1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.
  1. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN



    பாலகோட் இந்திய விமான தாக்குதல்: `எங்கள் பதிலடி வித்தியாசமாக இருக்கும், காத்திருங்கள்' - எச்சரிக்கும் பாகிஸ்தான்


    "எங்கள் பதிலடி வித்தியாசமாக இருக்கும். காத்திருங்கள்" என பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்தார்.

    இதனை அடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் மக்கள் தொடர்பு (ஐ.எஸ்.பி.ஆர்) இயக்குநர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபார் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

    அதில் பேசிய அவர், "நாங்கள் உங்களை (இந்தியா) திகைப்புக்கு உள்ளாக்குவோம். எங்கள் பதிலடிக்கு காத்திருங்கள். நாங்கள் ஆச்சரியப்படவில்லை. எங்கள் பதிலடி வேறு விதமாக இருக்கும். அதை நீங்களே பார்க்கப் போகிறீர்கள். ஆனால், எங்களுக்கு அமைதியின் மீது நம்பிக்கை உள்ளது" என்று கூறியுள்ளார்.

    "ஆனால், பாகிஸ்தான் இந்தத் தாக்குதலால் திகைத்துப் போய்விடவில்லை. தயாராகவே இருந்தோம். அதற்கு சரியாக பதிலடியும் கொடுத்தோம்" என்று அவர் தெரிவித்தார்.

    ஜப்பாவில் இந்தியா விமானப்படை தாக்கியதை ஒப்புக் கொண்ட அவர். அதே நேரம் இந்தியா கூறியது போல யாரும் உயிரிழக்கவில்லை என்றும் கூறி உள்ளார். நாங்கள் ஜனநாயகவாதிகள். நீங்கள் அவ்வாறானவர்கள் இல்லை என்று நிரூபித்துள்ளீர்கள் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

    ஊடுருவல் மூன்று இடங்களில் நடந்ததாகவும், ஆனால் அவை முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

    தயாராக இருங்கள்
    எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருக்கும்படி பிரதமர் (இம்ரான்கான்) தங்களை வலியுறுத்தியதாக அவர் கூறி உள்ளார்.


    "இந்திய ராணுவம் 21 நிமிடங்கள் தாக்குதல் நடத்தி 350 பயங்கரவாதிகளை கொன்றதாக கூறுகிறது. ஆனால், யாரும் மரணிக்கவில்லை. இந்தியாவின் கூற்று முற்றிலும் தவறானது" என்று அவர் கூறினார்.

    ராஜாங்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்த பதிலடி மும்முனைகளிலும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

    ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தி் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி இந்தியா வெளியிட்டுள்ள புகைப்படம், மூன்று ஆண்டுகளாக யு-டியூப்பில் உள்ளதாக அவர் கூறினார்.

    மேலும், இரவு நேரத்தில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பட்சத்தில், எப்படி அந்தப் படம் அவ்வளவு தெளிவாக இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    நேரமும், இடமும் முடிவு செய்யப்படும்
    முன்னதாக, இந்தியாவுக்கு பதிலடி தருவதற்கு நேரமும், இடமும் முடிவு செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

    இந்திய விமான படைகளுக்கு எதிராக சரியான நேரத்தில் எதிர்வினையாற்றிய பாகிஸ்தானிய விமானபடைக்கும் வாழ்த்து தெரிவித்து இருந்தார் இம்ரான்கான்.

    தாக்குதல்
    எல்லை கட்டுப்பாட்டு கோட்டில், அக்னூர், நவ்ஷேரா, கிருஷ்ணா காட்டி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் செல்களை வீசுவதாகவும், இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும் தூர்தர்ஷன் கூறுகிறது.

    Source: BBC News Tamil.
     
  2. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN






     
  3. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN









     
  4. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN



    one of my colleagues' Reference




     
  5. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN

    Wing Commander Abhinandan From Thambaram Chennai Tamilnadu, his father was a retired Air Marshal. He Studied in Thirupur Amaravathi Army School Tamilnadu. Native Kerala.

    [​IMG]

    [​IMG]

    விங் கமான்டர் அபிநந்தன் சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர்.
    இவருடைய தந்தை ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் ஆவார்.
    திருப்பூர் மாவட்டம் அமராவதிநகர் ராணுவ பள்ளியில் பயின்றவர்.
     
    Last edited: Feb 27, 2019
  6. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN










     
  7. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN







     
  8. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN





     
  9. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN



    [​IMG]
     
  10. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN



    அபிநந்தன் நாளை விடுதலை- பாகிஸ்தான்



    [​IMG]

    புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நேற்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் பதட்டம் நிலவியது. தமிழகத்தை சேர்ந்த இந்திய வான்படை பைலட் அபிநந்தன் பாகிஸ்தானில் ராணுவத்தால் பிடிக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்தியா இதற்காக இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் இந்திய வீரர் அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.


    Welcome Back Dear Commander Abhinav
    Thanx Pakistan


     
  11. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN



    யுத்தம் ஆரம்பித்தால் அதனை முடிவுக்கு கொண்டு வருவது கடினம், உலகின் அனைத்து போர்களும் தவறாகத்தான் கணிக்கப்பட்டுள்ளது- இம்ரான் கான்


    புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நேற்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இன்று காலை இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்திய எல்லைக்குள் புகுந்த இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்ப சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் இந்திய வான்படையை சேர்ந்த என்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குளாகி அதில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், "உலக வரலாற்றில் அனைத்து போர்களும் தவறாகவே கணிக்கப்பட்டுள்ளது, யுத்தத்தை ஆரம்பித்த பின் அதனை முடிவுக்கு கொண்டுவருவது கடினம். எனவே, ஆயுதங்களை வைத்திருக்கும் நாமும் அவ்வாறு தவறாக மதிப்பிடலாமா? ஒரு போர் நடந்தால், அது என் அல்லது நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டில் இருக்காது. பயங்கரவாதத்தை பற்றி எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்த நீங்கள் விரும்பினால், நாங்கள் தயாராக இருக்கிறோம். நாம் உட்கார்ந்து பேச வேண்டும்" என கூறியுள்ளார்.

     
  12. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN



    [​IMG]


    அமைதி நடவடிக்கையாக, இந்திய பைலட் அபிநந்தன், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

    ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடிய இந்த அறிவிப்பை, இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தானியர்களும் வரவேற்றதை, சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிந்தது.

    அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திற்குள் எந்த ஒரு எதிர்ப்பையும் எம்பிக்கள் தெரிவிக்கவில்லை. மாறாக, இம்ரான்கானின் இந்த அறிவிப்புக்கு, ஒட்டுமொத்தமாக மேஜையை தட்டி தங்கள் வரவேற்ப்பை தெரிவித்தனர்.

    இதன் மூலம் இந்தியாவுடனான மோதலை பாகிஸ்தான் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. பிரதமர் இம்ரான் கான், மட்டுமல்ல ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாடாளுமன்றமுமே, இந்தியாவுக்கு எதிரான மோதலை விரும்பவில்லை என்பதைத்தான், எம்பிக்களின் இந்த வரவேற்பை பார்க்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது.

    Gentlemans Agreement : ImranKhan Real Gentleman.
     
  13. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN















     
  14. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN




    Reasons For Com.Abhinav Release

    1. Geneva Convention
    2. Imrankhans Good Faith
    3. Modi Ji Request

    Apart From This Nothing Else.


     
  15. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN











    Happy Ending