• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

What do you think about? Islamophobia In India

Administrator

Listen to the silence, See through the darkness
Staff member
Administrator
Joined
Jul 27, 2017
Messages
348
Points
43
  • Thread starter
  • Admin
  • #1
There is a twitter trend going in india now.

Snap_Shot_00673.png

What do you think about this trend?
 
T

! The Reader !

Guest
ஐஐடி மெட்ராஸ் கல்வி வளாகத்தில் நிறுவனக் கொலை நடந்தது, 19 வயதான பாத்திமா லத்தீஃப் என்ற மானுடவியல் படிக்கும் மாணவி தற்கொலை செய்திருக்கிறார். அவர் மரணிப்பதற்கு முன்பாக தனது கைப்பேசியில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் தனது மரணத்திற்கு முழுக்க காரணம் தனது பேராசியர்கள்தான். அதிலும் குறிப்பாக சுதர்ஷன் பத்மநாபன் எனும் மானுடவியல் பேராசிரியர் தான் என்று எழுதியிருக்கிறார். மதத்தின் பெயரால் தனது பெயரை வைத்து பாகுபாடு காட்டியதன் பெயரில் தான் இந்த தற்கொலை நடந்திருக்கிறது. இது ஏதோ தனித்தனியாக எப்போதோ நடப்பதல்ல. முதல் முறையும் அல்ல. தொடர்ந்து உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

நிறைய மாணவர்கள் கல்வி வளாகங்களில் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்கான காரணம் அவர்கள் குறிப்பிட்ட சாதிய, மத,இன, மொழி பின்புலம் கொண்ட ஒரே காரணத்தில்தான். ஏன் நமது தேசத்தில் இது தொடர்ந்து நடக்கிறது..? உயர்சாதி ஆதிக்கம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் பரவி கிடக்கிறது. உயர்சாதி பிராமணர்கள் மட்டுமே உயர்கல்வி சார்ந்து படிக்கவும், உச்சபட்ச அதிகாரங்களில் பணி செய்யவும் வேண்டும், தாழ்ந்த சாதி மக்கள், சிறுபான்மையினர், தனித்த அடையாளங்களைக் கொண்ட தேசிய இனக்குழுக்கள் இவர்கள் யாருமே கல்வியிலும், அதிகாரத்திலும் மேல்நோக்கி வரக்கூடாதென திட்டமிட்டே வேலை நடைபெறுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகம், ஒடுக்கப்பட்ட தேசிய இனம் போன்றவற்றிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க மாணவர்கள் பல பாகுபாடுகளை சந்திக்கின்றனர். வைவா(VIVA), நேர்காணல்(Interview), மாணவர் சேர்க்கை(Admission) போன்ற தருணங்களில் நிறைய பாகுபாடு காட்டப்படுகிறது.

இதில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது என்னவெனில் இது ஒரு திட்டமிட்ட நிறுவனக் கொலை. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய வெறுப்பினால் (Islamophobia) தூண்டப்பட்ட ஒரு நிறுவனக் கொலை. மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்கள் தற்கொலையை நோக்கி தள்ளுகின்றன. இது ஒரு தெளிவான திட்டமிட்ட இஸ்லாமிய வெறுப்பு நிறுவனக் கொலை.

இந்தியாவில் 70 வருடங்களாக முஸ்லிம்கள் மன உளைச்சலில் தான் இருக்கிறார்கள். இந்தியாவில் முஸ்லிம்கள் மிக மோசமான பாதைகளை கடந்து வந்திருக்கின்றனர். பாபாரி மஸ்ஜித் தீர்ப்பு நம்மிடம் சொல்வது என்னவெனில் முஸ்லிம்கள் இந்தியாவில் இரண்டாம் தர குடிமக்கள் தான்.., உங்களுக்கு ஒன்றுமே இல்லை என்ற செய்தியைத்தான். கடந்த பத்து வருடங்களாக இஸ்லாமியர்களது வரலாறுகளை பாடத்திட்டங்களில் இருந்து நீக்கி வருகின்றனர். இதன் மூலம் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் வரலாறு இல்லை என்ற நிலையை உருவாக்குகின்றனர். ஒருபுறம் அந்தமான் நிக்கோபர் தீவின் விமான நிலையத்திற்கு சாவர்க்கரின் பெயரை சூட்டுவிட்டு மறுபுறம் கான் அப்துல் கபார்கான் கடைத்தெருவின் பெயரை மாற்றுகின்றனர். இவையெல்லாமே ஒரு நவீன வரலாற்று திருட்டைப் போல உள்ளது.
 
Joined
Aug 26, 2020
Messages
34
Points
18
அனைத்துக்கும் மதச்சாயம் பூசுவது கண்டிக்கதக்கதாகும்.... உண்மை நிலை அறியும் வரை எதையும் உறுதிப்படுத்த இயலாது
 
Top