• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Tribute To Che Guevara

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
219
Points
28
இலங்கையில் சேகுவேரா

கியூப வங்கியின் தலைவராகவும், தொழிற்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்த சேகுவேரா,
புதிய கியூபாவுடன் சர்வதேச நாடுகளின் ராஜதந்திர உறவுகளை பலப்படுத்தும் முகமாக பிடல் காஸ்ட்ரோவால் கியூபாவின் சர்வதேசப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டு இருந்தார். 1959 ஆகஸ்ட் 7 சேகுவேரா இலங்கை சென்றார்.
ரப்பர் பயிர் செய்யப்படும் முறைகள் பற்றி அறியும் நோக்கில் இலங்கையில் அவரது பயணம் இருந்தது.
ஆகஸ்ட் 08 கொரனையில் அமைந்துள்ள 1500 ஏக்கர் பரப்பளவிலான 'யஹல கலே' ரப்பர் தோட்டத்தை பார்வையிட சேகுவேரா சென்றார்.
அங்கிருந்த விருந்தினர் மாளிகையில் காலை உணவு வழங்கப்பட்டுள்ளன. வாழைப் பழங்களை சேகுவேரா அதிகம் விரும்பி உண்டிருக்கிறார்.
பின்னர் தோட்டத்தை பார்வையிடவும் தோட்ட ஊழியர்களுடன் உரையாடுவதிலும் சில மணி நேரங்களை செலவழித்த சேகுவேரா, ரப்பர் உற்பத்தி செய்யப்படும் முறையை மிக ஆர்வத்துடன் பார்வையிட்டுள்ளார். விடைபெறும் போது கியூபா சுருட்டுகள் அடங்கிய பெட்டியொன்றை அங்கிருந்த காவலாளி டிங்கிரி மஹத்தியாவுக்கு அன்பளிப்பாய் கொடுத்துள்ளார். சுருட்டு குடிப்பது குறித்து பின்னர் ஒரு முறை கேட்ட கேள்விக்கு, பனாமா சுருட்டைக் குடிப்பதால் எனக்குள்ள ஆஸ்துமா நோய் குறைந்திருப்பது போல உணர்கிறேன் என்றார். அதனாலேயே சுருட்டுடன் அதிகம் காணப்படுகிறார். தனது வருகையின் ஞாபகார்த்தமாக யஹல கலே எனும் அந்த ரப்பர் தோட்டத்தில் மகோகனி மரம் ஒன்றை நட்டார் சேகுவேரா. மகோகனி எனச் சொல்லப்படும் மரம் வீட்டின் நிலைக்கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றில் பயன்படுவதோடு கப்பல் கட்டும் பணியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இசைக்கருவிகள், பென்சில்கள் செய்யவும் அதிகளவில் பயன்படுத்தப்படும் மரமே மகோகனி.

1602267194188.png

When a lawmaker from Sri Lanka’s leftist Janatha Vimukthi Peramuna (JVP), or People’s Liberation Front, recently urged the government to protect a mahogany tree in Kalutara district south of Colombo, he, perhaps inadvertently, evoked memories of his party’s roots. Famous for its wooden furniture, the mahogany is one of the most popular trees in the southern part of the island. Except that this one, which the MP is trying to save, has rare history. It was planted by Cuban revolutionary Che Guevara on a visit to then Ceylon in 1959, months after he and his comrades captured power in the Caribbean island nation. Guevara was on a study tour of Asia to learn about rubber cultivation and sugar trade. He visited Sri Lanka en route to India. W.A. Dingiri Mahattaya, the caretaker and cook at the estate bungalow in Horana, 50 km south of Colombo, recalled in a 2006 media interview the visit of a “handsome, bearded, long-haired man” in military fatigues and smoking a cigar. He knew it was someone important, but learnt about him only after his visit. Guevara had a Sri Lankan breakfast of egg hoppers, lunu sambol (spicy side dish) and bananas before he proceeded to plant the tree, Mr. Mahattaya recounted. Guevara walked around the estate and spoke to workers, through an interpreter, about their production method. Gifting the caretaker a box of cigars, he promised to come back but did not.
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
219
Points
28
Che in India
India was among the first nations to recognize Cuba following the 1959 Cuban revolution. Following the revolution, Fidel Castro sent Ernesto "Che" Guevara to India on a two-week visit. Guevara arrived in New Delhi on 30 June 1959. He met with Indian Prime Minister Jawaharlal Nehru the next day.

1602267566982.png1602267641550.png1602267662027.png1602267678371.png1602267712666.png1602267736716.png1602267985937.png1602267772064.png1602268064899.png1602268105445.png

நேரு ஏற்கனவே எங்களுக்கு நன்கு பழக்கமானவர் போன்ற இனிய உணர்வுடன், ஓரு குடும்பத் தலைவனான தாத்தாவைப் போலவும், கியூப மக்களின் போராட்டங்களிலும், கவலைகளிலும், மேன்மைமிக்க ஆர்வத்துடன் எங்களை வரவேற்றார்.
எங்களுக்குச் சிறந்ததும், அசாதாரணமான அறிவுரைகளையும் வழங்கினார். எங்களுடைய கோரிக்கைகளுக்கு தம்முடைய நிபந்தனைகளற்ற ஆதரவை வழங்கினார்.

-1959 இந்தியா வந்த போது புரட்சியாளர் சே பேசியது.

(இப்போது அமெரிக்காவை நக்கிப் பிழைப்பது போல் நேரு வாழவில்லை)
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
219
Points
28
சே-பிடல் தோழமை

1602268617910.png1602268640723.png1602268707039.png1602268729014.png1602268748419.png1602268790314.png

சேகுவேராவின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை பிடல் காஸ்ட்ரோவிடம் சக போராளி தோழர்கள் வைத்தார்கள். சேவுக்கும் பிடல் மீது சில அதிருப்திகள் இருந்தது. சேவின் நடவடிக்கைகளால் எரிச்சல் அடைவதை போலவே சக தோழர்களோடு இருக்கும் போது காட்டிக்கொண்ட பிடல், திடீரென சேவுக்கு பதவி உயர்வு கொடுத்து கமாண்டன்ட் ஆக்கினார். சேவின் தொப்பியில் இருக்கும் ஒற்றை நட்சத்திரம் அதற்குப்பின் ஏறியது தான்.

இந்த இரண்டு நண்பர்களையும், அவர்களது தோழமை உணர்வுகளையும் யாராலும் புரிந்துகொள்ள முடிந்ததே இல்லை. அது அவர்கள் இருவருக்குமே பரிச்சயமான தோழமை.

தன்னுடைய தோழமையின் ஆழத்தை வெளிப்படுத்தவோ, எந்த ஜோடனையான வார்த்தைகளாலும் அவர்கள் வெளிப்படுத்தியதில்லை. ஆனால் காலத்தால் நிரூபித்துக்கொண்டே இருந்தனர். அவர்களிருவருக்கும் அவர்கள் யாரென தெரியும். யாருக்காக அவர்கள் தங்களை வெளிப்படுத்த வேண்டும்?

அந்த தோழமையின் இணைப்பு ஆழமான மார்க்சியக் கற்றலில் உருவானது. சே இறந்தபோது ஆர்ப்பாட்டமில்லாமல் அதை கியூபாவுக்கு தெரியப்படுத்தியதோடு, பிடல் - சே சகாப்தம் முடிந்தது என்று உலகமே எண்ணிக் கொண்டிருக்க, கிட்டத்தட்ட முப்பது வருடம் கழித்து சே புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து, எலும்புகளை கொண்டு வந்து கியூபாவில் நினைவுச் சின்னம் அமைத்தார் பிடல்.

இத்தனை ஆண்டு காலம் தன் தோழனின் சடலத்தைக் கைப்பற்ற அவர் எடுத்த முயற்சிகள் வார்த்தைகளால் வெளிப்பட்டதே இல்லை. அவரது உள்ளத்தில் சே என்ற புரட்சியாளர் குடியிருந்தார். அந்த தணல் தகித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

யதார்த்தவாதிகளின் நட்பு, பாசம், காதல், பரிவு, அழுகை,தோழமை என இவற்றை எந்த உலக இலக்கியத்திற்குள்ளும் அடக்கிவிட முடியாது.

மார்க்ஸ் - ஏங்கல்ஸ்
சே-பிடல் என்பதெல்லாம் பெயர்களல்ல.
தோழமைகளின் குறியீடு.
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
219
Points
28
சே- வரலாற்றுச் சுவடுகள்
1602268966066.png

1928- ஜூலை 14 எர்னெஸ்டோ சேகுவேரா பிறக்கிறார்
1945-மருத்துவப் படிப்பை மேற்கொள்கிறார்.
1950-மோட்டார் சைக்கிளில் மூவாயிரம் மைல் தூரம் வடக்கு அர்ஜெண்டினா முழுவதையும் சுற்றி வரும் பயணத்தை தொடங்குகிறார்
1952-தனது நண்பர் அல்பெர்த்தோ கிரானடாவுடன் பெரு, கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்கிறார். பெருவில் தொழுநோயாளிகளுக்கு பணிபுரிகிறார்கள்.
1953-ஜூன் 12 மருத்துவராகப் பட்டம் பெறுகிறார்.
1953-ஜூலை 6 லத்தீன் அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்கிறார்
1955- தோழர்.பிடல்காஸ்ட்ரோவை சந்திக்கிறார். கொரில்லாப் போராளிகளுக்கு பயிற்சி கொடுப்பவர்களுக்கு மருத்துவராக இணைந்து போராளியாகிறார். இங்கு தான் அவர் "சே" என அழைக்கப்படுவது தொடங்குகிறது.
1955-ஆகஸ்ட் 18 குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச் சேர்ந்த, தீவிர அரசியல் செயற்பாட்டாளர் ஹில்டா காடியாவை மணந்து கொள்கிறார்.
1956-பிப்ரவரி 15 முதல் குழந்தை ஹில்டா பீட்ரிஸ் குவேரா பிறக்கிறான்.
1955-ஜூலை 24 சே மற்றும் பிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைது செய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையிலிருக்கிறார்.
1958-கியூபப் புரட்சிப்படை சர்வாதிகாரி பாடிஸ்டாவின் படைகளை முறியடித்து முன்னேறுகிறது.
1958-டிசம்பர் 28 லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின் மீது போர் தொடுக்கிறார்.
1959-ஜூலை 1 சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடிவிடுகிறான். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.
1959-ஜூலை 2 பிடல் காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தால் நாடே ஸ்தம்பிக்கிறது.
1959-ஜூலை 3 ஹாவானாவை அடைந்து கபானா கோட்டையைக் கைப்பற்றுகிறார் சே.
1959-ஜூலை 8 பிடல் காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.
1959 மே 17 உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது.
1959- ஜூன் 2 சேவும் அலெய்டா மார்ச்சும் திருமணம் செய்கிறார்கள்.
1959-ஜூன் 12 வணிக மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் மேற்கொள்ள ஐரோப்பிய-ஆப்பிரிக்க- ஆசிய நாடுகளுக்கு நீண்ட பயணம் மேற்கொள்கிறார்
1959-அக்டோபர் 7 தொழிற்துறைக்கு தலைவராகிறார்.
1959-நவம்பர் 26 தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
1960 அக்டோபர் சோவியத் யூனியன், கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவேகியா,சீனா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இரண்டு மாத சுற்றுப்பயணம்
1960 நவம்பர் 24 சே-அலெய்டா முதல் குழந்தை அலெய்திதா பிறக்கிறாள்.
1961 ஜனவரி 3 அமெரிக்கா கியூபாவுடனான ராஜ்ய உறவுகளை முறித்துக் கொண்டது
1961 பிப் 23 சே அமைச்சராகி, தொழில்துறை அமைச்சகம் உருவாக்கப்படுகிறது.
1961 ஆகஸ்ட் 8 உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்கா நாடுகள் கருத்தரங்கில் கியூபாவின் பிரதிநிதியாகப் பங்கேற்று பேசுகிறார்
1962 மே 20 சே-அலெய்டாவுக்கு கமீலோ பிறக்கிறான்.
1962 ஆகஸ்ட் 27 சோவியத் பயணம்
1963 ஜூன் 14 சே-அலெய்டாவுக்கு சிலியா பிறக்கிறாள்.
1963 ஜூலை 8 பிரான்சிடமிருந்து விடுதலை பெற்ற அல்ஜீரியா நாட்டுக்கு சென்று அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்
1964 நவம்பர் 4 சோவியத் பயணம்
1964 டிசம்பர் 9 ஐ.நா.சபை, நியூயார்க், அல்ஜீரியா, மாரி, காங்கோ, கினியா, கானா, தான்ஸானியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு மூன்று மாத பயணம்.
1965 பிப்ரவரி 24 சே-அலெய்டாவுக்கு எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
1965 அக்டோபர் 31 காங்கோ புரட்சிப்படைக்கு பயிற்சி தர கியூபாவிலிருந்து விடைபெற்றுக் கொள்வதாக பிடலுக்கு கடிதம் எழுதுகிறார்.
1965 டிசம்பர் காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததால் ரகசியமாக கியூபா வருகிறார். பொலிவியா படையெடுப்புக்கு படை திரட்டுகிறார்
1966 நவம்பர் 4 மாறுவேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்
1967 மார்ச் 23 முதல் கொரில்லாத் தாக்குதலில் பொலிவிய இராணுவப் பிரிவை சிதறடிக்கிறார்
1967 ஏப்ரல் 16 ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக முக்கண்ட கருத்தரங்கில் சேவின் அறிக்கை வாசிக்கப்படுகிறது.
1967 ஆகஸ்ட் 4 சேவின் கொரில்லா படையை அழிக்க பொலிவிய இராணுவம் முன்னேறுகிறது
1967 செப்டம்பர் பொலிவிய இராணுவம் சேவின் கொரில்லாப் படையை சூழ்ந்தது.
1967 அக்டோபர் 8 சே உள்ளிட்ட எஞ்சியிருந்த 17 கொரில்லாப் போராளிகளை பொலிவிய இராணுவம் சூழ்ந்து கைது செய்கிறது.
1968 ஜூலை 1 காஸ்ட்ரோ முன்னுரையுடன் சே எழுதிய பொலிவிய நாட்குறிப்பு கியூபாவில் வெளியிப்படுகிறது.
1995 சே மற்றும் கொரில்லா வீரர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தை தேடும் பணி தொடங்கியது
1997 ஜூன் 28 பொலிவியாவின் வாலேகிராண்ட் அருகே கனடா தெ அர்ரோயாவில் சே உள்ளிட்ட கொரில்லா வீரர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
1997 ஜூலை 14 சடல எச்சங்கள் கியூபா வந்தடைந்தன.
1997 அக்டோபர் 13 ஹவானா புரட்சி சதுக்கத்தில் வீரநினைவு விழா நடத்தப்பட்டது.
1997 அக்டோபர் 14 சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்பட்டன.

"புரட்சியாளர்கள் கொல்லப்படலாம். தோற்கடிக்கப்படுவதில்லை"-சே.
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
219
Points
28
சே
இறப்பதற்கு சில
நிமிடங்கள் முன்பு..

1602269380248.png

1967 அக்டோபர் 8.... தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம். காலை 10.30... யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் 'சே' கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.

நண்பகல் 1.30... அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு 'சே'வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.

பிற்பகல் 3.30... காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ''நான்தான் 'சே'. நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்'' என்கிறார்.
மாலை 5.30... அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக 'சே'வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் 'சே' கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.
இரவு 7.00... 'சே பிடிபட்டார்' என சி.ஐ.ஏ&வுக்குத் தகவல் பறக்கிறது. அதே சமயம், 'சே' உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.

தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ''இது என்ன இடம்?'' என்று 'சே' கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ''பள்ளிக்கூடமா... ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?'' என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் 'சே'வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.

அக்டோபர் 9... அதிகாலை 6.00... லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.

கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் 'சே'வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது 'சே'தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக் கிறது. 'சே'வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் 'சே'வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் 'சே'வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.

காலை 10.00... 'சே'வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ&விடம் இருந்து தகவல் வருகிறது.

வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் 'சே'... 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.

காலை 11.00... 'சே'வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. 'மரியோ ஜேமி' என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப் பணியமர்த்தப்படுகிறார்.
நண்பகல் 1.00... கைகள் கட்டப்பட்ட நிலையில், 'சே'வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ''முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!'' என்பார் 'சே'. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார்.

தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு 'சே' கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார்.

''கோழையே, சுடு! நீ சுடுவது 'சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!'' இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!

மணி 1.10... மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.

வாழ்நாள் முழுவதும் கம்யூனிச லட்சியத்திற்காக போராடிய 'சே' இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது...
உலகெங்கும் அநீதிக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொருவர் நெஞ்சிலும் சே செங்கனலாய் கனன்று கொண்டிருக்கிறார்...

1602269419365.png1602269437053.png
 
Top