• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

VIKRAM - Teaser

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28

1604874897106.png

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா ஆத்திகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நான்கு கிராமங்களில் ஒன்றான மொச்சிகுளம் என்ற கிராமம் தான் நடிகர் கமலஹாசன் சொந்த ஊர்.

மொச்சிகுளத்துக்கும் பரமக்குடிக்கும் 20 கிலோமீட்டர் தான். அவர் அப்பா சீனிவாசன் வக்கீலாக இருந்ததால் பரமக்குடிக்கு குடியேறினார்கள்.

ஹாசன் என்பது மொச்சிகுளத்தில் வாழ்ந்த இஸ்லாமியக் குடும்பம் ஒன்றின் பெயர் என்றும், அந்தக் குடும்பத்தினர் கமல் குடும்பத்தோடு கொண்டிருந்த உறவால் வைக்கப்பட்ட பெயர் என்றும் கமல் ஒரு பேட்டியில் சொன்னார். ஆனால் கர்நாடகாவின் ஹசன் பகுதியிலிருந்து இங்கு வந்து குடியேறியதால் வந்த பெயர் என்ற கருத்தும் உண்டு.

கமலஹாசன் நற்பணி மன்றத்தில் படம் ரிலீசாகும் போது பரமக்குடியில் படப்பெட்டியோடு ஊர்வலம் நடத்தி பரமக்குடியில் உள்ள ஓம் சண்முகா, சாந்தி, ரவி, கிருஷ்ணா ஆகிய தியேட்டர்கள் படாதபாடு பட்ட காலமும் உண்டு.

கமலின் அப்பா வக்கீல் சீனிவாசன் ஊர்வலத்திற்கு வருவார். படப்பெட்டிக்கு பூசணிக்காய் சூடம் சுத்திப் போட்டுத்தான் முதல் ஷோ ஓடும்.

அப்போது கோசம்...

"கடவுளைக் கண்டவர் இல்லை
கமலை வென்றவர் இல்லை"

அப்போது சீனிவாசன் ரசிகர் மன்றத்துக்காரர்களிடம் சொல்வது ஒன்று தான்.
அவன் சம்பாதிக்கிறான்
நீங்க ஏன்டா இப்புடி வெட்டியா கத்துறீங்கன்னு சொல்வாரு.

பரமக்குடியில் துளசிராம் என்ற மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் இருந்தார். நல்ல மனிதர். அவர் அடிக்கடி சொல்வார். ரசிகர் மன்ற செயல்பாட்டில் இளைஞர்கள் இறங்குவது நல்லது தான். ஏனெனில் வீட்டை விட்டு வெளியே வந்து, அவர்களின் முதல் சமூகம் சார்ந்த செயல்பாடு அதுதான்.
அதுவே அரசியல் நுழைவின் முதற்படி என்பார். அதுவே உண்மையாகவும் ஆகிப்போனது.

கமல் சிறந்த கலைஞர். அதைத்தாண்டி அவரிடம் கற்க எதுவுமில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் கமல் சார். Nov 7th.

 
Top