைப்பட்டுச்சு, அது தான் deep வெப்.

    Deep வெப் நல்லதா கெட்டதா ? நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு, அதை எடுத்துக்கிற விதம் நல்லதா கெட்டதா என்பதை தீர்மானிக்குது.

    Deep web என்பதே விதி மீறின செயல்னா, அப்போ dark வெப் ? தகவல்களை தாண்டி விதிகளை மீறின வியாபாரமும் வர்த்தகமும் நடைபெறும் இடம் தான் dark web. வர்த்தகம், வியாபாரம்னு வந்துட்டா அதுல காசு இல்லாம இருக்காது, இங்க crypto currency தான் பயன்பாட்டுல இருக்கு, உங்க டாலர் யூரோ எல்லாம் இங்க செல்லாதுங்க. இங்க என்ன மாதிரி வியாபாரம் நடக்குதுன்னு சந்தை மதிப்பு வச்சு வரிசைப்படுத்தியிருக்கேன், ஒன்னு ஒண்ணா பாக்கலாம்.

    1. Drug மார்க்கெட் - உலகத்துல இருக்கற எல்லா தடை செய்யப்பட்ட மருந்துகளும் இங்க கிடைக்கும். சில நாடுகளில் அனுமதிக்கப்பட்ட மருந்துகள் வேறு சில நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும், அது போல மருந்துகள் இங்க கிடைக்கும். நம்மல விட மருத்துவம் சார்ந்த படிப்பு படிச்சவங்க அங்க போனா நெறையா புரிஞ்சுக்க முடியும்.

    2. போதை வஸ்து சந்தை - இந்த சந்தைல உலகத்துல இருக்கற அனைத்து போதை பொருட்களும் தரம் வாரியா கிடைக்கும். சோ மிட்ட, ஜாயிண்டு பார்த்த கைகளும் அல்லது அதை பற்றி தெரிந்த நபர்களால் மட்டுமே இங்கே இருக்கும் பொருட்களை புரிந்துகொள்ள முடியும். இது முழுக்க முழுக்க தன்னை மறந்து சொர்கத்துக்கும் நரகத்துக்கு இடைப்பட்ட இடத்திற்கு சென்று கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும்னு நினைக்குறவங்களுக்கான சந்தை இது. இங்கே பாப் மார்லியை கடவுளாகவும், மரிஜூவனா மற்றும் வீட் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட பொருட்களாகவும் பார்க்கப்படுகிறது. பாட்டில் போதையை தாண்டிய அதீத போதை சமாச்சாரங்களை தேடும் நபர்கள் அதிகம் குழுமியிருக்கும் இடம் இது.

    3. உடல் உறுப்பு சந்தை - organ transplantation இப்போ எல்லா இடங்களில் சாதாரணமாக நடக்ககூடிய ஒன்று. அதாவது நல்ல ஆரோக்கியமா இருக்கற ஒரு மனிதனோடு உடல் உறுப்புகள எடுத்து இன்னொரு பாதிக்கப்பட்ட மனிதர்க்கு பொருத்தி, அவரோட ஆயுட்காலத்தை நீட்டிக்க வைக்கிறது. அப்படியான நல்ல ஆரோக்கியமான மனிதன் தன்னோட உடல் உறுப்புகள் எப்படி தருவான் ? அதுக்கு தான் இந்த சந்தை, சில பல medical reports எல்லாம் அவங்களுக்கு அனுப்பி வச்சா, அதுக்கு suitable ஆரோக்கியமான மனிதன பிடிச்சு, அவன் அனுமதியோடோ, அனுமதி இல்லாமலோ உறுப்புகளை எடுத்து தருவாங்க. ரொம்ப அதிகமான படித்த மேதைகள் உலாவும் இடம் இது.

    4. மனித சந்தை - நம்புறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் அது தான் இங்க உண்மைங்க. இங்க உயிருள்ள மனிதர்களும், குழந்தைகளும் விற்கப்படுது. கடத்தப்படுற குழந்தைகள், பெண்கள் தான் இதில் முக்கியமான வியாபார பொருட்கள். முகம் மறைக்கப்பட்ட நிலையில் உயரம், எடை, வயது, நிறம், ஆரோக்கியம் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். கேமரா வழியாக பார்த்து விலை பேரம்பேசி வியாபாரம் நடந்து முடிகிறது. 100% குற்ற சம்பவங்களுக்காக மனசாட்சியே இல்லாத சைக்கோ மனித மிருகங்கள் உலாவும் இடம் இது. குறைந்தது 0.5 பிட்காயின் இருந்தால் உள்ளே சென்று பிட்டிங்ல் கலந்துகொள்ள முடியும். வழக்கமாக ஏதேனும் குழந்தைகள், பெண்கள் காணாமல் போனால், 3வது நாளில் இருந்து இங்கே தேடலாம். அப்படி சிலரை மீட்டு வந்ததாக சில தகவல் கேள்விப்பட்டிருக்கேன் எந்த அளவு உண்மைனு தெரியல. வழக்கமா மச்சம், தீ காயம் மாதிரியான அடையாளம் கண்டுபிடிக்குற விஷயங்களை மறச்சுவச்சுறுவாங்க. கொஞ்சம் தொழில்நுட்ப விஷயம் தெரிந்த காவல்துறை அதிகாரிகளின் துணையில்லாமல் மீட்பு நடவடிக்கையில் இறங்குவது சட்டத்திற்கு புறம்பானது மற்றும் ஆபத்தானது.

    5. குழந்தைகள் பார்னோகிராஃபி - குழந்தைகளை கொண்டு எடுக்கப்பட்ட பார்ன் படங்கள் விற்கப்படும் இடம் இது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட படங்களும் இருக்கும், நேரடியாக live showவாகவும் பார்க்க முடியும். இது மற்ற சைட்டுகளில் இருப்பது போல் இருக்காது, invitation வழியாக மட்டுமே இங்கே account create செய்ய முடியும். போர்களால் பாதிக்கபட்ட நாடுகள் மற்றும் இனக்குழுக்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இது முக்கியமான வியாபார சந்தை. இதில் சமீபத்தில் போரில் பாதிக்கப்பட்ட நமக்கு தெரிந்த ஒரு நாடும் இருக்கு என்பது ரொம்பவே அதிர்ச்சியான விஷயம். அந்த நாடு சிரியாவா இல்லை சிலோனா ? சில பல தனிப்பட்ட safetyகாக கண்டிப்பா இந்த கேள்விக்கு என்னால விடை சொல்ல முடியாது. உலகம் முழுக்க தடை செய்யப்பட்ட இதை கண்டிப்பா பார்க்க முயற்சி பண்ணாதீங்க. இதை ரசிக்கும் மனநிலை உள்ளவங்களையும், அவங்களோட வியாபாரம் பற்றியும், அவங்க கூட பழக்கம் வச்சுக்குறவங்க குடும்பத்தின் நிலை பற்றியும் சொல்லப்பட்ட கொடூரமான படம் A Serbian Film. பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட கொடூர சைகோதனம் நிறைந்த இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். தகவல்கள தெரிஞ்சுக்கோங்க, அதுவே போதும்.

    6. மிருக சந்தை - இது முழுக்க முழுக்க பல நாடுகளால் விற்பனைக்கும் வளர்ப்பதற்கும் தடை செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட மிருகங்கள், பறவைகள் விற்பனை செய்யப்படும் சந்தை. ஆமைகள் இதில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

    7. குற்ற செயல் செய்யும் freelancers - இது ரொம்ப interesting area, இங்க "குற்ற செயல் செய்ய நாங்க இருக்கோம், உடனே அணுகுவீர்"னு போர்டு மாட்டின ஆட்கள் இருப்பாங்க. எந்த நாட்டுல இருந்துகொண்டும் எந்த நாட்டுல வேணாலும் குற்ற செயல் செய்ய இவங்க உதவி பண்ணுவாங்க. காசு குடுத்தா போதும், ஏன் எதற்கு காரணம் சொல்லவேண்டியது இல்லை. நாம அடையாளம் காட்டுகிற நபரை ஒருவழி பண்ணிடுவார்கள். யார்மேலயும் வன்மம் இருந்தா பேசி தீர்த்துக்கோங்க, இது மாதிரி செயல்ல இறங்க வேண்டாம்னு கேட்டுக்கறேன்.

    8. உளவு அல்லது ஒற்று - இதுவும் ஒரு freelancer சேவைபோல. சில நபர்களை ரகசியமாக கண்காணிக்க முன்னால எல்லாம் private detectivesகிட்ட போவாங்க, அவங்க அந்த அந்த நாட்டின் அரசாங்கத்தோட அனுமதியோட அந்த சேவையை செய்வாங்க, என்ன ஒரு குறைனா, வேவு பார்க் சொன்னவங்க பற்றிய தகவல் அரசாங்கம் கேட்கும்பட்சத்தில் அதை குடுத்திருவாங்க. அதுவே இந்த சேவைல நாம யாருனு அவங்களுக்கு தெரியாது, அதேநேரம் இது அரசாங்க அனுமதி இல்லாம செயல்படுற ஒரு சேவை. இப்போ இருக்குற இன்டர்நெட் பயன்பாட்டுல, எல்லைகளை தாண்டிய உறவுகள் உருவாகுது, நேரடியா சென்று உண்மையை தெரிந்துகொள்வதைவிட இப்படியான குறைந்த செலவு சேவையில் அந்த நபரின் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ள பலர் இங்க போறாங்க. ஒருவேளை அந்த அந்த வேவு பார்க்கப்பட்ட நபர் பொய்யான ஏமாற்றுப்பேர்வழியாக இருந்தால் கோவம் தலைக்கேறி குற்ற செயல் செய்யும் freelancers கிட்ட போறாங்க. Chat, social network, matrimoni வழியாக அறிமுகமான நபர்களை வேவு பார்க்க தனி சேவை வசதிகள் இருக்கு, facebook paasword எடுக்கறது தாண்டி public security camera, shop security camera, iOT டிவைசஸ் வச்சு நாமலே நேரடியா கண்காணிக்குற சேவை. எனக்கு தெரிஞ்சு china தவிர மற்ற நாடுகளில் இந்த சேவை இருக்கு. இத பற்றி தனி threadல பாக்கலாம்.

    9. Data திருட்டு - இது ரெண்டு வகையா இருக்குங்க, முதல் வகை ஒரு நிறுவனம் பற்றிய தகவல்கள சேகரிக்குறது, இன்னொரு வகை தனி நபர் பற்றிய தகவல்களை சேகரிப்பது. இதுவும் உளவு பார்க்கும் சேவைதான், ஆனால் இது அந்த குறிப்பிட்ட நிறுவனம் அல்லது நபர்களின் லேப்டாப், மொபைல் போனில் ரகசியமாக உள்ளே நுழைந்து வேவு பார்த்து சொல்வது. Andro-rat போன்ற சில மென்பொருட்கள் சாதாரணமாக கிடைக்கும்போது, இவங்க அப்படி என்ன புதுசா தகவல் கொண்டு வந்து குடுக்கபோரங்கனு நீங்க நெனச்சா, நீங்க ஆச்சர்யப்படுற விஷயம் ஏராளம் இருக்கு, நேரம் அமைந்தால் அதை தனி thread வழியா பார்க்கலாம்.

    10. Carding - இது நாம அடிக்கடி கேள்விப்படுறது தான். Credit card, debit card வச்சு பணம் திருடுறது. இப்போ எடுத்துக்காட்டுக்கு சொல்லுறேன், Franceல ஒரு card பற்றிய தகவல ஒருத்தன் திருடிட்டான்னு வச்சுக்கோங்க, அத வச்சு அதே ஊரிலோ, பக்கத்து ஊரிலோ போய் பணம் எடுத்தா மாட்டிக்குவான், அதுனால அந்த கார்டு பற்றிய தகவல்களை வேறு நாட்டுல ஒருதங்களுக்கு வித்துருவான். விற்பனை செய்தது மூலமா விற்பனை செய்தவனுக்கு பணம் வந்துரும், தகவல்களை வாங்கினவன் அவனோட ஊருல அதை வச்சு பணமா மாற்றிக்கொள்வான். இங்க ஒரு சிக்கல் இருக்கு, அப்படி காசு கொடுத்து வாங்குற தகவல்கள் வேலை செய்யாமல் போனால், திரும்ப சண்டைபோடவோ, வேறு தகவல்கள் பெறவோ முடியாது. இங்கே நிறையா credit card தகவல்களை வாங்கியவர்களை விட அல்வா வாங்கியவர்கள் தான் அதிகம் :giggle::giggle:.

    இன்னும் nulled or source distribution, blood party, chemical consignment mafia, currency exchange centers நிறைய இருக்கு.

    இதுல ரொம்ப முக்கியமான ஒரு சேவை இருக்கு அது courier & delivery ரொம்பவே interesting topic. எப்படி இது போன்ற ஒரு network அமைப்பு ஏற்படுத்தி அதுவும் விதிகளை மீறி பண்ணமுடியுதுனு இன்னொரு நாள் பார்க்கலாம்.

    பிட்காயின் எப்படி இங்க செயல்படுது, மேல சொன்ன சந்தைல எப்படி வியாபாரம் பண்ணுறது ? நாம அதுபோல ஒரு ரகசிய சேவை செய்ய முடியுமா ? அதுக்கு என்ன பண்ணனும் ? போன்ற நிறையா கேள்விக்கான பதில் நேரம் கிடைக்கும்போது எல்லாம் எழுதுறேன்.

    நிறையா எழுத்திட்டேன்னு நினைக்கிறேன், பசிக்குது சாப்பிட போறேன், bye bye.

    இது பிடிச்சிருந்தா கமெண்ட்ஸ் எழுதுங்க, நிறையா பேருக்கு பிடிச்சிருக்கும் பட்சத்தில் நான் பார்த்த வேற வேற தகவல்கள தொடர்ந்து எழுதுறேன்.

    நன்றி வணக்கம்
    Cycle
     
    • Like Like x 1
    • Loving it Loving it x 1
  3. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN

    Trichy la Child Pornography Vela Partha oru Aalu POCSO Act la Ulla Poyirukaan. Avan Use Panathu Dark Web. And World la Child Pornography la No:1 Tamilnadu. Athu Elarukum Theriyum. ithu Sambanthama na Already oru Thread inga Post Paniruken. Any How Avan Epdi Sikunaan? Dark Web la Vela Partha Thappikalam nu Ninaikuravanga Epdi Matunanga Therunja Solunga.
     
  4. Cycle

    Cycle New Member

    எனக்கு தெரிஞ்சு இந்த அஞ்சு வழில தான் பிடிச்சிருக்கணும்.

    1. Auditing compromised application and database.
    2. Trap at compromised application
    3. Trap at exit node
    4. Client side evil script
    5. Third party cooperation

    1. Auditing compromised application and database - நிறையா ஆனியன் சைட்கள் போதுமான security எல்லாம் வச்சுதான் இருக்கு, ஆனாலும் ஏதாவது சின்ன குறைபாடு வழியா அந்த சைட் hack செய்யும்பட்சத்தில், hack செய்த நபரோ, நிறுவனமோ அந்த சைட் பற்றிய சகல தகவல்களையும் ஆராய்வங்க. பொதுவா எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி nick name, id பயன்படுத்துர பழக்கம் நிறையா பேருக்கு இருக்கு. அத வச்சு தகவல் திரட்ட முயற்சிப்பாங்க. அப்படி திரட்டப்பட்ட தகவல் வச்சு social networkingல அந்த நபரை கண்டுபிடிச்சா, அவங்க செயல்பாடுகளை கண்காணிப்பாங்க. அவங்க கிட்ட crypto currency எதுவும் இருக்கா ? எந்த எந்த நேரத்துல TOR networkல இணைந்திருந்தங்க போன்ற தகவல் வச்சு உறுதி பண்ணுவாங்க.

    2. Trap at compromised application - hack செய்யப்பட்ட சைட்ட இழுத்து மூடாம, தொடர்ந்து அத கண்காணிப்பாங்க. வேறு சில தகவல்கள கேக்குற மாதிரி, வேறு சில social networkல இணைந்து செயல்படலாம்னு invite பண்ணுவாங்க, அதுக்கு ஈடாக free premium accessனு ஆசை காட்டுவாங்க. கிட்ட தட்ட அது ஒரு எலி பொறி. வெறி பிடிச்சு சுத்துறவன் இலவசமா கிடைக்குதேனு மாட்டிக்குவான்.

    3. Trap at exit node - இது கொஞ்சம் technical பகுதி. TOR இணைப்புல ஒரு தகவல் ஒரு user கிட்ட இருந்து serverக்கு போகனும்னா அது நேரடியா போகாது. சரியா சொல்லனும்னா, 100km உள்ள ஒரு பாதையை ஒரே காரில் போகாம, ஒரு ஒரு 10kmல நிறுத்தி வேற வேற வண்டி பிடிச்சு போய் சேரும் வழக்கம் தான் TOR networkல் நடைபெருது. இப்படி போனா 10 கார் உபயோகப்படுத்தியிருப்போம். இங்க ஒரு ஒரு கார் ஒரு ஒரு node. Serverஐ தொடும்போது நாம உபயோகப்படுத்தின அந்த கடைசி node தான் exit node. அப்படியான exit node எல்லாம் பாதுகாப்பானவைனு சொல்ல முடியாது, அது கண்காணிக்குறதுக்காகவே ஏற்படுத்தப்பட்ட ஒரு எலி பொறி. எந்த node உபயோகப்படுத்தனும்னு நாம முடிவு பண்ணமுடியாது. அது விதி.

    4. Client side evil script - பொதுவா TOR மென்பொருள்கள் கடுமையான விதிகளின் கீழே தான் இயங்குகிறது. அதில் 3 mode இருக்கு, strict, normal, weak. சில சைட்கள் weak modeல இருந்தா தான் பார்வையிட முடியும்னு சொல்லும், அதை நம்பி weak modeக்கு போகும்போது, சில script அந்த user லேப்டாப், மொபைல்க்கு வந்து சேர்ந்து அங்க இருந்து செயல்படும். அது
    IP, OS போன்ற தகவல்கலை surface web கூட தகவல் பரிமாற முயற்சி செய்யும். அப்படியும் அந்த user பற்றிய தகவல் கண்டறியப்பட்டிருக்கும்.
    சில வீடியோ pluginகளில் வீடியோ பார்க்க weak mode அனுமதி தேவை, அப்படியாக mode மாத்தியிருக்கலாம்.

    5. Third party cooperation - இங்க இருக்கறது போல TOR networkல chat, forum வசதிகள் இருக்கு. ஆனா facebook, whatsapp மாதிரியான எளிமையான surface web messengers அங்கு இல்லை, அதுனால, dark webல தரவிறக்கம் பண்ணின தகவல்கள facebook, whatsapp வழி பரிமாற்றம் பண்ணிக்கிறாங்க. Facebook nudity போட்டோ வீடியோக்களை கண்டுபிடிக்க தனி algorithm & tools வச்சிருக்காங்க. அத கொண்டு அப்படி அப்லோட் செய்யப்பட்ட வீடியோவை ஆராய்ந்து அரசுக்கு தகவல் குடுத்துருவாங்க. End-to-End encryption, AES256 encryptionனு சொல்லிகிட்ட whatsapp அப்லோட் பண்ணுற files எல்லாம் encrypt பண்ணாம அப்படியே raw dataவா தான் எடுத்து செல்லுது. அதுனால சர்வர்ல வச்சே nudity வீடியோக்களை தரம் பிரிக்க முடியும். அது மூலமா அந்த வீடியோ அப்லோட் பண்ணின நேரம், ip, user information எல்லாம் பட்டியல் எடுத்து அரசாங்கத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கும்.

    இப்படியாக பல படிகளில் விரிக்கப்பட்ட வலைகளிலும், அங்கு அங்கு வைக்கப்பட்ட எலி பொறிகளிலும் சிக்கின நபர்களின் தகவல் வைத்தே இந்த வேட்டை நடந்திருக்கும்.


    2014 வருடத்திலேயே TOR network security குறைபாடுகளை உலகிற்கு சொல்லி, அதில் பாதுகாப்பு இல்லைனு நிரூபிக்கப்பட்டிருக்கு. இந்த குறைபாடுகளை சரி செய்யும் வழியை இங்கு சொல்வது சரியாக இருக்காது.

    மேலே சொன்ன ஏதோ ஒரு இடத்திலோ அல்லது 2,3 இடங்களில் கிடைத்த ஆதாரங்களையும், தகவல்களையும் வைத்தே சட்ட நடவடிக்கைக்கு அரசு தயாராகி இருக்கும்.

    உப்பு தின்னவன் தண்ணி குடிச்சுதானே ஆகணும்..

    - Cycle
     
    Last edited: Jan 21, 2020
    • Like Like x 1
  5. THIRAVIYAM

    THIRAVIYAM Member

    very nice explanation to naive users like me CYCLE.And another doubt CYCLE even if we use LIVE OS like KALI LINUX using USB STICK 2 boot instead of HOST OS nd use VPN like NORDVPN or IPVANISH over TOR to surf DARK EB like how i used to surf(jzt surf only outta curiosity)wuld that still b UNSAFE?
     
    Last edited: Jan 22, 2020
  6. Cycle

    Cycle New Member

    Bootable OS + VPN + TOR மூணும் சேர்ந்த combo செயல்பாடு எப்படி இருக்கும் ?

    இந்த கேள்விக்கான பதில் THIRAVIYAM கேட்ட கேள்விக்கான பதிலாக இருக்கும்னு நம்புறேன்.

    Web பயன்படுத்தும் மனிதர்களை ரெண்டு விதமா பிரிக்கலாம் 1) Users மற்றும் 2) Consumers.

    1) Users - தகவல்களை தெரிஞ்சுக்கவும், website பார்வையாளர்களாகவும் மட்டுமே இருப்பார்கள். எழுத்து வடிவில் இருக்கும் தகவலாக இருக்கலாம், போட்டோ அல்லது வீடியோ வடிவில் இருக்கும் தகவலாக இருக்கலாம், மற்றபடி வியாபாரம் செய்யவோ, பணம் செலவு செய்யவோ மாட்டார்கள்.

    2) Consumers - கண்டிப்பாக பணம் செலவு செய்து ஏதேனும் ஒன்றை வாங்கும் நபர்கள் இவர்கள். Dark web என்பதே விதி மீறிய வியாபார சந்தை, அங்கு வியாபார நோக்கத்துடன் நுழைபவர்களே குற்றச்செயல்கள் நடைபெற நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணம் செலவு செய்கிறார்கள். வியாபாரம் செய்ய கண்டிப்பாக crypto currency வேண்டும்.

    உலக நாடுகளின் கவனம் முழுவதும் இப்போது குற்ற செயல்கள் செய்வதற்கு பணம் எந்த வழிகளில் எல்லாம் வருகிறது என்பதை தெரிந்துகொண்டு அதை முற்றிலுமாக அழிக்கும் முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. அதற்காக Consumers குறிவைக்கப்படுகிறார்கள்.

    எண்ணங்கடா இது, supplier பிடிச்சு ஜெயில்ல போட்டுட்டா வியபராமே நடக்காதே, அத விட்டுட்டு எதுக்கு customers பிடிக்கணும் ?
    ஒரு supplier பிடிச்சு ஜெயில்ல போட்டா, வேறு ஒரு supplier அந்த வேலையை தொடர்ந்து செய்வான், அதுவே அங்கு தேவைகள்(demand) இல்லாமல் போனால், அவனே கடையை மூடிட்டு போய்டுவான். Demand குறைக்க ஒரே வழி Customers எண்ணிக்கையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைக்கணும்.

    மேல கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே ??
    கரெக்ட், மேல கேட்ட கேள்விக்கு பதில் தெரியனும்னா முதலில் தெரியவேண்டியது, Bootable OS + VPN + TOR உபயோகப்படுத்தி நாம User போல செயல்படப்போறோமா ? இல்லை Customer போல வியாபாரம் பண்ண போறோமா ? User போல செயல்படும்பட்சத்தில் பெரிய அளவில் ஆபத்து இல்லை. User எப்போ Consumer ஆகுறானோ அப்போ மிகப்பெரிய ஆபத்து ரெடியா இருக்கும்.

    சரியா சொல்லப்போனால், விதிகளை மீறிய தகவல்களை பார்வையிடும் deep web நிலையில் தான் user இருப்பான். Dark web பணம் கை மாறும் தளம், அங்கு Customers மட்டுமே அனுமதிக்கப்படுகிறான்.

    TOR networkகில் நேரடியாக ஒரு IP வைத்து பிடிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. எல்லா மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சில தடயங்களை விட்டுச்செல்வான். அது மாதிரி தடயங்களை வச்சு தான் அவனை பிடிக்க முடியுமோ தவிர, வெறும் ஆனியன் சைட்டுகளை பார்வையிடுவதால் பிடிப்படுவது இல்லை. Bootable OS, VPN எல்லாம் தொழில்நுட்ப தகவல்களை மறைக்கமட்டுமே பயன்படுமே தவிர மனிதன் விட்டு செல்லும் தடயங்களை மறைக்க முடியாது.

    தடயம்னா என்ன மாதிரி தடயம் ?
    சில பொதுவான விஷயங்களை மட்டும் இங்கே சொல்லுறேன்.

    Nick name - எந்த website போனாலும் ஒரே மாதிரி nick name வச்சுப்பாங்க. இங்க இருக்குற சில users nick name எடுத்து google பண்ணினா நேரடியா அவங்க facebook பக்கத்துக்கு போகலாம்.

    DP or Profile Image - இதுவும் nick name போல, ஒரே போட்டோவ எல்லா இடத்துலயும் உபயோகப்படுத்துறது.

    Unique reaction or Unique response - சிலர் பேசும்போது தனித்துவமான பதில், தனித்துவமான வார்த்தைகளை உபயோகப்படுத்துவார்கள். Google பண்ணி இதை கண்டுபிடிக்க முடியாது, ஆனால் comparative study போல ஒப்பீட்டு முறைகளில் இதை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

    Email contacts - எல்லோருமே குறைந்தது 2 email id வச்சிருப்போம், ஒன்னு படிப்பு வேலை நண்பர்கள் வட்டத்துக்கு. இன்னொரு email id புனைபெயரில் உலாவும் தலங்களுக்கு. அதே email idஐ dark web தளங்களில் பயன்படுத்தும்போது எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

    Date of Birth - சிலர் புத்திசாலியாக காட்டிக்கொள்ள போலியான பிறந்த தேதியை பதிவு பண்ணி வச்சிறுப்பாங்க, அதே தேதிய வேறு சில web siteகளிலும் உபயோகப்படுத்தியிருப்பாங்க.

    மேலே சொன்ன தடயங்கள் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை, எந்த தொழில்நுட்பம் கொண்டும் அதை மறைக்க முடியாது.

    மேலே சொன்ன தடயங்கள் மட்டும் வைத்து ஒரு நபரை பிடிக்க முடியுமா ?
    முடியாது, அதற்கு பொது வெளியில் இருக்கும் சில Social Networking சைட் உதவியும் வேண்டும். ஒரு ஒரு தடையமும் malicious pattern என்று சொல்லுவாங்க அதை வைத்து filter பண்ணி அந்த நபரை பிடிக்க முயற்சி செய்வாங்க.

    TOR networkல இருந்து கொண்டுவந்த போட்டோ, வீடியோவை social network தளங்களில் share செய்யும்போது 100% ஆபத்து உறுதி.

    அது எப்படி social networkingல அப்லோட் பண்ணிற தகவல் பிடிப்படுது ??
    இத பற்றி தனியா பார்க்கலாம். இப்போ கேள்விக்கு பதில் சொல்லுவோம்.

    Bootable OS + VPN + TOR உபயோகப்படுத்தினாலும், human error இருந்தா Unsafe. Customer எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் மாட்டிக்குவான்.

    வேற வழியே இல்லையா ?
    இருக்கு, ஆனா இங்க பொதுவெளியில் அதை சொல்லுறது ciriminalsக்கு உதவி பண்ணுறமாதிரி இருக்கும். அதுனால ஆபத்தில்லா வழியை சொல்ல வேண்டாம்னு நினைக்குறேன்.

    எதுவுமே சொல்லாம போனா நல்லா இருக்காது, அதுனால சின்னதா ஒரு தகவல் மட்டும் சொல்லுறேன்.

    TAILS OS :emo:

    - Cycle
     
    Last edited: Jan 22, 2020
  7. Cycle

    Cycle New Member

    அது எப்படி social networkingல அப்லோட் பண்ணுற தகவல் பிடிபடுது ??

    நாம அப்லோட் பண்ணுற தகவல்கள் அனைத்தும் hash செய்யப்பட்டு சேமித்துவைக்கப்படும். Hash/hashing என்பது ஒரு தகவலை 32 அல்லது 64 எழுத்துகளுக்குள் அடைப்பது. புரியுற மாதிரி சொல்லணும்னா இதுவும் கை ரேகை போலத்தான். எப்படி ஒரு ஒரு மனிதனோடு கை ரேகையும் மாறுபட்டு இருக்கிறதோ அது போல ஒரு ஒரு தகவளுக்கும் ஒரு ரேகை இருக்கு.

    எடுத்துக்காட்டு :
    "france" இந்த வார்தைக்கான ரேகை(hash) - 2c598436e5575a5769b69986014588d52c2698414b623e81b2e776766c30eaba

    "France" இந்த வார்தைக்கான ரேகை(hash) - 7a1ca4ef7515f7276bae7230545829c27810c9d9e98ab2c06066bee6270d5153

    ரெண்டும் ஒரே வார்த்தை தானே அப்புறம் எப்படி ரேகை மாறியிருக்கு ??
    France என்ற வார்த்தையில் முதல் எழுத்து மட்டுமே மாறியிருக்கு, ஒட்டு மொத்த ரேகையும் அப்படியே வேற வேற மாதிரி இருக்கு. இது தான் hashing, தகவல்களுக்கான ரேகை.

    இங்க தகவல்னு சொன்னது - எழுத்து வடிவ தகவல், போட்டோ, வீடியோ எல்லாம் சேர்ந்ததே.

    4 எழுத்து வார்த்தையாக இருந்தாலும் சரி, 4000 பக்கத்து வார்த்தைகளாக இருந்தாலும் சரி, hashing செய்தால் 64 எழுத்துகள் கொண்ட ரேகை தான் கிடைக்கும்.

    இப்போ facebook எடுத்துக்குவோம், கோடிக்கணக்கான போட்டோஸ், வீடியோஸ் ஏற்கனவே அப்லோட் பண்ணப்பட்டிருக்கு. இப்போ ஒரு குறிப்பிட்ட வீடியோகளை மட்டும் கண்டறிந்து ப்ளாக் செய்யவேண்டும் என்ற நிலை வந்தால், ப்ளாக் செய்யப்பட வேண்டிய வீடியோ, போட்டோ ரேகையை எடுப்பார்கள். அந்த ரேகை போல ஒத்து இருக்கும் ரேகைகளை அவர்களோட databaseல் தேடுவார்கள். நொடிப்பொழுதில் அனைத்து வீடியோவும், போட்டோவும் கண்டறிப்பட்டு உடனடியாக ப்ளாக் செய்யப்படும். கண்டிப்பாக ஒரு ஒரு போட்டோ, வீடியோவாக பார்த்து பார்த்து செய்யப்படுவது இல்லை.

    ஒருவேளை அந்த போட்டோ, வீடியோ அப்லோட் செய்யப்பட்ட நேரம், IP, அப்லோட் செய்த நபர் பற்றிய தகவல் அரசாங்கத்துக்கு தேவைப்பட்டால் எடுத்து கொடுப்பார்கள். இப்படியாக TOR network files ரேகைகளை கொண்டு facebookல் வேட்டை நடைபெறுகிறது.

    டேய் டேய் share பண்ணுறவன எல்லாம் புடிக்குறீங்க, அந்த போட்டோ எடுக்கறவன எப்படிடா புடிப்பீங்க ?
    அது இதை விட சுலபம், ஒரு ஒரு போட்டோவுக்கு பின்னால அதோட மொத்த ஜாதகமும் இருக்கும், அதை EXIF dataனு சொல்லுவாங்க. அந்த போட்டோ எடுத்த கேமரா பற்றிய தகவல், பூமியோட எந்த பகுதியில நின்னு எடுக்கப்பட்ட தகவல்(geo long, lat) போன்ற தகவலை வச்சு அந்த குறிப்பிட்ட நபரை சுலபமாக நெருங்கிவிட முடியும். இந்த போட்டோவுக்கு பின்னால இருக்கற ஜாதகம் சில software வச்சு தான் பார்க்க முடியுமோ தவிர போட்டோவில் எங்கயும் தெரியாது.

    அப்போ என்ன தான் பண்ணுறது ?
    சரி எது தப்பு எதுனு புரிஞ்சுக்குற பக்குவம் உனக்கும் எனக்கும் இருக்குனு நான் நம்புறேன். தவறான விசயம்னு தோணுறத செய்யாம இருந்தாலே எதுக்கும் கவலைப்படதேவை இல்லை.

    போட்டோ, வீடியோஸ்னா உடனே நம்ம ஆளுங்க நினைப்பு பார்ன் படங்கள் நோக்கி போய்விடும். அது மட்டுமில்லாமல் இன்னும் நிறைய இருக்கு.

    இந்த நாளில் TOR networkல் பரபரப்பாக பேசப்படும், தேடப்படும் செய்திகள் சிலவற்றை சொல்லுறேன்.
    1. Hong kong
    2. Brexit : UK vs EU
    3. Migrant Crisis in Germany
    4. Reason for economic issues in france

    மேல சொன்ன செய்திகள் பற்றிய ரேகைகள் இந்நேரம் தயாராக வைக்கப்பட்டிருக்கும். மேல பார்த்த செய்திகளில் சில நமக்கு சரினு தோணும், உடனே அதை 4 பேருக்கு சொல்லணும்னு facebookல பதிவு போட்டாலோ, போட்டோஸ் அப்லோட் பண்ணினாலோ, அந்த செய்தியின் வீரியம் பொறுத்து, சிறை கதவுகள் நமக்காக திறந்து வைக்கப்படும்.

    ரேகை எங்க போய் பாக்குறது ?
    https://xorbin.com/tools/sha256-hash-calculator

    - Cycle
     
  8. THIRAVIYAM

    THIRAVIYAM Member

    again nice info CYCLE bro expecting more posts from u regarding information technology!
     
  9. THIRAVIYAM

    THIRAVIYAM Member

    And another thread im expecting or having a doubt is why pirated sites like TAMILROCKERS cant b blocked despite everyone know itz a pirated one ? namma cybercrime aalunga avlo inefficient ah illa Tamilrockers karanga namalungala vida more efficient ah? how do they manage to upload movies even b4 one day of itz release?
     
  10. Cycle

    Cycle New Member

    நம்ம சைபர் கிரைம் ஆளுங்கனு நீங்க சொல்லுறது இந்தியன் சைபர் கிரைம் டிப்பார்ட்மெண்ட்னு எடுத்துக்குறேன். திறமையான ஆட்கள் இருக்காங்க, சில limitations அப்புறம் கட்டுப்பாடு, சட்டம் உட்பட்டு எல்லாமே சிறப்பா செஞ்சுட்டு இருக்காங்க. அவங்க திறமைல சந்தேகம் வேணாம்.

    பொதுவா ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தையோ, இயக்கத்தை பற்றியோ பொதுவெளியில பேசக்கூடாது, அதுக்கு காரணம், அவங்கள பற்றி நிறைய உள்நாட்டு வெளிநாட்டு சைபர் செக்யூரிட்டி நிறுவனங்கள் ரகசியமா தகவல் சேகரிச்சு வச்சிருக்காங்க. இங்க யாரும் social service பண்ண தயாரா இல்ல, அதுனால அந்த தகவலுக்கு ஈடான சில விஷயங்களை எதிர்பார்க்க்குறாங்க. அதுல தப்பு ஒன்னும் இல்லையே.

    தமிழ்ராக்கர்ஸ் பொழுதுபோக்கா ஆரம்பிச்சது இன்னைக்கு வேற மாதிரி மாறி நிக்குது. அது பெரிய network.

    டைரக்டர் சேரன் சரியான வழியில போய்கிட்டு இருந்தார், ஏனோ தெரியல அவரோட படத்த வீடு வீடா கொண்டு போய் சேர்க்கணும்னு இத கண்டுக்காம விட்டுட்டார். அந்த கால கட்டத்துல திறமையான ஒரு தொழில்நுட்ப குழு அவரை சந்திச்சு பேசுச்சு, அத பத்தின தகவல், இந்த வட்டாரத்துல அதிகமா பேசப்பட்டுச்சு. நாங்க நெனச்சோம், மிக பெரிய ஒரு செய்தி நியூஸ் பேப்பர்ல வரும்னு. அந்த குரூப்ல அவ்ளோ திறமையான ஆட்கள் இருந்தாங்க அதுனால தான் நாங்க அப்படி நம்பினோம்.

    இப்போதைக்கு சின்ன தகவல், cloudflare protection break பண்ணி சில தகவல் திருடப்பட்டுச்சு. FavIcon வச்சு cloudflare real IP எடுத்தா இன்னொரு ஆச்சர்யம் காத்துட்டு இருக்கு, எடுக்கவும் முடியும்.

    சாத்தான்களுக்குள்ள சண்டை போட்டுக்க கூடாதுனு ஒரு எழுதப்படாத விதி இருக்கு :Angel:. அதுனால தான் இன்னும் கடை திறந்து வச்சிருக்கான். கடவுளுளால் காப்பாத்த முடியாது, இனி சாத்தான் தான் காப்பாத்த முடியும்னு இந்த மனுஷங்க என்னைக்கு சாத்தானை தேடி வர்றாங்களோ அதுவரைக்கும் இது இப்படி தான் இருக்கும் hahaha.

    சாத்தான்களில் சில நல்ல சத்தான்களும் இருக்காங்க :drunk: Hahaha.

    - Cycle