• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Irrfan Khan

Administrator

Listen to the silence, See through the darkness
Staff member
Administrator
Joined
Jul 27, 2017
Messages
340
Points
43
:( very sad news... I love his acting and how he portrays all his character at his best. Sure we all gonna miss him. Its very soon for him to leave this life.
 

! The Reader !

RaVaNaN
Joined
Feb 23, 2019
Messages
636
Points
43
2003-ஆம் ஆண்டு வெளியான Shadows of Times
என்ற இந்திய-ஜெர்மனி கூட்டு தயாரிப்பில் வெளியான வங்காள மொழி திரைப்படம்...

அந்த படத்தை 2008 காலகட்டத்தில் ஒருமுறை தொலைக்காட்சியில் தற்செயலாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது...

அத்திரைப்படத்தில் வருகின்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்த ஒடிசலான முகம் கொண்ட அந்த நடிகரை பல விளம்பரப் படங்களில் அதற்கு முன்னால் பார்த்த நினைவு வந்தது...

ஆனால் அவர் நடித்த திரைப்படம் ஒன்றை பார்ப்பது அதுவே முதல்முறை...
விளம்பரப் படங்களில் மட்டும் பார்த்திருந்த அந்த நடிகரை திரைப்படத்தின் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்க்கும்போது அவர் சற்று வித்தியாசமான ஒரு தோற்ற த்தில் இருப்பது போல் மனதுக்கு தோன்றியது...
அதன்பிறகு...
ஸ்லம்டாக் மில்லியனர்...
பான் சிங் தோமர்...
லஞ்ச் பாக்ஸ்...
போன்ற மேலும் சில திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது...

ஒவ்வொரு திரைப்படத்திலும் முத்திரை பதிக்கும் விதத்தில், கதாபாத்திரத்துடன் இரண்டறக் கலந்து, பார்ப்பவர்களை இன்னொரு உலகத்துக்கு எடுத்துச்சொல்லும் இயல்பான நடிப்பு....

ஷேடோஸ் ஆஃப் டைமில் தனது மனைவியால் வஞ்சிக்கப்பட்டதாக குமுறும் ஒரு கணவனின் தத்ரூபமான குமுறல்கள்...

பான் சிங் டோமர் இல் உலகையே திரும்பிப் பார்த்த ஒரு தடகள வீரன் தனது வாழ்வில் ஏற்பட்ட அநீதிக்கு எதிராக கேள்வி கேட்க துணிந்ததால் தீவிரவாதியாக மாறும் சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டு, வாழ்க்கையின் தடம் புரண்ட...ஒரு விளையாட்டு வீரனை தத்ரூபமாக முன் நிறுத்திய நேர்த்தி...

லஞ்ச் பாக்ஸில் திருமணமாகாத நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு கதாபாத்திரம், கணவனால் அன்பு செலுத்தப்படாமல் ஒதுக்கப்படும் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைக்க, அந்த அறிமுகம் ஒரு புது உறவாக மலர வேண்டும் என்று ஆர்வம் கொள்ளும் ஒரு கதாபாத்திரமாக....

ஸ்லம்டாக் மில்லியனரில் ஒரு காவல்துறை அதிகாரியின் மிடுக்கோடு...

ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றும் திறமை கொண்ட வெகுசில கலைஞர்களில் ஒருவரான இர்பான் கான் என்ற அற்புதக் கலைஞர்....
ஓம் புரி...
நஸ்ருதீன் ஷா...
அம்ரிஷ் புரி...
நானா படேகர்...
அமீர்கான்...
நவாசுதீன் சித்திக்...
ராஜ்குமார் ராவ்...
போன்ற இந்தி திரைப்படக் கலைஞர்களின் வரிசையில் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வல்லமை பெற்ற ஒரு கலைஞர் இர்பான் கான்....

சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பத்மஸ்ரீ போன்ற ஏராளமான விருதுகள், அவற்றின் உண்மையான நோக்கங்களுடன் தன்னைத் தேடி வரும்படி செய்து கொண்ட கலைஞன்...

சொல்வதற்கு இன்னும் இன்னும் ஏராளமாக...
ஆனால்... 53 வயதிலேயே ஏன் இந்த அவசரம் என்று தெரியவில்லை...

I Really Hate 2020

When I First Time Saw Him @ 2012...
 
Top